என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மிலாடி நபி விழாக்குழு சார்பாக அய்யப்ப பக்தர்களுக்கு விருந்தளித்த இஸ்லாமிய சகோதரர்கள்
- மீலாடி நபி விழாக்குழு தலைவர் அஸ்லம் ரஹ்மான் ஷெரிப் தலைமை வகித்தார்.
- 300 அய்யப்ப பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மிலாடி நபி விழாக்குழு சார்பாக வருடா, வருடம் விநாயகர் சதுர்த்தி மற்றும் அய்யப்ப பூஜைக்கு சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக நேற்று இஸ்லாமிய சகோதரர்கள் அய்யப்பன் கோவில் பூஜைக்கு பொருட்களும், பக்தர்களுக்கு உணவு பரிமாறியும் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு மீலாடி நபி விழாக்குழு தலைவர் அஸ்லம் ரஹ்மான் ஷெரிப் தலைமை வகித்தார். முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கராமத், ரியாஸ், ஷப்பீர், அஸ்ரப், வாஜித், ஜாபர், ஜலீல் , ரிஸ்வான்,முனீர், அஸ்வத், மற்றும் நிஷாந்த், அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். 300 அய்யப்ப பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
Next Story






