என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க  மாநில அளவிலான தேர்வு போட்டிகள்
    X

    விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மாநில அளவிலான தேர்வு போட்டிகள்

    • மாநில அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
    • 14 வீராங்கனைகள் தேர்வு செய்தவற்கான தேர்வு போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிலும் நடைபெறுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள கூடைப்பந்து(ஆண், பெண்), கைப்பந்து (ஆண், பெண்), கால்பந்து (பெண்), ஆக்கி (ஆண்), கோ-கோ (பெண்) ஆகிய விளையாட்டுகளில் தமிழக அணி தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

    அதன்படி, வருகிற 13-ந் தேதி காலை 7 மணிக்கு கால்பந்து போட்டிக்கான 20 வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டி சென்னை ஜவகர்லால் நேரு

    ஸ்டேடியத்திலும், ஆக்கி போட்டிக்கான 18 வீரர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டி திருச்சி அறிஞர் அண்ணா ஸ்டேடியத்திலும், கோ-கோ போட்டிக்கு 15 வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வி பயிற்சி கல்லூரியிலும், கைப்பந்து போட்டி 14 வீரர்கள், 14 வீராங்கனைகள் தேர்வு செய்தவற்கான தேர்வு போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிலும் நடைபெறுகிறது.

    14-ந் தேதி காலை 7 மணிக்கு கூடைப்பந்து போட்டி 12 வீரர்கள், 12 வீராங்கனைகள் தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டி சென்னை நேரு உள் விளையாட்ட அரங்கிலும் நடைபெறுகிறது. இந்த மாநில அளவிலான தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு, வீரர், வீராங்கனைகள் 1.1.2004-க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஆதார் கார்டு, மேல்நிலைப்பள்ளி சான்றிதழ், 5 ஆண்டுகளுக்கு முன்னர் நகராட்சி அல்லது கிராம ஊராட்சி ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்ட பிறப்புச்சான்றிதழ், இந்த மூன்றில் ஏதேனும் இரண்டு சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும்.

    போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்கள் தவிர்க்க முடியாக காரணத்தால் வர முடியாத நிலையில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாநில தேர்வுப்போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு தினப்படி, பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×