என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தலைமையில் நடந்தது.
    • பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்ததிற்கான படிவங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கலையொட்டி பெறப்பட்ட மனுக்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தலைமையில் நடந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தேர்தல் ஆணையத்தால் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் ஷோபனா தலைமையில் நடந்தது.

    மாவட்ட தேர்தல் அலுவ லரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி முன்னிலை வகித்தார். சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2023ல் பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், களப்பணிகள் குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்ததிற்கான படிவங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    இது குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க, 1.1.2023ம் தேதியினை தகுதி நாளாகக்கொண்டு நவம்பர் 9-ந் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 8-ந் தேதி வரை 1880 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடந்தது.

    இச்சுருக்கமுறை திருத்தத்தில் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் குறித்து மொத்தம் 75,824 படிவங்கள் பெறப்பட்டுள்ளது.

    இதில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு, வருகிற 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

    மேலும், பெறப்பட்ட படிவங்கள் இறுதி செய்யப்பட்டு, பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் ஜெய்சங்கர் மற்றும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் கலந்துகொண்டனர்.

    • ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
    • 173 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.

    கிருஷ்ணகிரி,

    அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு எழுதுபவர்களில், தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மேல்படிப்பு உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 50 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    அதன்படி, இவ்வாண்டிற்கான தேர்வு நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாகலூர் அ ரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சூளகிரி அ ரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, வேப்பனபள்ளி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, காவேரி ப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி,

    நாகரசம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, தேன்கனி க்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி, கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, தளி அரசு மேல்நிலைப்பள்ளி,

    போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி, சிங்கார ப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி, அஞ்சூர்- ஜெகதேவி அரசு மேல்நி லைப்பள்ளி, மத்தூர் அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 17 மையங்களில் நடந்தது.

    இந்த தேர்வினை எழுத 4826 பேர் விண்ணப்பித்திருந்தனர். 4663 பேர் தேர்வினை எழுதினர். 173 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.

    இந்த தேர்வினை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையில் கண்காணிப்பு அலுவலர்களாக மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை) ஓசூர் கோவிந்தன், கிருஷ்ணகிரி மணிமேகலை, மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) ஓசூர் முனிராஜீ, கிருஷ்ணகிரி ஆனந்தன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) முனிமாதன் ஆகியோர் செயல்பட்டனர்.கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை முதன்மை கண்கா ணிப்பாளர் ரோகிணி மற்றும் துறை அலுவலர்கள் சரவணன், துரைசங்கர் மற்றும் ஆசிரியர்கள் கண்காணித்தனர். 

    • கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
    • பொறியாளர்கள், அலுவலர்கள் உள்பட, 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் நேற்று தேசிய எரிசக்தி பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், மின்சிக்கன வார விழாவினையட்டி, தேசிய எரிசக்தி பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து தொடக்கி வைத்தார். தமிழ்நாடு மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு பேரணியானது புதிய பஸ் ஸ்டாண்டில் தொடங்கி, ராயக்கோட்டை சாலை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வழியாக மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை அடைந்தது. மின்வாரிய செயற்பொறியாளர்கள் முத்துசாமி, கிருபானந்தம், இந்திரா, நிரஞ்சனா, உதவி இயக்குனர்கள் கந்தசாமி, தாசில்தார் சம்பத் மற்றும் பொறியாளர்கள், அலுவலர்கள் உள்பட, 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    • போலீசாரை கேலி, கிண்டல் செய்தும் வீடியோ க்களை வெளியிட்டார்.
    • 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெரு கொத்தபேட்டா காலனியை சேர்ந்தவர் அசோக் (வயது 22). பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் அசோக் மீது மகாராஜகடை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் கடந்த 11-ந் தேதி பழையபேட்டை லட்சுமி நாராயணன் கோவில் அருகே வினோத்குமார் (24) என்பவரிடம் அசோக் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தகராறு செய்து தாக்கியுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து வினோத்குமார் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அசோக்கை போலீசார் தேடி வந்த நிலையில் அசோக் சமூக வலைத்தளங்களில் புகைப்பிடிப்பது, நானும் ரவுடி தான் என என்று மிரட்டுவது, துப்பாக்கியை இடுப்பில் சொருகி இருப்பது போன்று வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

    மேலும் அரசு பஸ்சை தீ வைத்து கொளுத்துவேன் எனவும், போலீசாரை கேலி, கிண்டல் செய்தும் வீடியோ க்களை வெளியிட்டார்.

    இதையடுத்து கிருஷ்ண கிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் அசோக்கை கைது செய்தனர். பின்னர் அவரை, காவல் நிலையத்தில் உட்கார வைத்து, இனிமேல் இதுபோல் தவறு செய்யமாட்டேன் என பேச வைத்து அந்த வீடியோவையும் போலீசார் பதிவு செய்தனர்.

    இதனிடையே கைது செய்யப்பட்ட அசோக்கை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த அசோக் திடீரென அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் போலீசார் அசோக்கை தேடி வந்தனர். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மலைப்பகுதியில் அசோக் தனது நண்பர்களுடன் பதுங்கி இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து சென்று அசோக் மற்றும் அவரது நண்பர்கள் பழையபேட்டை பெங்காலி தெருவை சேர்ந்த மின்சார கண்ணன் (22), அரவிந்தன் (25), கொத்தபேட்டா காலனியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (24), ஜெய்கபிலன் (22), மகாதேவன்(22) மற்றும் 16 வயது பள்ளி மாணவன் ஆகிய 6 பேரையும் வளைத்து பிடித்தனர்.

    அப்போது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அசோக், போலீசார் என்னை அவமானப்படுத்தி விட்டனர். அதனால் பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு நாம் யார் என்று போலீசுக்கு காட்ட வேண்டும்? என திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து அசோக் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.4 லட்சம் ரூபாயுடன் வங்கியில் இருந்து வெளியேறினார்.
    • 4 பேர் ஸ்கூட்டர் அருகில் நின்று சீட்டை உடைத்து பணத்தை திருடி சென்றது பதிவாகி இருந்தது.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த சந்தாபுரத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது57). விறகு கடை வைத்துள்ளார்.

    இவர் வியாபார அபிவிருத்திக்காக, நேற்று கொசமேடு பகுதியில் இயங்கும் ஒரு தனியார் வங்கியில் தன் நகைகளை அடமானம் வைத்து, ரூ 2.5 லட்சம் ரூபாய், தன் சேமிப்புக் கணக்கில் இருந்த ரூ 1.5 லட்சம் ரூபாய் என மொத்தம், ரூ.4 லட்சம் ரூபாயுடன் வங்கியில் இருந்து வெளியேறினார்.

    பணத்தை பத்திரமாக ஸ்கூட்டரின் இருக்கையின் கீழ் வைத்து பூட்டிய அவர் அப்பகுதியிலுள்ள கடையில் டீ குடிப்பதற்காக சென்றார். திரும்பி வந்த சாந்தி ஸ்கூட்டர் சீட் உடைக்கப்பட்டு, பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதி சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது சுமார் 25 முதல் 35 வயது மதிக்கத்தக்க 4 பேர் ஸ்கூட்டர் அருகில் நின்று சீட்டை உடைத்து பணத்தை திருடி சென்றது பதிவாகி இருந்தது.

    அதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    • அசோக்கை உடனடியாக கைது செய்யுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார்.
    • அச்சுறுத்தும் வகையில் பேசமாட்டேன் என அசோக்கை கதற வைத்து போலீசார் அந்த வீடியோவை பதிவு செய்து வெளியிட்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது 19). இவர் மீது மகாராஜகடை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி அன்று பழையபேட்டை லட்சுமி நாராயணன் கோவில் அருகே சென்ற போது அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் (24) என்பவரை அசோக் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

    இதுகுறித்து, வினோத்குமார் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகாரளித்தார். இந்நிலையில் அசோக் சமூக வலைதளங்களில் கஞ்சா புகைப்பது, நானும் ரவுடிதான் என பஞ்ச் வசனம் பேசி காட்டுவது, போலீசாரை மிரட்டுவது போன்ற காட்சிகளை வெளியிட்டதுடன் அரசு பஸ்சை தீ வைத்து கொளுத்துவேன் எனவும் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

    இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து அசோக்கை உடனடியாக கைது செய்யுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் பழையபேட்டை பகுதியில் பதுங்கியிருந்த அசோக்கை கைது செய்தார்.

    அவரை உரிய முறையில் கவனித்த போலீசார் இனிமேல் இதுபோல் தவறு செய்யமாட்டேன். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசமாட்டேன் என அசோக்கை கதற வைத்து அந்த வீடியோவையும் பதிவு செய்து வெளியிட்டனர்.

    முதல் நாளில் பந்தாவாக போலீசை சீண்டி பதிவு வெளியிட்டவர் தற்போது போலீசாரின் கவனிப்புக்கு பிறகு கதறல் வீடியோ வெளியிட்டது, கிருஷ்ணகிரியில் ரவுடியிசம் செய்யும் ஆசாமிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. 

    • வீட்டை விட்டு வெளியே சென்ற சுரேகா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
    • சந்தோஷ்குமார் என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக ராமமூர்த்தி சூளகிரி போலீசில் புகார் செய்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி.இவரது மனைவி சுரேகா (வயது 21).

    கடந்த 12- ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சுரேகா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    சுரேகா பற்றி பல்வேறு இடங்களில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் திம்மண்ணப ள்ளிப்பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக ராமமூர்த்தி சூளகிரி போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சுரேகாவையும், அவரை கடத்தியதாக கூறப்படும் சந்தோஷ்குமாரையும் தேடி வருகின்றனர்.

    • தளி பகுதியில் மஞ்சுநாத் (46) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
    • 9ஆயிரத்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா விற்றவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.10,000 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    திம்மாபுரம் பகுதியில் மாரியப்பன் (வயது 23), ஓசூரில் மூர்த்தி (21), காவேரிபட்டணத்தில் வசந்த் (34), பேரிகையில் ஹ்ரீஷீத்தப்பா (45), பர்கூரில் வளர்மதி (50), தளி பகுதியில் மஞ்சுநாத் (46) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல ராயக்கோட்டை பகுதியில் கோபிநாத் (46), தேன்கனிக்கோட்டை பகுதியில் செந்தில் (48), கெலமங்கலம் பகுதியில் முரளி (21), கல்லாவி பகுதியில் சார்லஸ் (23) ஆகியோரையும் கைது செய்தனர்.

    இவர்களிடமிருந்து ரூ.10.000 மதிப்பிலான 9ஆயிரத்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • இதை பயன்படுத்துவதால் பயிர்கள் மற்றும் செடிகளுக்கு நோய்கள் தாக்காது.
    • எதிர்கொல்லிகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கிருஷ்ணகிரி,

    பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் பேராசிரியர் பரசுராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் விதைகள், செடிகள் மற்றும் உயிர் உரங்கள் விற்பனைக்கு உள்ளது. நெல்விதை பையூர்-1 (ரூ.40-கிலோ), ராகி விதை பையூர்-2 (ரூ.52-கிலோ), முருங்கை விதை பிகேஎம்-1(ரூ.3000-கிலோ), காய்கறி தோட்டத்திற்கு தேவையான காய்கறி விதைகள் பாகற்காய் (கோ1), புடலை (பாலூர் 1 மற்றும் பாலூர் 2), மற்றும் பீர்க்கங்காய் (பிகேஎம்1), மா ஒட்டு செடிகள் அனைத்து ரகங்களும் (ரூ.40-செடி) கிடைக்கும்.

    காய்கறி தோட்டத்திற்கு தேவையான ஒட்டு கத்திரி செடிகள் விவசாயிகள் விரும்பிய ரகங்களுக்கு ஒட்டுகட்டி (ரூ.8-செடி) தரமான ஒட்டு நாற்றுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான அழகு தாவரங்கள், மூலிகை செடிகள் மற்றும் பழ வகை செடிகளான ஒட்டு செடிகள் (மாதுளை, நெல்லி மற்றும் கொய்யா) இங்கு கிடைக்கும்.

    மேலும், உயிர் எதிர்கொல்லிகளான பேசில்லஸ் சப்டிலிஸ் (ரூ.168-கிலோ) மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி (ரூ.168-கிலோ) கிடைக்கும். இதை பயன்படுத்துவதால் பயிர்கள் மற்றும் செடிகளுக்கு நோய்கள் தாக்காது. மேலும், இயற்கை உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் (ரூ.60-கிலோ), பாஸ்போபாக்டீரியா (ரூ.60-கிலோ), ரைசோபியம் (ரூ.60-கிலோ), வேம் (ரூ.60-கிலோ), தென்னை டானிக் (ரூ.325-லிட்டர்), மண்புழு உரம் (ரூ.10-கிலோ), மற்றும் விவசாயிகள் மண்புழு உரம் தயாரிப்பதற்கு தேவயை£ன மண்புழு (ரூ.375-கிலோ) கிடைக்கும்.

    மேற்கூறிய விதைகள், செடிகள், உயிர் உரங்கள் மற்றும் உயிர் எதிர்கொல்லிகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 55 மாணவர்களில், 27 பேர் தோல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டனர்.
    • மருத்துவகுழுவினர் மாணவர்களை பரிசோதித்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    மகராஜடை அடுத்த தாசினாவூரில் அரசினர் பிற்படுத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விடுதி உள்ளது. இதில் தங்கி கல்வி படிககும் 55 மாணவர்களில், 27 பேர் தோல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டனர்.

    இது குறித்து தகவலறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் உடனடியாக விடுதியில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்த ுவர்கள்,வெங்கடேஷ், கோவிந்தராஜ், மருந்தாளுனர் தவுலத், கிராம சுகாதார செவிலியர் கீதா அடங்கிய மருத்துவகுழுவினர் மாணவர்களை பரிசோதித்தனர்.

    இதில், மாணவர்களுக்கு தோல் தொடர்பாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. 

    • சரவணன், மாதேஷ் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்
    • சீட்டு கட்டுகள் ,ரூ.9,100 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் போலீசார் புனுகாண்டியூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த சபரி(வயது 35), அப்பு (38), மதி (31), சக்தி (37), கோவிந்தராஜ், புகழ், சரவணன், மாதேஷ் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் ,ரூ.9,100 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இவர்களில் அப்பு,மதி,சக்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    • நித்யஸ்ரீ பள்ளிக்கு செல்லவில்லை.வீட்டுக்கும் திரும்பவில்லை.
    • 2 மாணவிகளும் ஒன்றாக சென்றுள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பாகலூர் பகுதியை சேர்ந்தவர்கோபி.

    இவரது மகள் நித்யஸ்ரீ (வயது 16).இவர் அதேபகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

    நேற்று பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு புறப்பட்ட நித்யஸ்ரீ பள்ளிக்கு செல்லவில்லை.வீட்டுக்கும் திரும்பவில்லை. அவர் பற்றி விசாரித்தும் எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து ஓசூர் டவுன் போலீசில் கோபி புகார் செய்துள்ளார்.

    இந்நிலையில் அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் ஆவணப்பள்ளி பகுதியை சேர்ந்த முரளி என்பவரது மகள் பவ்யா (16) என்ற மாணவியும் நேற்று முதல் மாயமாகி விட்டார்.இது குறித்து முரளி ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்துள்ளார்.

    இந்த இரு புகார்கள் மீதும் வழக்கு பதிந்துள்ள போலீசார் மாயமான 2 மாணவிகளும் ஒன்றாக சென்றுள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×