என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் கஞ்சா விற்ற 10 பேர் கைது
- தளி பகுதியில் மஞ்சுநாத் (46) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
- 9ஆயிரத்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா விற்றவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.10,000 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திம்மாபுரம் பகுதியில் மாரியப்பன் (வயது 23), ஓசூரில் மூர்த்தி (21), காவேரிபட்டணத்தில் வசந்த் (34), பேரிகையில் ஹ்ரீஷீத்தப்பா (45), பர்கூரில் வளர்மதி (50), தளி பகுதியில் மஞ்சுநாத் (46) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல ராயக்கோட்டை பகுதியில் கோபிநாத் (46), தேன்கனிக்கோட்டை பகுதியில் செந்தில் (48), கெலமங்கலம் பகுதியில் முரளி (21), கல்லாவி பகுதியில் சார்லஸ் (23) ஆகியோரையும் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து ரூ.10.000 மதிப்பிலான 9ஆயிரத்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story






