என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊரகத்திறனாய்வு தேர்வு"

    • ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
    • 173 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.

    கிருஷ்ணகிரி,

    அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு எழுதுபவர்களில், தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மேல்படிப்பு உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 50 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    அதன்படி, இவ்வாண்டிற்கான தேர்வு நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாகலூர் அ ரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சூளகிரி அ ரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, வேப்பனபள்ளி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, காவேரி ப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி,

    நாகரசம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, தேன்கனி க்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி, கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, தளி அரசு மேல்நிலைப்பள்ளி,

    போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி, சிங்கார ப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி, அஞ்சூர்- ஜெகதேவி அரசு மேல்நி லைப்பள்ளி, மத்தூர் அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 17 மையங்களில் நடந்தது.

    இந்த தேர்வினை எழுத 4826 பேர் விண்ணப்பித்திருந்தனர். 4663 பேர் தேர்வினை எழுதினர். 173 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.

    இந்த தேர்வினை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையில் கண்காணிப்பு அலுவலர்களாக மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை) ஓசூர் கோவிந்தன், கிருஷ்ணகிரி மணிமேகலை, மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) ஓசூர் முனிராஜீ, கிருஷ்ணகிரி ஆனந்தன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) முனிமாதன் ஆகியோர் செயல்பட்டனர்.கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை முதன்மை கண்கா ணிப்பாளர் ரோகிணி மற்றும் துறை அலுவலர்கள் சரவணன், துரைசங்கர் மற்றும் ஆசிரியர்கள் கண்காணித்தனர். 

    ×