என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பட்டணத்தில் பெண்ணிடம்   ரூ.4 லட்சம் அபேஸ்
    X

    காவேரிப்பட்டணத்தில் பெண்ணிடம் ரூ.4 லட்சம் அபேஸ்

    • ரூ.4 லட்சம் ரூபாயுடன் வங்கியில் இருந்து வெளியேறினார்.
    • 4 பேர் ஸ்கூட்டர் அருகில் நின்று சீட்டை உடைத்து பணத்தை திருடி சென்றது பதிவாகி இருந்தது.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த சந்தாபுரத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது57). விறகு கடை வைத்துள்ளார்.

    இவர் வியாபார அபிவிருத்திக்காக, நேற்று கொசமேடு பகுதியில் இயங்கும் ஒரு தனியார் வங்கியில் தன் நகைகளை அடமானம் வைத்து, ரூ 2.5 லட்சம் ரூபாய், தன் சேமிப்புக் கணக்கில் இருந்த ரூ 1.5 லட்சம் ரூபாய் என மொத்தம், ரூ.4 லட்சம் ரூபாயுடன் வங்கியில் இருந்து வெளியேறினார்.

    பணத்தை பத்திரமாக ஸ்கூட்டரின் இருக்கையின் கீழ் வைத்து பூட்டிய அவர் அப்பகுதியிலுள்ள கடையில் டீ குடிப்பதற்காக சென்றார். திரும்பி வந்த சாந்தி ஸ்கூட்டர் சீட் உடைக்கப்பட்டு, பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதி சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது சுமார் 25 முதல் 35 வயது மதிக்கத்தக்க 4 பேர் ஸ்கூட்டர் அருகில் நின்று சீட்டை உடைத்து பணத்தை திருடி சென்றது பதிவாகி இருந்தது.

    அதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×