என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கே.ஜி.எப். சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • மது பாட்டில்களும் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரிஜா ராணி, சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி குமார் மற்றும் போலீசார் நேரலகிரி சோதனை சாவடியில் கே.ஜி.எப். சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கர்நாடகாவில் இருந்து ஒருவர் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். போலீசார் அந்த மோட்டார்சைக்கிளை நிறுத்தி அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

    இதில் அந்த பைக்குள் கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் மொத்தம் 333 இருந்தது தெரிய வந்தது- மேலும் மேலும் 2 மது பாட்டில்களும் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் தேவா (வயது 28) என்றும், கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சிக்காரிமேட்டையைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாக்கெட்டுகள், மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சிக்காரிமேட்டைச் சேர்ந்த சுந்தர்மணி (26) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • டிரைவர் பழனிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் பஸ் தாறுமாறாக சாலையில் ஓடியது.
    • சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மத்தூர்,

    கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    இந்த பஸ்சை திருவண்ணாமலை மாவட்டம், தேக்கம்பாடி பகுதியை சேர்ந்த பழனி (வயது56) என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக செங்கம் முடியனூர் பகுதியை சேர்ந்த சிவக்கு மார் என்பவர் இருந்தார்.

    இந்த நிலையில் இந்த பஸ் இன்றுகாலை 6.30 மணி அளவில் மத்தூர் பேருந்து நிலையம் அருகில் வந்தது.

    அப்போது திடீரென டிரைவர் பழனிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் பஸ் தாறுமாறாக சாலையில் ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.

    இதனை கவனித்த அருகில் இருந்த நடத்துனர் எழுந்து பிரேக் போட்டு பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் சாலையோரம் வலதுபக்கம் நிறுத்தி இருந்த 5 மோட்டார் சைக்கிள் மீது மோதி பஸ் இழுத்து சென்றது.

    அப்போது அந்த வழியாக டீ அருந்த சைக்கிளில் வந்த மத்தூர் நாகம்பட்டியை சேர்ந்த கமலநாதன் என்பவர் மீதும் அரசு பஸ் மோதி தரதரவென பஸ் இழுத்து சென்றது. ஒரு வழியாக பஸ்சை நடத்துனர் சிவக்குமார் பிரேக் போட்டு நிறுத்தினார்.

    இந்த விபத்தால் பஸ்சின் அடியில் சக்கரத்தில் சிக்கி கமலநாதன் உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பஸ்சில் மயங்கிய நிலையில் இருந்த பழனியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு மருத்து வர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    விபத்தில் இறந்த கூலித்தொழிலாளி கமலநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் சிக்கிய அரசு பஸ்சை கிரேன் மூலம் அகற்றினர்.

    இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்று அதிகாலை 6 வாகனங்கள் மீது அரசு பஸ் அடுத்தடுத்து மோதிய சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள பெரிய ஜோதிபட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது47), அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஸ் (50). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை போச்சம்பள்ளிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்தேரிபட்டி என்ற இடத்தில் வந்த போது எதிரெ வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மாதேஸ், வெங்கடேஸ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் நிறுவனர் மணி தங்க நாணயங்களை வழங்கி சிறப்பித்தார்.
    • பள்ளியின் முதல்வர் ஹரிநாத் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் நிறுவனர் மணி தங்க நாணயங்களை வழங்கி சிறப்பித்தார்.

    பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளான ஜீவன், ஹர்ஷிதா, லத்திகாஸ்ரீ, தீபக், யாஷிகா, தர்ஷினி, மோகன்ராம் ஆகிய மாணவ, மாணவிகள் திருப்புதல் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தங்க நாணயங்களை பரிசாக பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் நிறுவனர் மணி, தாளாளர் கிருஷ்ணவேணி மணி, செயலாளர் டாக்டர் சந்தோஷ், இயக்குனர் உஷா சந்தோஷ், பள்ளியின் முதல்வர் ஹரிநாத் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினார்கள்.

    • சாலையோரம் வலதுபக்கம் நிறுத்தி இருந்த 5 மோட்டார் சைக்கிள் மீது மோதி பஸ் இழுத்து சென்றது.
    • விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    இந்த பஸ்சை திருவண்ணாமலை மாவட்டம், தேக்கம்பாடி பகுதியை சேர்ந்த பழனி (வயது56) என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக செங்கம் முடியனூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் இருந்தார்.

    இந்த நிலையில் இந்த பஸ் இன்றுகாலை 6.30 மணி அளவில் மத்தூர் பேருந்து நிலையம் அருகில் வந்தது.

    அப்போது திடீரென டிரைவர் பழனிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் பஸ் தாறுமாறாக சாலையில் ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.

    இதனை கவனித்த அருகில் இருந்த நடத்துனர் எழுந்து பிரேக் போட்டு பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் சாலையோரம் வலதுபக்கம் நிறுத்தி இருந்த 5 மோட்டார் சைக்கிள் மீது மோதி பஸ் இழுத்து சென்றது.

    அப்போது அந்த வழியாக டீ அருந்த சைக்கிளில் வந்த மத்தூர் நாகம்பட்டியை சேர்ந்த கமலநாதன் என்பவர் மீதும் அரசு பஸ் மோதி தரதரவென பஸ் இழுத்து சென்றது.

    இந்த விபத்தால் பஸ்சின் அடியில் சக்கரத்தில் சிக்கி கமலநாதன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள பெரிய ஜோதிபட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது47), அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஸ் (50). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை போச்சம்பள்ளிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்தேரிபட்டி என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மாதேஸ், வெங்கடேஸ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • நர்சிங் கல்லூரியை சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    ஓசூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், நேற்று உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதில்,செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் நர்சிங் கல்லூரியை சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த விழிப்புணர்வு பேரணியானது, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடங்கி ஓசூர் சீதாராம் நகர் வரை சென்று அங்கு நிறைவடைந்தது.

    பேரணியில், மாணவர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு முழக்கங்களுடன் சென்றனர். இந்த பேரணியை ஓசூர் அட்கோ போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பால சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மருத்துவக் கல்லூரி முதன்மை அலுவலர் டாக்டர் கார்த்திக், மருத்துவ அலுவலர் டாக்டர் பார்வதி, தேவசேனா, செயல் அலுவலர் விஜயராகவன், மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் மற்றும், செயின்ட் பீட்டர்ஸ் நர்சிங் கல்லூரி பயிற்றுனர்கள் வீனா,விஷ்ணு குமாரி மற்றும் நர்சுகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.சார்பில், ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • முனுசாமி எம்.எல்.ஏ, மற்றும் நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை எம்.பி. ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

    ஓசூர்,

    தமிழ்நாட்டில் மின்கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில், ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ, மற்றும் நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை எம்.பி. ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

    ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கினார்.

    மாவட்ட அவைத்தலைவர் சிபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.சி.வி.ராஜேந்திரன் மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கிழக்கு பகுதி செயலாளர் ராஜி வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து, தம்பிதுரை எம்.பி.பேசியதாவது:- திராவிட இயக்கத்தை உருவாக்கிய பெரியார், அண்ணா மற்றும் அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் குடும்பத்திலிருந்து வாரிசு என்று யாரும் கிடையாது.

    அவர்களுக்கு நாம் தான் வாரிசுகள்.உதயநிதியை அடுத்த முதல்வர் ஆக்குவதற்காக, இப்போது அவரை அமைச்சராக்கி மு. க. ஸ்டாலின் பட்டாபிஷேகம் செய்து விட்டார்.

    தி.மு.க.வின் குடும்ப அரசியலுக்கு, தமிழக மக்கள் முடிவு கட்ட வேண்டும். குடும்ப அரசியலையும், ஊழலையும் ஒழிக்க வேண்டும். இதனால் தான் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது.நீட் தேர்வை கொண்டுவந்ததே தி.மு.க.வும், காங்கிரசும்தான். ஆனால் இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும்". இவ்வாறு அவர் ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

    தொடர்ந்து தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இதில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட துணை செயலாளர் மதன், மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் நாராயணன், கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் நடராஜன் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில்தெற்கு பகுதி செயலாளர் பி.ஆர். வாசுதேவன் நன்றி கூறினார்.

    • மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி விழாவில் பேசினார்.
    • கட்சி நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    ஒசூர் மூக்கண்டப்பள்ளி மாநகராட்சி தொடக்க ப்பள்ளியில் தி.மு.க.வின் முன்னாள் பொது ச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி ஒசூர் மாநகராட்சி மேயரும், மாநகர தி.மு.க. செயலாளருமான எஸ்.ஏ.சத்யா, மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி விழாவில் பேசினார்.

    இதில், தலைமையாசிரியர் ஆசிரிய,ஆசிரியைகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீட்டை விட்டு புறப்பட்ட ரமேஷ் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
    • அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 35). இவர் பேக்கரி நடத்தி வருகிறார்.

    கடந்த 13-ந்தேதி அன்று பேக்கரிக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி விட்டு வீட்டை விட்டு புறப்பட்ட ரமேஷ் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    இது குறித்து அவரது மனைவி சித்ரா (31) கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ரமேஷை தேடி வருகின்றனர்.

    இதேபோல இட்டிகல் அகரம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரும் வீட்டை விட்டு மாயமாகி விட்டார்.

    இவரை அதே பகுதியை சேர்ந்த திருப்பதி என்ற வாலிபர் விட்டதாக பெண்ணின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • கனிமவளத்துறை அதிகாரி பொன்னுமணி மற்றும் அலுவலர்கள் வாகன சோதனை நடத்தினர்.
    • 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் சத்தியசீலன்,முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் அச்சமங்கலம் அருகேயுள்ள தனியார் கல்லூரி அருகில் கனிமவளத்துறை அதிகாரி பொன்னுமணி மற்றும் அலுவலர்கள் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அவ்வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி கிரானைட் கற்கள் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து 2 லாரிகளையும் ,கற்களை கடத்தி வந்த பர்கூரை சேர்ந்த சத்தியசீலன், சிங்கம்பட்டியை சேர்ந்த முருகன், மல்லம்பாடியை சேர்ந்த கராமத் பாய், குப்பம் பகுதியை சேர்ந்த சம்பங்கி ஆகியோரையும் கந்திகுப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.

    2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் சத்தியசீலன்,முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    • இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
    • மகேஷ்குமார், அசோக்,சந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் எர்ரண்டப்பள்ளி பகுதியில் சூளகிரி போதை பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர்களை மடக்கி சோதனை செய்தபோது ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து புகையிலை பொருட்கள்மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் எர்ரண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த மகேஷ்குமார், அசோக்,சந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    ×