என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை.
    • மனமுடைந்த மம்தா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கர்நாடக மாநிலம் கபயன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி மம்தா (வயது 20). இவர்கள் தேன்கனிக்கோட்டை பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் மம்தாவுக்கு சமீப காலமாக உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இதில் மனமுடைந்த மம்தா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து அவரது தந்தை சிவப்பா தந்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமணமாகி 7 ஆண்டுக்குள் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து டி.எஸ்.பி.முரளி விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல காவேரிபட்டணம் அய்யப்பன்கொட்டாய் பகுதியைசேர்ந்த முருகன் என்பவரது மகள் பூவரசி (15) என்ற 10-ம் வகுப்பு மாணவியும் தீராத வயிற்றுவலியால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து காவேரிபட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் விழா ஓசூரில் கொண்டாடப்பட்டது.
    • மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க.சார்பில், மறைந்த முன்னாள் தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் விழா ஓசூரில் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, ஓசூர் தாலுக்கா அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், அதனைத்தொடர்ந்து அன்பழகன் உருவப்படத்திற்கும் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர்கள் ராமு, வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், நாகராஜ் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • எம்.எல்.ஏ. மதியழகன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
    • பொறியாளர் வெங்கடேசன் மற்றும் பணியாளர்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கோட்டம் நாகரசம்பட்டி பிரிவிற்குட்பட்ட வேலம்பட்டி மற்றும் பேறுஅள்ளி பகுதிகளில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய மூன்று மின்மாற்றிகளை பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ. மதியழகன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் வித்யாசங்கர், அவைத்தலைவர் அறிவொளி ராமமூர்த்தி, நாகஜோனஹள்ளி பேரூராட்சித் தலைவர் தம்பிதுரை, மருதேரி ஊராட்சி மன்ற தலைவர் உமா பரத் சரவணன், துணைத் தலைவர் நளினி செந்தில், போச்சம்பள்ளி உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின், நாகரசம்பட்டி உதவி பொறியாளர் வெங்கடேசன் மற்றும் பணியாளர்கள். பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகேயுள்ள கே.எட்டிப்பட்டி பகுதியில் ரெயில் தண்டவாளம் பகுதியில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்கு சென்ற அவர்கள் பிணமாக கிடந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி இறந்தாரா?என்று பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நல்லாட்சி வாரம் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.
    • விதவை உதவித்தொகை என 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    பர்கூர் தாசில்தார் அலுவலகத்தில் முதல்வரின் முகவரித்துறை சார்பாக நல்லாட்சி வாரம் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.

    இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    தொடர்ந்து முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாற்றுத்திறனா ளி களுக்கான உதவித்தொகை, விதவை உதவித்தொகை என 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை

    கலெக்டர் வழங்கினார்.

    தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 312 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 196 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 95 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தனித்துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், பர்கூர் தாசில்தார் பன்னீர் செல்வி, பர்கூர் தனி தாசில்தார் தெய்வநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, வெங்கட்ராம கணேஷ், துணை தாசில்தார் பத்மா மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஜவளகிரி மற்றும் தளி யில் நடந்தது.
    • கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ஜவளகிரி வனத்துறை சார்பில் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஜவளகிரி மற்றும் தளி யில் நடந்தது.

    வன சரகர் சுகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை வன உதவி பாதுகாவலர் ராஜ மாரியப்பன் தொடங்கி வைத்தார். பாரதி கிராமிய கலை வளர்ச்சி மையக் குழுவினர் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவது தடுக்க வேண்டும்,

    வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க வேண்டும், உரிமை இல்லாத நாட்டுத் துப்பாக்குகளை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

    பட்டா நிலங்களில் மின்வேலி அமைக்க கூடாது என்று கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது.
    • இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை,

    ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது.

    இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உட்பட 8 மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானில் 100-வது நாள் நிறைவடைந்தது. இதையொட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடினர்.

    இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.

    இதில் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார் .நகரத் தலைவர் பால்ராஜ் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

    சாக்கப்பா, வெங்கடேஷ், ஜெயகுமார், அசேன்ராஜா, முத்து, மாதேஷ்,நஞ்சுண்டன், ஆதாம், முஹம்மத், முகமது பாஷா, உட்பட நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    • வனச்சரக அலுவலர் ரவி முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • கிராமிய கலைக்குழு மூலம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ரவுண்டனாவில் ஒசூர் வன உயிரின காப்பகம் சார்பில் காப்பாளர் செல்வி கார்த்திகாயிணி அறிவுரைப்படி வன உதவி பாதுகாவலர் ராஜமாரியப்பண் தலைமையில் வனச்சரக அலுவலர் ரவி முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ஒசூர் வனக்கோட்டம் சார்பில் கள்ள துப்பாக்கி ஒழிப்பது குறித்தும்,திருட்டு மின்சாரம் எடுத்து வனவிலங்குகளை வேட்டையாடுவது குறித்தும், வனத்தில் தீ வைப்பதால் ஏற்படும் தீங்குகளை குறித்தும் கிராமிய கலைக்குழு மூலம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    • ரேடியேட்டரில் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியது.
    • காரை ஓரமாக நிறுத்தி அதிலிருந்து குதித்து உயிர் தப்பினார்.

    ஓசூர்,

    கர்நாடக மாநிலம் பெங்களூர் யஷ்வந்த்புரா பகுதியை சேர்ந்தவர் கிரீஷ். இவர், ஓசூர் பகுதியை சேர்ந்த நண்பர் மஞ்சுநாத் என்பவரின் காரை அவரிடம் ஒப்படைப்பதற்காக நேற்று ஓசூர் நோக்கி காரை ஓட்டி வந்தார்.

    வழியில் தமிழக எல்லைக்கு மிக அருகில் உள்ள அத்திப் பள்ளி மேம்பாலத்தின் மீது கார் வந்தபோது ரேடியேட்டரில் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியது.இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிரீஷ், சமயோசிதமாக காரை ஓரமாக நிறுத்தி அதிலிருந்து குதித்து உயிர் தப்பினார்.

    சிறிது நேரத்தில், தீ கார் முழுவதும் மள,மள என்று பரவியது.இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். ஆன போதிலும் கார் கருகி முற்றிலும் சேதமடைந்தது.

    இது குறித்து கிரீஷ் அத்திப் பள்ளி போலீசில் புகார் செய்ததன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் காரணமாக ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஒரு விஷபாட்டில், 2 டம்ளர்களும் இருந்தன. 2 பேரும் தண்ணீரில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
    • மகனுக்கு பாரமாக இருக்க வேண்டாம் என முடிவு செய்து அவர்கள் தற்கொலை செய்து உள்ளார்கள்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 57). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கலைவாணி (42). இவர்களது மகள் சரண்யா (23), மகன் பிருத்வி (21).

    இவர்களில் சரண்யாவிற்கு திருமணமாகிவிட்டது. மகன் பிருத்வி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது மகன் பிருத்வியுடன் மாதேஸ்வரன், கலைவாணி சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர்கள் எழுந்து வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த பிருத்வி அறைக்கதவை தட்டினார். நீண்ட நேரமாகியும் மாதேஸ்வ ரனும்,கலைவாணியும் கதவை திறக்க வில்லை. இதனால் அவர் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது மாதேஸ்வரன், கலைவாணி ஆகிய 2 பேரும் இறந்து கிடந்தனர். அவர்கள் அருகில் ஒரு விஷபாட்டில், 2 டம்ளர்களும் இருந்தன. 2 பேரும் தண்ணீரில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்களின் அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது மாதேஸ்வரன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.

    அந்த கடிதத்தில் தனது மனைவிக்கு உடல் நல பாதிப்பு இருப்பதாகவும், தனது மகனுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், மாதேஸ்வரன் தனது பிள்ளைகளுக்கு தேவையான பண உதவிகளை செய்து கொடுத்து அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வர எண்ணினார். ஆனால் அவ்வாறு முடியவில்லை.

    மேலும் கலைவாணியின் வழியில் அவர்களுக்கு வர வேண்டிய சொத்து கிடைப்பதிலும் தாமதமாகி கொண்டு போனது. இதைத்தவிர கலைவாணிக்கும் உடல் நலம் பாதிப்பு இருந்தது. இதனால் மகனுக்கு பாரமாக இருக்க வேண்டாம் என முடிவு செய்து அவர்கள் தற்கொலை செய்து உள்ளார்கள்.

    இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

    • இல்லங்களுக்கு நேரில் சென்று, ஆவணங்களை சரிபார்த்து, ஆய்வு மேற்கொண்டார்.
    • தேர்தல் துணை தாசில்தார்கள், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேர்தல் ஆணையத்தால் நியமிக்க ப்பட்டுள்ள, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு கைவினை மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஷோபனா, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்ட ருமான ஜெயசந்திரபானு ரெட்டியுடன், வேப்பனப்ப ள்ளி சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட மேலுமலை, சூளகிரி மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோமநாதபுரம், கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகளையொட்டி, விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று, ஆவணங்களை சரிபார்த்து, ஆய்வு மேற்கொண்டார்.

    இது குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க, 1.1.2023-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள், 18 வயது நிறைவடைந்து நாளது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் 17 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் நவம்பர் 9-ந் தேதி முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1880 வாக்கு சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 75,824 விண்ணப்பங்கள் வரபெற்றன.

    பெறப்பட்ட விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக கள விசாரணை மேற்கொண்டு, தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார், தாசில்தார்கள் அனிதா, சம்பத் மற்றும் தேர்தல் துணை தாசில்தார்கள், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • விவசாயியான இவர் ஆடுகள், கோழிகள் வளர்த்து வருகிறார்.
    • 7 ஆடுகள், 4கோழிகள் அனைத்தும் இறந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகம் அருகேயுள்ள திகடரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மா. விவசாயியான இவர் ஆடுகள், கோழிகள் வளர்த்து வருகிறார்.

    நேற்று மேய்ச்சலுக்கு சென்று விட்டு வந்த முனியம்மா இரவு ஆடுகள், கோழிகளை பட்டியில் அடைத்து விட்டு தூங்க சென்றார்.

    இன்று காலை வந்து பார்த்தபோது பட்டியில் இருந்த 7 ஆடுகள், 4கோழிகள் அனைத்தும் இறந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தன.ஏதோ மர்ம விலங்கு இவற்றை கடித்து தின்று விட்டு சென்றுள்ளது.

    இதனால் முனியம்மா அதிர்ச்சியடைந்தார்.

    பட்டியில் இருந்த அனைத்து வளர்ப்பு பிராணிகளும் இறந்து போன நிலையில் அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.இதனால் தனக்கு அரசு சார்பில் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று முனியம்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

    ×