என் மலர்
நீங்கள் தேடியது "மர்ம ஆண் பிணம்"
- ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகேயுள்ள கே.எட்டிப்பட்டி பகுதியில் ரெயில் தண்டவாளம் பகுதியில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற அவர்கள் பிணமாக கிடந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி இறந்தாரா?என்று பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






