என் மலர்
நீங்கள் தேடியது "3 மின் மாற்றிகளை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்"
- எம்.எல்.ஏ. மதியழகன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
- பொறியாளர் வெங்கடேசன் மற்றும் பணியாளர்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கோட்டம் நாகரசம்பட்டி பிரிவிற்குட்பட்ட வேலம்பட்டி மற்றும் பேறுஅள்ளி பகுதிகளில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய மூன்று மின்மாற்றிகளை பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ. மதியழகன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் வித்யாசங்கர், அவைத்தலைவர் அறிவொளி ராமமூர்த்தி, நாகஜோனஹள்ளி பேரூராட்சித் தலைவர் தம்பிதுரை, மருதேரி ஊராட்சி மன்ற தலைவர் உமா பரத் சரவணன், துணைத் தலைவர் நளினி செந்தில், போச்சம்பள்ளி உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின், நாகரசம்பட்டி உதவி பொறியாளர் வெங்கடேசன் மற்றும் பணியாளர்கள். பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.






