என் மலர்
உள்ளூர் செய்திகள்

மர்ம விலங்கு கடித்து ஆடுகள்-கோழிகள் பலி
- விவசாயியான இவர் ஆடுகள், கோழிகள் வளர்த்து வருகிறார்.
- 7 ஆடுகள், 4கோழிகள் அனைத்தும் இறந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகம் அருகேயுள்ள திகடரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மா. விவசாயியான இவர் ஆடுகள், கோழிகள் வளர்த்து வருகிறார்.
நேற்று மேய்ச்சலுக்கு சென்று விட்டு வந்த முனியம்மா இரவு ஆடுகள், கோழிகளை பட்டியில் அடைத்து விட்டு தூங்க சென்றார்.
இன்று காலை வந்து பார்த்தபோது பட்டியில் இருந்த 7 ஆடுகள், 4கோழிகள் அனைத்தும் இறந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தன.ஏதோ மர்ம விலங்கு இவற்றை கடித்து தின்று விட்டு சென்றுள்ளது.
இதனால் முனியம்மா அதிர்ச்சியடைந்தார்.
பட்டியில் இருந்த அனைத்து வளர்ப்பு பிராணிகளும் இறந்து போன நிலையில் அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.இதனால் தனக்கு அரசு சார்பில் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று முனியம்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story