என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • தனது வயலில் உள்ள வீட்டுத்திண்ணையில் அமர்ந்து இருந்தார்.
    • அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள மாரசந்திரம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 60). விவசாயி.

    இவர் தனது வயலில் உள்ள வீட்டுத்திண்ணையில் அமர்ந்து இருந்தார்.

    அப்போது அவ்வழியாக 4 ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். குருசாமியினருகே வந்தவுடன் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.

    இது குறித்து ஹட்கோ போலீசில் புகார் தரப்பட்டது.அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி தங்க சங்கிலியை பறித்த பாகலூர் ஜி.மங்களம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் முரளி (27) என்பவரை செய்தனர்.

    மேலும் இவரது கூட்டாளிகளான பெங்களூருவை சேர்ந்த லோகேஷ், ஸ்ரீகாந்த், அப்பு ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

    • மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.
    • அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் சக்கனப்பள்ளிப் பகுதியை சேர்ந்தவர் சக்தி, இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 30). இவர்களது மகன் சுஜித்குமார் (12).

    சக்தி தனது மனைவி மற்றும் மகனுடன் தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    சுண்டம்பட்டி என்ற இடத்தருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த விஜயலட்சுமி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    சக்தி, சுஜித்குமார் இருவருக்கும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
    • பதிவு செய்யப்பட்ட அலுவலகம், விலாசம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மண்டல அளவிலான தபால்துறை சார்ந்த குறைதீர்ப்பு நாள் கூட்டம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் தேதியன்று காலை 11 மணியளவில் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் உள்ள, அஞ்சல் மேற்கு மண்டல

    அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், தங்களது புகார்களை வருகிற 21-ந் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும், நீங்கள் அனுப்பும் புகார்களில் முழு விவரங்களும், அதாவது தபால் அனுப்பிய தேதி, அனுப்புநர் மற்றும் பெறுநர் விலாசம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும். பதிவு தபால், எம்.ஓ., வி.பி., இன்சூர்டு லெட்டர் மற்றும் விரைவு தபால் ஆகியவைகளுக்கு பதிவு எண், பதிவு செய்யப்பட்ட அலுவலகம், விலாசம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும்.

    அஞ்சல் சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு தொடர்பான புகார்களுக்கு கணக்கு எண், பாலிசி எண், கணக்கு வைத்திருப்பவர் மற்றும் காப்பீட்டாளரின் பெயர் மற்றும் விலாசம், அஞ்சல் அலுவலகத்தின் பெயர், பணம் செலுத்தப்பட்ட விவரம் போன்றவை குறிப்பிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாய மேரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர் .ரங்கநாதன் முன்னிலை வகித்தனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மின்கோட்டம் சார்பாக மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வார விழாவின் நிறைவாக போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை கிருஷ்ணகிரி மின் பகிர்மான மாவட்ட மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாய மேரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இப்பேரணிக்கு போச்சம்பள்ளி மின்வாரிய செயற் பொறியாளர் இந்திரா தலைமை வகித்தார். இதில் ஓசூர் மின்வாரிய செயற் பொறியாளர் முனைவர்.கிருபானந்தம் மற்றும் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர் .ரங்கநாதன் முன்னிலை வகித்தனர்.

    இப்பேரணியிலே வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் மின்சிக்கன கோஷங்கள் எழுப்பியவாறும், பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் விநியோகம், செய்தும் மின்சிக்கன வழிமுறைகளை சுட்டிகாட்டும் பதாகைகள் ஏந்தியவாறு முக்கிய சாலை வழியாக பேரணியாக சென்று போச்சம்பள்ளி காவல் நிலையம் அருகில் நிறைவடைந்தன.

    இப்பேரணியில் போச்சம்பள்ளி உதவி செயற் பொறியாளர் ஸ்டாலின் , மத்தூர் உதவி செயற் பொறியாளர் மகாலட்சுமி, ஊத்தங்கரை உதவி செயற் பொறியாளர் மணி, பர்கூர் உதவி செயற்பொறியாளர் நாகராஜ் மற்றும் உதவி பொறியாளர்கள் மின் வாரிய மேற்பார்வையாளர்கள், மின் பாதை ஆய்வாளர்கள் மின் வாரிய பணியாளர்கள் கலந்து ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
    • தற்காலிக பணி நீக்கம் என்ற நடைமுறை முற்றிலும் கைவிட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

    இதற்கு மாவட்டத் தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமார் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா தொடக்க உரையாற்றினார்.

    ஊரக வளர்ச்சித்துறை மாவட்டத் தலைவர் சரவணன், தமிழ்நாடு அரசு மருந்தாளுனர் சங்க மாவட்டத் தலைவர் துரை, மாவட்ட செயலாளர் கோபாலகண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஊரக வளர்ச்சித்துறை மாநிலத் தலைவர் ராமமூர்த்தி சிறப்புரை ஆற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மீது துறைரீதியான விசாரணைகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் என்ற நடைமுறை முற்றிலும் கைவிட வேண்டும்.

    மாநில மற்றும் மாவட்ட ஓய்வூதியர் குறை தீர்வு கூட்டத்தினை சீரான இடைவெளியில் நடத்தி தீர்வு காண வேண்டும்.

    சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இளைநிலை பொறியாளர்களுக்கும், உதவிப் பொறியாளர்களுக்கு இணையான ஊதிய விகிதம் அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    • அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் பள்ளி மேலாண்மை குழு பயிற்சி வழங்கப்பட்டது.
    • பயிற்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஆசிரியர் பயிற்றுநர் வைத்தியநாதன் வரவேற்றார்.

    சூளகிரி .

    கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகாசூளகிரி வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் பொறுப்பு மேற்பார்வையாளர் வெங்கடேசன் தலைமையில் சூளகிரி ஒன்றியத்தை சார்ந்த அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் பள்ளி மேலாண்மை குழு பயிற்சி வழங்கப்பட்டது.

    பயிற்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஆசிரியர் பயிற்றுநர் வைத்தியநாதன் வரவேற்றார். இப்பயிற்சியில்

    பள்ளி வளர்ச்சி, முன்னேற்றம், மாணவர் பாதுகாப்பு, பள்ளி மேலாண்மைக்குழுவின் பணிகள்,பொறுப்புகள்,கடமைகள்,இடைநிற்றலை தவிர்த்தல், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துதல், எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி, புதிய பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகள், அரசின் நலத்திட்டங்கள், கல்வி உதவித் தொகை, கட்டாய கல்வி உரிமைச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, பள்ளி வளர்ச்சி மேம்பாட்டு திட்ட தீர்மான இயற்றுதல், நிறைவேற்றுதல்ஆகிய தலைப்புகளில் கருத்தாளர்கள் பொற்செழியன், சுந்தரவேல் ஆகியோர் வழங்கினர்.

    • மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.
    • அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் சக்கனப்பள்ளிப் பகுதியை சேர்ந்தவர் சக்தி, இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 30). இவர்களது மகன் சுஜித்குமார் (12).

    சக்தி தனது மனைவி மற்றும் மகனுடன் தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    சுண்டம்பட்டி என்ற இடத்தருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த விஜயலட்சுமி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    சக்தி, சுஜித்குமார் இருவருக்கும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்ட கிளை சார்பில், ஓசூரில் ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது.
    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட கிளை சார்பில், ஓசூரில் ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது.

    ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட தலைவர் ஆர்.துரை தலைமை தாங்கினார்.

    மாவட்ட நிர்வாகிகள் நாகராஜன், இந்துமதி, பவுன், கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் பி.முருகன் விளக்க உரையாற்றினார்.

    மேலும் இதில் சங்க நிர்வாகிகள் சரவணபவன், சீனிவாசுலு, கெம்பண்ணா, திருநாவுக்கரசு, ராஜாமணி,தேவராஜ், குணசேகரன் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட இணை செயலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    • மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
    • ஒன்றிய பிரதிநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையத்தில் மறைந்த முன்னாள் கல்வி அமைச்சரும், பேராசிரியருமான அன்பழகனின் 100-வது பிறந்த நாள் விழாவையொட்டி மத்தூர் தி.மு.க. (வடக்கு) ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் குண வசந்தரசு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் மத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், முன்னாள் ஒன்றிய குழுத் துணைத் தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் தலைவரும், ஊராட்சி செயலாளருமான கமலநாதன், ஒன்றிய துணை செயலாளர் ஜீவானந்தம் ,கண்ணன்ட ஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.எஸ்.சங்கர்,நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி கதிர்வேல், ஒட்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ்குமார், கே.எட்டிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாள் மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்தராஜ், சாந்தமூர்த்தி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய பிரதிநிதி தனசேகரன், கண்ணுகானூர் குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 100 மாணவிகள் தங்கும் வகையில் கல்லூரி மாணவிகள் விடுதி கட்டப்பட்டுள்ளது.
    • சிக்கன், மட்டன், முட்டையும், பண்டிகை கால சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 100 மாணவிகள் தங்கும் வகையில் கல்லூரி மாணவிகள் விடுதி கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி விடுதியை திறந்து வைத்து கலெக்டர் பேசியதாவது:-

    44 விடுதிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர்மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 35 பள்ளி விடுதிகளும், 9 கல்லூரி விடுதிகள் என மொத்தம் 44 விடுதிகள் இயங்கி வருகிறது. கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை வேண்டி அதிகளவில் விண்ணப்பங்கள் வரப்பெறுவதால் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, பர்கூர் தாலுகாவில் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதி 100 மாணவிகள் எண்ணிக்கையுடன் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து பர்கூர் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதி இன்று தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் துவங்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு தினமும் புதிதாக மாற்றப்பட்ட உணவுப்பட்டியலின்படி காலை மற்றும் இரவு உணவாக இட்லி, இடியாப்பம் , பூரி, பொங்கல், சப்பாத்தி, தோசையும், மதிய உணவாக சாதம், சாம்பார், ரசம், கூட்டு, சிக்கன், மட்டன், முட்டையும், பண்டிகை கால சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகிறது.

    மேலும் கல்லூரி விடுதிகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இலவசமாக ஜமுக்காளம், ஆண்டுக்கு 3 முறை இலவச மருத்துவ பரிசோதனையும், பற்பசை, சோப்பு, எண்ணெய் போன்றவை வாங்க கல்லூரி மாணவிகள் ஒருவருக்கு மாதம் ரூ.150-ம், மாணவிகள் தினமும் படிக்க செய்தித்தாள்களும், கலை திருவிழா மற்றும் மாணவிகள் போட்டி தேர்வில் தேர்ச்சி பெறு ஏதுவாக புதியதாக செம்மொழி நூலகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கதிரவன், பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலன், பேரூராட்சி உறுப்பினர் கார்த்திகேயன், தாசில்தார் பன்னீர்செல்வி, பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 25 மாணவர்களாக இருந்தவர்கள் தற்போது 120 பேருக்கு மேல் பயின்று வருகின்றனர் .

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கதவணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு எல்.கே. ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை ஆங்கில பட்டதாரி ஆசிரியரை நியமிக்க கோரி ஊர் பொதுமக்கள் சார்பாக 50-க்கும் மேற்பட்டோர் ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாயை சேர்த்து பள்ளி வளர்ச்சிக்கு பாடுபட்டிருப்பதாகவும், பள்ளியின் சிறப்பின் காரணமாக அருணபதி, கதவணிபுதூர் ,பெரிய கவுண்டனூர் , புள்ளவேடம்பதி ,மயிலாடும்பாறை. எம்.ஜி.ஆர். நகர், தோரணம்பதி, கதவணி, சமத்துவபுரம், கோட்டி வட்டம் ,ஆட்டுக்கொட்டாய் ஆகிய கிராம பகுதியில் இருந்து மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 25 மாணவர்களாக இருந்தவர்கள் தற்போது 120 பேருக்கு மே ல் பயின்று வருகின்றனர் .

    தற்போது பள்ளியில் திடீரென ஆங்கில ஆசிரியரை மாறுதல் செய்தது மாணவர்க ளுக்கும், பெற்றோர்க ளுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக கூறி கோஷ ங்களை எழுப்பி துண்டு பிரசுர ங்களை வெளியிட்டு ஆர்ப்பா ட்டத்தில் ஈடு பட்டனர்.

    • இளம்பெண் கடந்த 14-ந்தேதி முதல் மாயமாகி விட்டார்.
    • முரளி (23) என்ற வாலிபர்தான் தங்களது மகளை கடத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    திருப்பூர் மாவட்டம் திலக் நகர் பகுதியை சேர்ந்தவர் தனது மனைவி மற்றும் 16 வயது மகளுடன் ஓசூர் பகுதியில் தங்கி மில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் அந்த இளம்பெண் கடந்த 14-ந்தேதி முதல் மாயமாகி விட்டார். பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ள இளம்பெண்ணின் தந்தை ஓசூர் அருகேயுள்ள பாகலூரை சேர்ந்த நந்து (வயது 20) என்ற வாலிபர் தனது மகளை கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல ஓசூரை அடுத்த அக்காரப்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் கடந்த 15-ந்தேதி முதல் காணாமல் போய்விட்டார்.இது குறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ள பெண்ணின் பெற்றோர் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த முரளி (23) என்ற வாலிபர்தான் தங்களது மகளை கடத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த புகாரின் பேரிலும் போலீசார் வழக்கு பதிந்து மாயமான இளம் பெண்ணையும் கடத்திச்சென்றதாக கூறப்படும் வாலிபரையும் தேடி வருகின்றனர்.

    ×