என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆங்கில பட்டதாரி ஆசிரியரை நியமிக்க கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கதவணி கிராம பொதுமக்கள்.
நடுநிலைப்பள்ளிக்கு ஆசிரியரை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்
- ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- 25 மாணவர்களாக இருந்தவர்கள் தற்போது 120 பேருக்கு மேல் பயின்று வருகின்றனர் .
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கதவணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு எல்.கே. ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை ஆங்கில பட்டதாரி ஆசிரியரை நியமிக்க கோரி ஊர் பொதுமக்கள் சார்பாக 50-க்கும் மேற்பட்டோர் ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாயை சேர்த்து பள்ளி வளர்ச்சிக்கு பாடுபட்டிருப்பதாகவும், பள்ளியின் சிறப்பின் காரணமாக அருணபதி, கதவணிபுதூர் ,பெரிய கவுண்டனூர் , புள்ளவேடம்பதி ,மயிலாடும்பாறை. எம்.ஜி.ஆர். நகர், தோரணம்பதி, கதவணி, சமத்துவபுரம், கோட்டி வட்டம் ,ஆட்டுக்கொட்டாய் ஆகிய கிராம பகுதியில் இருந்து மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர்.
இப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 25 மாணவர்களாக இருந்தவர்கள் தற்போது 120 பேருக்கு மே ல் பயின்று வருகின்றனர் .
தற்போது பள்ளியில் திடீரென ஆங்கில ஆசிரியரை மாறுதல் செய்தது மாணவர்க ளுக்கும், பெற்றோர்க ளுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக கூறி கோஷ ங்களை எழுப்பி துண்டு பிரசுர ங்களை வெளியிட்டு ஆர்ப்பா ட்டத்தில் ஈடு பட்டனர்.






