என் மலர்
நீங்கள் தேடியது "தங்க சங்கிலி பறிப்பு"
- பாகலூர் சாலை பகுதி வழியாக நடந்து சென்றார்.
- தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி விட்டனர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பஸ்தி நகர் 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி பத்மாவதி (வயது 49). இவர் பஸ்தி நகர் 1-வது கிராஸ் பாகலூர் சாலை பகுதி வழியாக நடந்து சென்றார்.
அப்போது 25 வயது மதிக்கத்தக்க 2 மர்ம நபர்கள் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தனர்.பத்மாவதி அருகே வந்தவுடன் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் நான்கரைபவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி விட்டனர்.
இது குறித்து பத்மாவதி கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.
- தனது வயலில் உள்ள வீட்டுத்திண்ணையில் அமர்ந்து இருந்தார்.
- அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள மாரசந்திரம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 60). விவசாயி.
இவர் தனது வயலில் உள்ள வீட்டுத்திண்ணையில் அமர்ந்து இருந்தார்.
அப்போது அவ்வழியாக 4 ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். குருசாமியினருகே வந்தவுடன் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.
இது குறித்து ஹட்கோ போலீசில் புகார் தரப்பட்டது.அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி தங்க சங்கிலியை பறித்த பாகலூர் ஜி.மங்களம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் முரளி (27) என்பவரை செய்தனர்.
மேலும் இவரது கூட்டாளிகளான பெங்களூருவை சேர்ந்த லோகேஷ், ஸ்ரீகாந்த், அப்பு ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.






