என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • விற்பனைக்காக பாக்சில் பறித்து வைத்திருந்த தக்காளிகளை காட்டுயானைகள் மிதித்து துவம்சம் செய்தது.
    • விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டுயானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், தீ பந்தம் காண்பித்தும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் உள்ளது.

    இந்த யானைகள் நேற்றிரவு வெப்பாளப்பட்டி கிராமத்தில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் விமலா சண்முகம் என்பவரின் 10 ஏக்கர் விளைநிலத்திற்குள் காட்டு யானைகள் புகுந்த தக்காளி தோட்டத்தை நாசம் செய்தது. பின்னர் விற்பனைக்காக பாக்சில் பறித்து வைத்திருந்த தக்காளிகளை மிதித்து துவம்சம் செய்தது.

    இதுகுறித்து வனசரக பார்த்தசாரதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர் தலைமையில் வனவர் நாராயணன் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர். விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டுயானைகளை பட்டாசு வெடித்தும், தீ பந்தம் காண்பித்தும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    • கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
    • வாடிக்கை யாளர்களை திசை திருப்பி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலமங்கலம் ரோடு அக்கொண்ட பள்ளியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் வெங்கடேஷ்.

    இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

    அந்த புகாரில் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இதற்கு முன்னால் மேலாளராக வேலை பார்த்த ஓசூர் விகாஸ் நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீராஜ் நம்பியார் என்பவர் போலியான இணைய தள முகவரியை உருவாக்கியுள்ளார்.

    அதனை பயன்படுத்தி நிறுவனத்தின் வாடிக்கை யாளர்களை திசை திருப்பி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.

    இவ்வாறு அந்த வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ. பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு விழா நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ. பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு விழா நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்து, பள்ளியின் விளையாட்டு கொடியினை ஏற்றி வைத்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் பங்கேற்று, ஒலிம்பிக் ஜோதியினை ஏற்றி வைத்து, போட்டிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து விளையாட்டு வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை அவர் ஏற்று கொண்டார்.

    இதில் மாணவ, மாணவிகளுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடத்தப்பட்டது.

    6 முதல் 8 வயது, 9 மற்றும் 10 வயது, 11 முதல் 13 வயது, 14 முதல் 16 வயது என ஆனந்த், தீரஜ், பிரேம், சாந்தி என 4 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற சாந்தி குழுவிற்கு கோப்பை வழங்கப்பட்டது. இந்த விளையாட்டு விழாவினையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் அசோக் தலைமையில் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    இதில், அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் தனபால், ஓசூர், பர்கூர், வேப்பனஹள்ளி, சூளகிரி வேளாங்கண்ணி பள்ளிகளின் முதல்வர்கள், இன்ஜினியர் சரவணன், தொழிலதிபர்கள் ரகுராமன், வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அ.தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது.
    • குழந்தையின் பெற்றோர், கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே பேகேபள்ளியைசேர்ந்த கணேசன் என்பவரது மனைவி சத்தியா என்பவர் கடந்த 23-ந் தேதி பிரசவத்திற்காக ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அடுத்த நாள் (24-ந்தேதி) சத்தியாவிற்கு பிரசவ வலி ஏற்ப்பட்டது.அந்த நேரத்தில், டாக்டர்கள் இல்லாமல் போனதால் நர்சுகள் மற்றும் துப்புரவு பணியாளர்களே பிரசவம் பார்த்ததால், ஆண் குழந்தை உயிரிழந்து விட்டதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை மருத்துவமனை வளாகத்தில் அ.தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது.

    இதில் அ.தி.மு.கவை சேர்ந்த மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், நகரமைப்பு குழு தலைவர் அசோகா, வெங்கடசாமி மற்றும் கட்சியினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மாயவன், ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    பின்னர் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், அங்கு நேரில் சென்று பேச்சு வார்த்தை நடத்தி, குழந்தை இறந்தது தொடர்பாக புகார் தொடுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பின்னர், குழந்தையின் பெற்றோர், கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தனர்.

    • அரசுக்கு கோரிக்கை விடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஊத்தங்கரை எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை படப்பள்ளி, சரட்டூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் செங்கரும்பை பயிரிட்டுள்ளனர்.

    செங்கரும்பை விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் தலைமையில் நான்கு முனை அண்ணா சிலை சந்திப்பின் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பின்னர் விவசாயிகள் செங்கரும்புடன் ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    • இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
    • தடுப்பு முறைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொள்வதால் வெறிநோயை 100 சதவிகிதம் ஒழித்து விடலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் கட்டிகானப்பள்ளி ஊராட்சி கீழ்புதூர் வட்டார வள மைய கல்வி விளையாட்டு வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

    இதை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்து, கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

    கால்நடை வளர்ப்போர், செல்லப்பிராணிகள் வளர்ப்போர் மற்றும் பொதுமக்களுக்கு வெறி நோயினை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மற்றும் ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா சார்பாக இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    வெறிநோய்த் தடுப்பு நாய் வளர்ப்போரின் பொறுப்புணர்வில் தான் ஆரம்பிக்கிறது. அனைத்து நாய்களுக்கும் வருடந்தோறும் வெறிநோய் தடுப்பூசி போட வேண்டும். கால்நடை மருத்துவர் அறிவுரையில் இதை ஒரு சமுதாயக் கடமையாகச் செய்ய வெண்டும். தடுப்பு முறைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொள்வதால் வெறிநோயை 100 சதவிகிதம் ஒழித்து விடலாம்.

    எனவே பொதுமக்கள், தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு வெறிநோய் தடுப்பது பற்றிய விழிப்புணர்வு ஆலோசனைகள் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறந்த பயிர் விளைச்சலுக்கு தரமான விதை மிக முக்கியமான காரணி ஆகும்.
    • விதை நேர்த்தி செய்தல் மற்றும் நுண்ணூட்ட கலவை இடுதல் போன்ற செயல் விளக்கங்கள் காண்பிக்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி விதை சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் அருணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுதானிய பயிரில் ராகி முக்கிய பயிர் ஆகும். சிறந்த பயிர் விளைச்சலுக்கு தரமான விதை மிக முக்கியமான காரணி ஆகும்.

    விதைச்சான்று மற்றம் அங்ககச்சான்று துறையின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் சுமார் 100 மெட்ரிக் டன் விதைகளுக்கு தரமான விதைகள் என்று சான்று வழங்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி வட்டாரத்தில் மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விதை உற்பத்தியாளர்கள் குழுக்கள் மகளிருக்கு அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு உறுப்பினர்களுக்கு ராகி பயிரில் தரமான விதை உற்பத்தி முறை மற்றும் விதைச்சான்று நடைமுறைகள் குறித்து விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் பயிற்சி வழங்கினார்.

    பயிற்சியின் போது விதை பண்ணை அமைக்க அவசியமான அடிப்படை காரணிகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் நுண்ணுயிர் கலவைக் கொண்டு விதை நேர்த்தி செய்தல் மற்றும் நுண்ணூட்ட கலவை இடுதல் போன்ற செயல் விளக்கங்கள் காண்பிக்கப்பட்டன.

    பயிற்சியாளர்களுக்கு சிறு தானியங்கள் பயிர் செய்ய தேவையான தொழில் நுட்பங்கள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை மகளிர் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபீஸ்ஜான் செய்திருந்தார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாழ்ந்து காட்டுவோம் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
    • இதன் மூலம் 885 பயனாளிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் புத்துணர்வு பெற்று பல மேம்பாடுகள் செய்யப்பட்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படும் திட்டம் ஆகும்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், காவேரிப்பட்டணம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 3 ஒன்றியங்களில் உள்ள 102 ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலமாக சமுதாய பண்ணைப்பள்ளிக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 82 ஆயிரத்து 800 நிதி வழங்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 145 சமுதாய பண்ணைப்பள்ளிகள் செயல்பட்டு கொண்டு வருகின்றன. இதன் மூலம் 4,350 பயனாளிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.

    மேலும் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சிக்கும் சமுதாய திறன் பள்ளிகள் 21 செயல்பட்டு வருகின்றன. இதில் தொழிலுக்கு தேவையான திறன் பயிற்சியை ஏற்கனவே அத்தொழிலில் தகுதி வாய்ந்த அனுபவம் பெற்றவர் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு சமுதாய திறன் பள்ளிக்கும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் நிதி மானியமாக வழங்கப்படுகிறது. இதுவரை ரூ.16 லட்சத்து 25 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடிந்த பின் சுய வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் 885 பயனாளிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.

    ஆகவே தனிநபர் தொழில் செய்வோர் அல்லது தொழில் தொடங்க விரும்புபவர்கள் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மானியத்துடன் கூடிய கடனுதவியை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தெய்வானை குடை பிடித்தவாறு பின்னால் உட்கார்ந்து சென்றார்.
    • பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே தெய்வானை பலியானார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த நொச்சிப்பட்டியை சேர்ந்தவர் முனுசாமி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தெய்வானை (வயது 50).

    ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தெய்வானை சிகிச்சை பெற்று விட்டு கணவரோடு இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது, மழை காரணமாக தெய்வானை குடை பிடித்தவாறு பின்னால் உட்கார்ந்து சென் றார்.

    ஊணாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வரும்போது பலத்த காற்றில் குடை பின்னுக்கு இழுத்ததால் கீழே விழுந்து தலையின் பின் பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே தெய்வானை பலியானார்.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • 6- வது ஆண்டு தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.
    • ஹரிநாம சங்கீர்த்தனம், பிரசாத வினியோகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    தேன்கனிக்கோட்டை,

    தேன்கனிக்கோட்டையில் இஸ்கான் சார்பில் பராமரிக்கப்படும் கிருஷ்ணர், பலராம் கோவில் உள்ளது. இக்கோவிலின் சார்பில் 6- வது ஆண்டு தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.

    காலை 10 மணிக்கு, ஊஞ்சல் சேவை, ஆன்மீக சொற்பொழிவு, ஹரிநாம சங்கீர்த்தனம், பிரசாத வினியோகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    மாலை 4 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. வனத்துறை அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் சாலை, எம்.ஜி., ரோடு வழியாக சென்ற தேர் மீண்டும் கோவிலை அடைந்தது.

    தேர்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் முரளிராம்தாஸ் செய்திருந்தார்.

    • 7 அடி நீளமுள்ள மலை பாம்பு ஒன்று நுழைந்தது.
    • பிடிபட்ட பாம்பை நாரலப்பள்ளி காப்பு காட்டில் விட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பகுதியில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் வனப் பகுதியில் இருந்து மலைப்பாம்பு, சாரப்பாம்பு போன்ற வன உயிரினங்கள் அருகில் உள்ள கிராம பகுதிகளுக்கு வருவது அடிக்கடி நடக்கின்றன.

    இந்நிலையில் கிருஷ்ணகிரி சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றும் மழை பெய்த நிலையில் பெரியமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகராஜபுரம் புதிய குடியிருப்பு பகுதியில் 7 அடி நீளமுள்ள மலை பாம்பு ஒன்று நுழைந்தது.

    இதை கண்ட பொது மக்கள் கிருஷ்ணகிரி வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனச்சரகர் ரவியின் உத்தரவின் பேரில், வனக்காவலர் குமார், வேட்டை தடுப்பு காவலர்கள் பழனிசாமி, மாதப்பன், ஆகியோர் விரைந்து வந்து பாம்பை பிடித்தனர்.

    பிடிபட்ட பாம்பை நாரலப்பள்ளி காப்பு காட்டில் விட்டனர்.

    • பா.ஜனதா விவசாய அணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • விவசாயி களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    கிருஷ்ணகிரி, 

    பொங்கல் பரிசுடன் செங்கரும்பு, வெல்லம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கக்கோரி சூளகிரியில் மேற்கு மாவட்ட பா.ஜனதா விவசாய அணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சூளகிரி ரவுண்டானாவில் நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நாகராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    இதில், மாநில விவசாய அணி துணைத்தலைவர் கோவிந்தரெட்டி, மாவட்ட பொதுச்செயலாளர் அன்பரசன், மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர் மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பொங்கல் பரிசில் செங்கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை சேர்த்து வழங்ககோரியும், விவசாயி களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கோரியும் கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.

    ×