என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் கீழே விழுந்து பலி
- தெய்வானை குடை பிடித்தவாறு பின்னால் உட்கார்ந்து சென்றார்.
- பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே தெய்வானை பலியானார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த நொச்சிப்பட்டியை சேர்ந்தவர் முனுசாமி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தெய்வானை (வயது 50).
ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தெய்வானை சிகிச்சை பெற்று விட்டு கணவரோடு இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது, மழை காரணமாக தெய்வானை குடை பிடித்தவாறு பின்னால் உட்கார்ந்து சென் றார்.
ஊணாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வரும்போது பலத்த காற்றில் குடை பின்னுக்கு இழுத்ததால் கீழே விழுந்து தலையின் பின் பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே தெய்வானை பலியானார்.
இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story






