என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலி இணைய தள முகவரி மூலம் முறைகேடு
- கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
- வாடிக்கை யாளர்களை திசை திருப்பி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலமங்கலம் ரோடு அக்கொண்ட பள்ளியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் வெங்கடேஷ்.
இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இதற்கு முன்னால் மேலாளராக வேலை பார்த்த ஓசூர் விகாஸ் நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீராஜ் நம்பியார் என்பவர் போலியான இணைய தள முகவரியை உருவாக்கியுள்ளார்.
அதனை பயன்படுத்தி நிறுவனத்தின் வாடிக்கை யாளர்களை திசை திருப்பி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு அந்த வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story






