கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ. பங்கேற்பு

அரசுக்கு கோரிக்கை விடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஊத்தங்கரை எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ. பங்கேற்பு
Published on

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை படப்பள்ளி, சரட்டூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் செங்கரும்பை பயிரிட்டுள்ளனர்.

செங்கரும்பை விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்தங்கரை எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் தலைமையில் நான்கு முனை அண்ணா சிலை சந்திப்பின் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் விவசாயிகள் செங்கரும்புடன் ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com