என் மலர்
கிருஷ்ணகிரி
- பல் மருத்துவமனை ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
- அடையாளம் தெரியாத ஒரு நபருடன் லாவண்யா சென்றுள்ளது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள மிட்டபள்ளியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி லாவண்யா (வயது 34).
இவர் ஊத்தங்கரையில் உள்ள பல் மருத்துவமனை ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த 1-ந்தேதி வேலைக்கு சென்ற லாவண்யா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் விசாரித்து அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அடையாளம் தெரியாத ஒரு நபருடன் லாவண்யா சென்றுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து ஊத்தங்கரை போலீசில் பழனிசாமி புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமானலாவண்யாவை தேடி வருகின்றனர்.
- மர்ம நபர் ஒருவர் காய்த்ரி பேக்கில் இருந்து 700 பணத்தை எடுத்தார்.
- சுதாரித்த அவர் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
கிருஷ்ணகிரி,
கர்நாடகா மாநிலம், பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (வயது40). நர்சாக பணிபுரிந்து வரும் இவர் நேற்று ஓசூர் பஸ்நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் காய்த்ரி பேக்கில் இருந்து 700 பணத்தை எடுத்தார். இதனை சுதாரித்த அவர் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அலமேலு என்பது ெதரியவந்தது. உடனே அவரை கைது செய்தனர்.
- வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார்.
- பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்துள்ள கொலதாசபுரம் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன் (வயது29). இவர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பேரிகை போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.
- ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பில், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக வேட்டிகள் வழங்கப்பட்டன.
- வேட்டிகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி,
பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் வகையில் கடந்த, 2015 முதல் ஜனவரி 6-ந் தேதி உலக வேட்டி தினம் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச வேட்டி தினம் அனுசரிக்கப்படுவதன் நோக்கம், கைத்தறி மற்றும் நெசவு தொழிலை காப்பது மற்றும் இளைஞர்கள் வேட்டி அணியும் பழக்கத்தை ஊக்குவிப்பதும் ஆகும். அதன்படி, கிருஷ்ணகிரி கே.தியேட்டர் சாலையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஜவுளிக் கடையில் நேற்று உலக வேட்டி தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஸ்ரீவெங்கடேஸ்வரா நிர்வாக இயக்குனர் ரமேஷ் மற்றும் கடை ஊழியர்கள், 200க்கும் மேற்பட்டவர்கள் வேட்டி அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், கிருஷ்ணகிரி ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பில், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக வேட்டிகள் வழங்கப்பட்டன.
இது குறித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் ரமேஷ் கூறுகையில், சர்வதேச வேட்டிகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பெண்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில், சிறப்பு பிரிவாக பிரம்மாண்டமாய் விரிவுபடுத்தப்பட்ட முதல் தளத்தில் பெண்களுக்கான பேன்சி சாரீஸ் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணற்ற டிசைன்களில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு வயதினருக்கும் ஆடைகள் குவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
- ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட லட்சுமிபுரத்தை சேர்ந்த நாயணம்மா (வயது 70) தீடீரென மயங்கி விழுந்தார்.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சூளகிரி தாசில்தார் அனிதா, வருவாய் அலுவலர் ரமேஷ் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சில் ஈடுபட்டனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி, அயர்நள்ளி, நாகமங்களம் பகுதியில் அரசு சார்பில் விவசாய நிலங்களை எடுப்பதாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அதே போல் நேற்று உத்தனப்பள்ளி வருவாய் அலுவலகம் அருகே விவசாயிகள் வேலு, சத்தியநாராயணன், பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமையில் 50- க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட லட்சுமிபுரத்தை சேர்ந்த நாயணம்மா (வயது 70) தீடீரென மயங்கி விழுந்தார்.
பின்னர் அவரை மருத்துமனைக்கு தூக்கி சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இதில் சூளகிரி தாசில்தார் அனிதா, வருவாய் அலுவலர் ரமேஷ் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சில் ஈடுபட்டனர்.
- எருது விடும் விழா நடத்த ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே விண்ணப்பம் செய்ய வேண்டும்.
- எருது விடும் விழா நிகழச்சிகளில் ஒரு காளையுடன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா நிகழ்ச்சியை நடத்த அரசின் முன் அனுமதி பெற்று, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எருது விடும் விழா நிகழச்சியை 2023-ம் ஆண்டில் நடத்த அரசின் முன் அனுமதி பெறுவதுடன், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன்படி, எருது விடும் விழா நடத்த ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அனுமதி கோரி வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, அரசிதழில் பதிவு செய்ய விழா நடைபெறுவதற்கு 20 நாட்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட கிராமம் மற்றும் விழா நடைபெறும் நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு, அரசாணை பெறுவதற்கு கால்நடை பராமரிப்புத்துறை ஆணையருக்கு கருத்துரு அனுப்பப்பட வேண்டும் என அரசால் ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
எருது விடும் விழா நிகழச்சிகளில் ஒரு காளையுடன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மேற்கண்ட இரண்டு நபர்களும், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்த 2 நாட்களுக்கள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருத்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
முன் அனுமதி பெற்ற எருது விடும் விழா நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்திட வேண்டும்.
எருது விடும் விழா நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்கள் மற்றும் ஊடகத்துறையைச் சார்ந்தவர்களும், அரசின் நிலையான வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா நிகழ்ச்சியை, அரசின் வழிகாட்டுதல்களின் படியும், சிறப்பாக நடத்திட போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை விழா நடந்தது.
- தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் எம். எல்.ஏ பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா இம்மிடியாயக்கனப்பள்ளி ஊராட்சி இம்மிடி நாயக்கனப் பள்ளியில் மாவட்ட ஊராட்ச்சிகுழு உறுப்பினர் சசிகலா பாக்கியராஜ்க்கு ஒதுக்கபட்ட நிதியில் இருந்து ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் தலைமையில் தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் எம். எல்.ஏ பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் மாநில இளைஞர் அணி சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் ஷேக் ரஷீத், பொதுக்குழு உறுப்பினர் பூசன்குமார், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சாலம்மாள், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ராஜேந்திரன், ஹரி, முனிசந்திரன், ராமசந்திரன், ஜியாஉல்லா, சிவராஜ்,சிவா, கர்ணல், மஞ்சு, ராஜேந்திரன், ராஜகுமார், மூத்து மணி, ஜெயக்குமார், கிருஷ்ணப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நாடு முழுவதும் வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் இருந்தே ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக செயல்படுத்தப்படும்
- மத்திய அரசு தொகுப்பில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் அவர்களது ரேஷன் அட்டைகளை பயன்படுத்தி வாங்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஏகாம்பரம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், நாடு முழுவதும் வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் இருந்தே ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக செயல்படுத்தப்படும் இத்திட்டம் பொதுமக்களுக்கு சிறந்த வகையில் உதவியாக அமைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமான அண்டை மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்க்கின்றனர்.
அவர்களில், 50 சதவீத குடும்பத்திற்கும் மேற்பட்டோர் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே ரேஷன் பொருட்களை தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.
மத்திய அரசு தொகுப்பில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் அவர்களது ரேஷன் அட்டைகளை பயன்படுத்தி வாங்கலாம்.
அதேபோல் பல்வேறு மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தங்கி வேலை பார்ப்பவர்கள் தங்கள் ரேஷன் அட்டைகளில் முகவரி மாற்றமின்றி மத்திய, மாநில தொகுப்புகளின் கீழ் கிடைக்கும் அனைத்து ரேஷன் பொருட்களையும் வாங்கலாம். இத்திட்டத்தை பயன்படுத்தி முகவரி மாற்றமின்றி அனைவரும் ரேஷன் பொருட்களை பெற்று பயன் பெறலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) குமார், சுந்தரம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கோவிலில் புகுந்து மர்ம நபர்கள் 5 கிராம் தங்க நகை, 1000 பணம் ஆகியவை திருடி சென்றனர்.
- தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காளியம்மன் கோவில் தெருவில் உள்ள கோவிலில் புகுந்து மர்ம நபர்கள் 5 கிராம் தங்க நகை, 1000 பணம் ஆகியவை திருடி சென்றனர்.
இது குறித்து வார்டு கவுன்சிலர் சஞ்சனா கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- நேற்று சிவஸ்ரீ விளையாடி கொண்டிருந்தார்.
- எதிர்ப்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் அந்த குழந்தை தவறி விழுந்து இறந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சோலையூர் கிராமத்தை சேர்ந்த அன்பு. இவரது மனைவி மாதம்மாள். இவர்களுக்கு ஒன்றரை வயதில் சிவஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளன.
இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுவதால் குழந்தையின் பெரியப்பா சண்முகம் மற்றும் அவரது மனைவி குழந்தைகளை கவனித்து வந்தனர். நேற்று சிவஸ்ரீ விளையாடி கொண்டிருந்த பொழுது எதிர்ப்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தார்.
இது குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ராயக்கோட்டை சாலையில் உள்ள துளசி பார்மசி மருந்து கடையிலும் ஷட்டர் உடைக்கப்பட்டு மர்மநபர்கள் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
- அடுத்தடுத்து நடந்த இரண்டு கொள்ளை சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை பகுதியில் சுரேந்தர் என்பவருக்கு சொந்தமான டிஎன் 24 என்கிற புதிய ஆண்களுக்கான ரெடிமேட் ஷோரூம் நேற்று திறக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றிரவு புதிதாக திறக்கப்பட்ட ரெடிமேட் ஷோரூம் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து கடையின் உரிமையாளர் சுரேந்தருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் விரைந்து வந்து உடனடியாக ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் விரைந்து வந்து சிசிடிவி ஆதாரங்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் ராயக்கோட்டை சாலையில் உள்ள துளசி பார்மசி மருந்து கடையிலும் ஷட்டர் உடைக்கப்பட்டு மர்மநபர்கள் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து நடந்த இரண்டு கொள்ளை சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
- ரேஷன் அட்டைகள் மூலம், 6 கோடியே 98 லட்சத்து 37 ஆயிரத்து 94 பயனாளர்கள் உள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, கிழக்கு மாவட்ட பா.ஜனதா விவசாய அணி சார்பில், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
விவசாய அணி மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் கோவிந்தராஜ், அர்ஜுணன், மகளிர் அணித் தலைவி விமலா, மாநில செயற்குழு உறுப்பினர் தர்மலிங்கம், அரசு பிரிவு மாவட்டத் தலைவர் தருமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் பேசியதாவது:-
தமிழகத்தில், 4.63 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய தேங்காய் உற்பத்தியில் 31.5 சதவீதம் உற்பத்தி செய்து தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 3,751.26 டன் உற்பத்தி செய்து தேசிய தேங்காய் வியாபார சந்தையில் 27.47 சதவீதம் பங்கு பெறுகிறது. ஆனால் தமிழகத்தில் தென்னை உற்பத்தியாளர்களின் நிலை மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளனர்.
உரிய விலை கிடைக்காமல் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் உற்பத்தி பரப்பளவும் குறைந்து கொண்டு வருகிறது.
தமிழகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் பொதுவினியோக திட்டத்தின் கீழ், மக்களுக்கு மாதந்தோறும் வழங்கும் பொருட்களில் தேங்காயையும் கட்டாயம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் 2 கோடியே 23 லட்சத்து 40 ஆயிரத்து 635 ரேஷன் அட்டைகள் மூலம், 6 கோடியே 98 லட்சத்து 37 ஆயிரத்து 94 பயனாளர்கள் உள்ளனர்.
மாதம் ஒரு குடும்பத்திற்கு குறைந்தது 10 தேங்காய்களை வழங்குவதன் மூலம் மக்களும் பயன்பெறுவர். தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணை கொடுப்பதன் மூலம் அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பயன் அளிக்கும்.
தேங்காய் உற்பத்தியாளர்களிடம் குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து ஆண்டு முழுவதும் அரசு கொள்முதல் செய்தால், தென்னை விவசாயிகளை காப்பாற்ற இயலும்.
அதன்மூலம் தென்னை சார்ந்த பல பொருட்கள் வணிக வாய்ப்பு பெரும். எனவே தமிழக அரசு ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணை கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






