என் மலர்
கிருஷ்ணகிரி
- பெற்றோர்கள் தங்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் எடுத்துக் கூறினர்.
- அனைத்து பெற்றோர்களும் செய்தித்தாள்கள் வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 6-ம் முதல் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) விஜய் தலைமை தாங்கி பள்ளியின் எதிர்கால திட்டம், மாணவர்களின் முன்னேற்றம், பள்ளியின் தேவைகள் குறித்து விளக்கி பேசினார். அத்துடன், அனைத்து மாணவர்களையும் அரசு பள்ளியில் சேர்க்கவும், இடைநிற்றல் இன்றி பள்ளிக்கு அனுப்பவும் கேட்டுக் கொண்டார்.
பெற்றோர்கள் தங்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் எடுத்துக் கூறினர். இக்கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருகை தந்த அனைத்து மாணவ, மாணவியரையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டார வளமைய மேற் ார்வையாளர்(பொறுப்பு) அசோக், குழந்தைகளின் நலனில் பெற்றோர்கள் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும், அனைத்து பெற்றோர்களும் செய்தித்தாள்கள் வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சென்னம்மாள், துணைத் தலைவர் முருகன், உறுப்பினர்கள் மற்றும் 176 மாணவர்களின் பெற்றோர்கள், அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் ராம்பிரசாத் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார்.
- அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது.
- இதில் சம்பவ இடத்திலேயே சின்னசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே கனகமுட்லு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது79). இவர் நேற்று கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலை அவதானப்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சின்னசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டேம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடமிருநது நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
- பெண்ணேஸ்வரமடம் ஊராட்சியில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாய தோட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், பெண்ணேஸ்வரமடம் ஊராட்சியில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு கரும்பு கொள்முதல் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்களில் அரிசி இருப்பு ஆகியவற்றை கலெக்டர் ஜெயசந்திரபான ரெட்டி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-
தமிழக முதல் -அமைச்சரின் ஆணைப்படி, தை பொங்கலை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1094 நியாய விலைக்கடைகளில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 934 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பொருட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை (இன்று) நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.ஆயிரம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. தரமான அரிசி, 6 அடிக்கும் குறையாத கரும்பு கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதற்காக கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்கள் கொண்டு வட்டார கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. தரமான கரும்பு கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்திடும் நோக்கில் கரும்பு பயிரிடப்பட்டுள்ள தோட்டங்களில் இக்குழுவினர் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு, கரும்பு தரங்களை உறுதி செய்து வருகின்றனர்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடமிருநது நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், பெண்ணேஸ்வரமடம் ஊராட்சியில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாய தோட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம்.
மேலும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்குவதற்காக 559 டன் அரிசி மற்றும் சர்க்கரை தயார் நிலையில் உள்ளது. எனவே, குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் எவ்வித தொய்வு இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் சுந்தரம், குமார், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
- 183 மூட்டைகளில், 9 ஆயிரத்து, 150 கிலோ ரேஷன் அரிசி கர்நாடகாவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது.
- இது தொடர்பாக 2 பேரை தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் மினி லாரியில் கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 9.1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, மூர்த்தி மற்றும் போலீசார், நேற்று மதியம், கிருஷ்ணகிரி -ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சூளகிரி பெட்ரோல் பங்க் அருகே நின்ற மினி லாரியை சோதனையிட்டதில், 50 கிலோ அளவிலான, 183 மூட்டைகளில், 9 ஆயிரத்து, 150 கிலோ ரேஷன் அரிசி கர்நாடகாவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியுடன் மினிலாரியை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளரான கிருஷ்ணகிரி மாவட்டம், குள்ளம்பட்டி அடுத்த மோட்டூரை சேர்ந்த ஜெயந்தி (48) என்பவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக கர்நாடக மாநிலம், கோலாரை சேர்ந்த குபேந்திரன் (25) என்பவரை தேடி வருகிறார்கள்.
- பஸ்சில் தீ கொளுந்து விட்டு எரிவதால் பயணிகள் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே குதித்து தப்பினர்.
- தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி பற்றி எரிந்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
கிருஷ்ணகிரி:
பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருவண்ணாமலை நோக்கி கர்நாடகா அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
இந்த பஸ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி அருகே இன்று மதியம் வந்தபோது தேசிய நெடுஞ்சாலை குறுக்கே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கடக்க முயன்றனர்.
அப்போது கர்நாடகா அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பைக்கின் பெட்ரோல் டேங்க்கில் மோதியதால் வெடித்து சிதறியது. இதில் பயணம் செய்த 2 பேரும் உடல் கருகி இறந்தனர். மேலும் விபத்தில் சிக்கிய பஸ்சும் தீ குபுகுபுவென பற்றி எரிந்தது. இதனை பார்த்த பயணிகள் அலறினர். பஸ்சில் தீ கொளுந்து விட்டு எரிவதால் பயணிகள் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே குதித்து தப்பினர்.
இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். இந்த விபத்தால் சாலையில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி பற்றி எரிந்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். பின்னர் போலீசார் போக்குவரத்தை சரிசெய்து சீரமைத்தனர்.
இந்த தீ விபத்தில் இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அவர்களை அன்புடன் வரவேற்று பொன்னாடை, இனிப்புகள் வழங்கி கட்சியில் இணைத்து கொண்டனர்.
- இதில் மாநில இளைஞர் அணி சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம்,சூளகிரி தாலுகா இம்மிடியாயக்கனப்பள்ளி ஊராட்சி பேடர்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல்வேறு கட்சியில் உள்ளவர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி சூளகிரி தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் தலைமையில் தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை அன்புடன் வரவேற்று பொன்னாடை, இனிப்புகள் வழங்கி கட்சியில் இணைத்து கொண்டனர்.
இதில் மாநில இளைஞர் அணி சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் ஷேக் ரஷீத், பொதுக்குழு உறுப்பினர் பூசன்குமார், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சாலம்மாள், மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ராஜேந்திரன், ஹரி, முனிசந்திரன், ராமசந்திரன், ஜியாஉல்லா, சிவராஜ், சிவா, கர்ணல், மஞ்சு, ராஜேந்திரன், ராஜகுமார், மூத்து மணி, ஜெயக்குமார், கிருஷ்ணப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- விவசாயியான இவர் நேற்று கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள குருமசனபள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியப்பா (வயது72). விவசாயியான இவர் நேற்று கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விாசரணை நடத்தி வருகின்றனர்.
- பழமை வாய்ந்த ஸ்ரீ துரோபதி அம்மன் கோவிலில் ஆருத்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
- இச்சிறப்பு பூஜை களர்பதி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், களர்பதி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ துரோபதி அம்மன் கோவிலில் ஆருத்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் அம்மனுக்கு பாலாபிஷேகம், பன்னீரபிஷேகம், சந்தன பிஷேகம் தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்தும் அலங்கரிக்கப்பட்ட நிலையில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பலித்தன. இச்சிறப்பு பூஜை களர்பதி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, அதிமுக பிரமுகர் பூபதி, கோவில் தர்மகர்த்தா கோவிந்தராஜ், ஊர் மூப்பர் சீனிவாசன், ஊர் நாயக்கர் கணேசன், ஊர் கவுண்டர் அண்ணாமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி ஏற்பாட்டில் 200-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
- பேராசிரியர் க அன்பழகன் நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
- மாநகர துணை செயலாளர் கோபால கிருஷ்ணன் வரவேற்றார்.
ஓசூர்,
ஓசூர் மாநகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் க அன்பழகன் நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு, மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ. சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா உள்ளிட்ட பகுதி செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.
மாநகர துணை செயலாளர் கோபால கிருஷ்ணன் வரவேற்றார். இதில், திராவிட இயக்க சிந்தனையாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளரும் ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் இதில், மாநில இளைஞரணி துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன் மற்றும் மாநில,மாவட்ட, மாநகர, கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
- நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நடராஜர், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஓசூர்,
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் நேற்று தரிசனத்தை முன்னிட்டு சிவகாமசுந்தரி உடனுறை நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நடராஜர், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் விழாவையொட்டி, சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், ஓசூர் ராம் நகரில் உள்ள சொர்ணாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது.
- அந்த மாணவன் சரிவர படிக்காமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
- அம்மாணவன் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்தான்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்துள்ள குடுமியனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் லோகேஸ் (வயது11). இவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். அந்த மாணவன் சரிவர படிக்காமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அம்மாணவன் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பாரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இனிப்புகளை (கேக்) வழங்கி, தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் தெரிவித்து கொண்டார்.
- விளையாட்டுத்துறையில் வெற்றி பெற்று சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி தனது பாராட்டுகளை தெரிவித்தார்
கிருஷ்ணகிரி,
மகளிர் முன்னேற்றத்தில் வெற்றி கண்டுள்ள ஐ.வி.டி.பியானது கடந்த பல ஆண்டுகளாக சிறப்பான கல்விச் சேவையை ஆற்றி வருவது அனைவரும் அறிந்த ஒன்று.
கல்வி ஊக்கப்பரிசுகள், பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்லூரிக் கல்வி பயில உதவித்தொகை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான பொருள்கள் வழங்குவது, ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள் அமைக்க உதவி புரிவது மற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளை ஐ.வி.டி.பி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 06.01.2023 அன்று புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 2100 மாணவிகளுக்கு தலா ரூ.40- என மொத்தம் ரூ.84 ஆயிரம் மதிப்பிலான இனிப்புகளை (கேக்) வழங்கி, தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் தெரிவித்து கொண்டார்.
இதில் பள்ளியின் தாளாளர் அமலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் தேசிய அளவிலும், மாநில அளவிலும் விளையாட்டுத்துறையில் வெற்றி பெற்று சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும் இப்பள்ளியின் கல்வி வளர்ச்சிக்காக ஐ.வி.டி.பி நிறுவனம் இதுவரை ரூ.42.87 லட்சம் வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார். இந்நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவியர் மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






