என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரியில்  100-க்கும் மேற்பட்டோர் தி.மு.கவில்  இணைந்தனர்
    X

    சூளகிரியில் 100-க்கும் மேற்பட்டோர் தி.மு.கவில் இணைந்தனர்

    • அவர்களை அன்புடன் வரவேற்று பொன்னாடை, இனிப்புகள் வழங்கி கட்சியில் இணைத்து கொண்டனர்.
    • இதில் மாநில இளைஞர் அணி சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம்,சூளகிரி தாலுகா இம்மிடியாயக்கனப்பள்ளி ஊராட்சி பேடர்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல்வேறு கட்சியில் உள்ளவர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி சூளகிரி தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் தலைமையில் தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை அன்புடன் வரவேற்று பொன்னாடை, இனிப்புகள் வழங்கி கட்சியில் இணைத்து கொண்டனர்.

    இதில் மாநில இளைஞர் அணி சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் ஷேக் ரஷீத், பொதுக்குழு உறுப்பினர் பூசன்குமார், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சாலம்மாள், மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ராஜேந்திரன், ஹரி, முனிசந்திரன், ராமசந்திரன், ஜியாஉல்லா, சிவராஜ், சிவா, கர்ணல், மஞ்சு, ராஜேந்திரன், ராஜகுமார், மூத்து மணி, ஜெயக்குமார், கிருஷ்ணப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×