என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரிசன விழா"

    • நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நடராஜர், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஓசூர்,

    மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் நேற்று தரிசனத்தை முன்னிட்டு சிவகாமசுந்தரி உடனுறை நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நடராஜர், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் விழாவையொட்டி, சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல், ஓசூர் ராம் நகரில் உள்ள சொர்ணாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது.

    ×