search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5.58 லட்சம்குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
    X

    5.58 லட்சம்குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடமிருநது நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
    • பெண்ணேஸ்வரமடம் ஊராட்சியில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாய தோட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், பெண்ணேஸ்வரமடம் ஊராட்சியில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு கரும்பு கொள்முதல் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்களில் அரிசி இருப்பு ஆகியவற்றை கலெக்டர் ஜெயசந்திரபான ரெட்டி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-

    தமிழக முதல் -அமைச்சரின் ஆணைப்படி, தை பொங்கலை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1094 நியாய விலைக்கடைகளில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 934 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பொருட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை (இன்று) நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.ஆயிரம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. தரமான அரிசி, 6 அடிக்கும் குறையாத கரும்பு கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதற்காக கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்கள் கொண்டு வட்டார கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. தரமான கரும்பு கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்திடும் நோக்கில் கரும்பு பயிரிடப்பட்டுள்ள தோட்டங்களில் இக்குழுவினர் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு, கரும்பு தரங்களை உறுதி செய்து வருகின்றனர்.

    மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடமிருநது நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், பெண்ணேஸ்வரமடம் ஊராட்சியில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாய தோட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம்.

    மேலும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்குவதற்காக 559 டன் அரிசி மற்றும் சர்க்கரை தயார் நிலையில் உள்ளது. எனவே, குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் எவ்வித தொய்வு இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் சுந்தரம், குமார், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×