என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிப்காட்டை எதிர்த்து காத்திருப்பு போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் மயக்கம் அடைந்தார். அந்த பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற போது எடுத்தபடம்.

    சிப்காட்டை எதிர்த்து காத்திருப்பு போராட்டம்

    • ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட லட்சுமிபுரத்தை சேர்ந்த நாயணம்மா (வயது 70) தீடீரென மயங்கி விழுந்தார்.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சூளகிரி தாசில்தார் அனிதா, வருவாய் அலுவலர் ரமேஷ் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சில் ஈடுபட்டனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி, அயர்நள்ளி, நாகமங்களம் பகுதியில் அரசு சார்பில் விவசாய நிலங்களை எடுப்பதாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    அதே போல் நேற்று உத்தனப்பள்ளி வருவாய் அலுவலகம் அருகே விவசாயிகள் வேலு, சத்தியநாராயணன், பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமையில் 50- க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட லட்சுமிபுரத்தை சேர்ந்த நாயணம்மா (வயது 70) தீடீரென மயங்கி விழுந்தார்.

    பின்னர் அவரை மருத்துமனைக்கு தூக்கி சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    இதில் சூளகிரி தாசில்தார் அனிதா, வருவாய் அலுவலர் ரமேஷ் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×