என் மலர்
நீங்கள் தேடியது "இலவச வேட்டிகள் வழங்கல்"
- ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பில், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக வேட்டிகள் வழங்கப்பட்டன.
- வேட்டிகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி,
பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் வகையில் கடந்த, 2015 முதல் ஜனவரி 6-ந் தேதி உலக வேட்டி தினம் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச வேட்டி தினம் அனுசரிக்கப்படுவதன் நோக்கம், கைத்தறி மற்றும் நெசவு தொழிலை காப்பது மற்றும் இளைஞர்கள் வேட்டி அணியும் பழக்கத்தை ஊக்குவிப்பதும் ஆகும். அதன்படி, கிருஷ்ணகிரி கே.தியேட்டர் சாலையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஜவுளிக் கடையில் நேற்று உலக வேட்டி தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஸ்ரீவெங்கடேஸ்வரா நிர்வாக இயக்குனர் ரமேஷ் மற்றும் கடை ஊழியர்கள், 200க்கும் மேற்பட்டவர்கள் வேட்டி அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், கிருஷ்ணகிரி ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பில், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக வேட்டிகள் வழங்கப்பட்டன.
இது குறித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் ரமேஷ் கூறுகையில், சர்வதேச வேட்டிகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பெண்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில், சிறப்பு பிரிவாக பிரம்மாண்டமாய் விரிவுபடுத்தப்பட்ட முதல் தளத்தில் பெண்களுக்கான பேன்சி சாரீஸ் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணற்ற டிசைன்களில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு வயதினருக்கும் ஆடைகள் குவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.






