என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சிப்காட்டுக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உத்தனப்பள்ளியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி மற்றும் நாகமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் சிப்காட் அமைக்க 3,500 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உத்தனப்பள்ளியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இதனிடையே இன்று 14-வது நாளாக உத்தனப்பள்ளியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜி என்ற எழுத்தில் இன்பம் என்ற வார்த்தை இருக்குமாறும், எல் இருக்க வேண்டிய இடத்தில் திருவள்ளுவரின் உருவத்தை "மினிமலிஸ்டிக் ஆர்ட்" வகையில் அமைத்துள்ளார்.
    • இ என்று எழுத்து மற்றும் மற்ற அனைத்து எழுத்துக்களும் கூகுள் லோகோவில் இருக்கும் நிறங்களை கொண்டு அமைத்துள்ளார்.

    ஓசூர்:

    ஓசூர் பகுதியை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் லூகாஸ் (வயது 33), இவர் திருக்குறள் ஆர்வலர்.

    திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவருக்கு கூகுள் டூடுல் வெளியிட வலியுறுத்தி ஒரு கற்பனையான கூகுள் டூடலை "சுகர் ஆர்ட்" ஒன்றை அவர் வடிவமைத்துள்ளார்.

    5,000 மேற்பட்ட கூகுள் டூடுலை வரைந்து பார்த்து இதற்கு முன்பு வந்த எந்த டூடுல் மாதிரியும் இல்லாமல் இப்போது உருவாகியிருக்கும் இந்த டூடுல் தனித்தன்மையோடு உள்ளது. மேலும் அதே நேரத்தில் திருக்குறளையும் வெளிப்படுத்துமாறு வடிவமைத்துள்ளார்.

    ஜி என்ற எழுத்தில் திருக்குறள் என்ற வார்த்தை இருக்குமாறும், ஓ என்ற எழுத்தில் அறம் என்ற வார்த்தை இருக்குமாறும், ஓ என்ற எழுத்தில் பொருள் என்ற வார்த்தை இருக்குமாறும் வடிவமைத்துள்ளார்.

    ஜி என்ற எழுத்தில் இன்பம் என்ற வார்த்தை இருக்குமாறும், எல் இருக்க வேண்டிய இடத்தில் திருவள்ளுவரின் உருவத்தை "மினிமலிஸ்டிக் ஆர்ட்" வகையில் அமைத்துள்ளார். இ என்று எழுத்து மற்றும் மற்ற அனைத்து எழுத்துக்களும் கூகுள் லோகோவில் இருக்கும் நிறங்களை கொண்டு அமைத்துள்ளார்.

    கூகுள் நிறுவனம் இதுவரைக்கும் கன்பியூசியஸ், ஷேக்ஸ்பியர், லியோ டோல்ஸ்டோரி என அநேக உலக அறிஞர்களுக்கு டூடுல்ஸ் வெளியிட்டு கவுரவபடுத்தியுள்ளனர்.

    மற்ற உலக அறிஞர்களோடு ஒப்பிடும்போது திருவள்ளுவர் யாருக்கும் சளைத்தவரல்ல. அதனால் திருக்குறள் தந்த இந்திய ஞானி திருவள்ளுவருக்கும் ஒரு இன்டர்நேஷனல் அல்லது இந்தியன் டூடுல் வெளியிட வேண்டும் என்று எனது டூடுல் ப்ரோபோஸால்-ளை கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார்.

    • தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வந்து முகாமிட்டு இருந்தன.
    • பாதுகாப்பாக இருக்கு மாறு வனத்துறை யினர் எச்சரிக்கை விடுத்து ள்ளனர்.

    தேன்கனிகோட்டை ,

    கர்நாடக மாநிலம் பன்னா ர்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வந்து முகாமிட்டு இருந்தன.

    அதில் 40 யானைகள் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு சென்றன. மீதமுள்ள யானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்று அட்ட காசம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 30 யானைகள் திம்மசந்திரம், மேகலகவுண்டனூர், லிங்கதீ ரணப்பள்ளி கிராமங்களில் புகுந்தன. அந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து ராகி போர், வெள்ளரி செடிகள், பீன்ஸ் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின.

    இதனிடையே நேற்று காலை விவசாயிகள் தோட்டங்களுக்கு சென்ற போது பயிர்கள் சேதமடை ந்துள்ளதை கண்டுஅதிர்ச்சி அடைந்தனர்.

    சானமாவு காடு இதனிடையே நேற்று முன்தினம் 40 யானைகள் ஊடேதுர்க்கம் வழியாக ஓசூர் அருகே உள்ள சானமாவு காட்டுக்குள் முகாமிட்டு உள்ளன.

    இந்த யானைகளால் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து சென்றனர்.

    அப்போது யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சானமாவு காட்டில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், வனப்பகுதியை யொட்டி உள்ள சானமாவு, சினிகிரி பள்ளி, பீர்ஜேப்ப ள்ளி, போடூர், ராமாபுரம், ஆலியாளம் மற்றும் சுற்றுவ ட்டார கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கு மாறு வனத்துறை யினர் எச்சரிக்கை விடுத்து ள்ளனர்.

    மேலும் இரவு நேரங்களில் வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தினர். 

    • ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபக்கங்களிலும் நின்றிருந்தனர்.
    • போலீசாரும் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜகடை சாலையில் நேற்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடந்தது.

    மதியம், 3 மணிக்கு மாடுகளை ஊர்வலமாக கொண்டு சென்று பின்னர் சாலையில் ஓடவிட்டனர். எருதுவிடுவதைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபக்கங்களிலும் நின்றிருந்தனர்.

    ஆனால் பாதுகாப்பிற்காக தடுப்புகள் எதுவும் அமைக்காததால், மாடுகள் பல இடங்களில் கூட்டத்திற்குள் புகுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மிகவும் அச்சத்திற்குள்ளாகினர்.

    இதே போல், பழையபேட்டை மேல்தெருவில், 50-க்கும் மேற்பட்ட மாடுகளை ஓட விட்டனர். ஆனால் பாதுகாப்பிற்காக போலீசாரும் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியில் எருது விடும் விழா நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் ஓட விடப்பட்டன. இதற்காக அந்த பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.

    மாடுகள் துள்ளி குதித்தபடி ஓடி வந்தன. இதில் கிட்டம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள தங்களின் மாடுகளை அழைத்து வந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள வி.மாதேப்பள்ளியில், எருது விடும் விழா நடந்தது. இதில் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் எருதுகளைக் கொண்டு வந்திருந்தனர். எருது விடும் விழாவைக்காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர்.

    • டி.எஸ்.பி. அமலா அட்வின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவனுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரிநாள் பண்டிகையையொட்டி எருது விடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    அந்த வகையில் போச்சம்பள்ளி அருகேயுள்ள அத்திகானூர் கிராமத்தில் இன்று எருது விடும் விழா நடத்தப்பட்டது.

    இதில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர் உள்பட பல்வேறு மாவட்ட இளைஞர்கள் குவிந்தனர்.

    டி.எஸ்.பி. அமலா அட்வின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டது.

    இதனால் நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் கொத்து கொத்தாக விழுந்தனர். இதையடுத்து அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

    இதில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கவுதம் (வயது 12) என்ற சிறுவனுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து அந்த சிறுவனுக்கு அங்கிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிசிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • மனமுடைந்த ஆனந்த் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் வேங்கட ராயப்பா ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது.

    இதை வீட்டில் உள்ளவர்கள் தட்டி கேட்டுள்ளனர். இதில் மனமுடைந்த ஆனந்த் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஆனந்தின் தந்தை முருகேஷ் கொடுத்த புகாரின்பேரில் பாகலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல கிருஷ்ணகிரி தாலுகா பனந்தோப்பு பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மனைவி சித்ரா.

    இவர் தீராத வாயிற்று வலியால் தவித்து வந்துள்ளார்.இதில் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது தந்தை கிருஷ்ணன் தந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல பர்கூர் பகுதியை சேர்ந்த நாகப்பன் என்பவரது மனைவி கஸ்தூரி என்பவர் குடும்ப தகராறில் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஒரு கற்பனையான கூகுள் டூடலை "சுகர் ஆர்ட்" ஒன்றை அவர் வடிவமைத்துள்ளார்.
    • கூகுள் லோகோவில் இருக்கும் நிறங்களை கொண்டுஅமைத்துள்ளார்.

    ஓசூர்,

    ஓசூர் பகுதியை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் லூகாஸ் (வயது 33), இவர் திருக்குறள் ஆர்வலர்.

    திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவருக்கு கூகுள் டூடல் வெளியிட வலியுறுத்தி ஒரு கற்பனையான கூகுள் டூடலை "சுகர் ஆர்ட்" ஒன்றை அவர் வடிவமைத்துள்ளார்.

    5,000 மேற்பட்ட கூகள் டூடுலை அறைந்து பார்த்து இதற்கு முன்பு வந்த எந்த டூடல் மாதிரியும் இல்லாமல் இப்போது உருவாகியிருக்கும் இந்த டூடல் தனித்தன்மையோடு உள்ளது. மேலும் அதே நேரத்தில் திருக்குறளையும் வெளிப்படுத்துமாறு வடிவமைத்துள்ளார்.

    ஜி என்ற எழுத்தில் திருக்குறள் என்ற வார்த்தை இருக்குமாறும், ஓ என்ற எழுத்தில் அறம் என்ற வார்த்தை இருக்குமாறும், ஓ என்ற எழுத்தில் பொருள் என்ற வார்த்தை இருக்குமாறும் வடிவமைத்துள்ளார்.

    ஜி என்ற எழுத்தில் இன்பம் என்ற வார்த்தை இருக்குமாறும், எல் இருக்க வேண்டிய இடத்தில திருவள்ளுவரின் உருவத்தை "மினிமலிஸ்டிக் ஆர்ட்" வகையில் அமைத்துள்ளார். இ என்று எழுத்து மற்றும் மற்ற அணைத்து எழுத்துக்களும் கூகுள் லோகோவில் இருக்கும் நிறங்களை கொண்டுஅமைத்துள்ளார்.

    கூகுள் நிறுவனம் இதுவரைக்கும் கன்பியூசியஸ், ஷேக்ஸ்பியர், லியோ டோல்ஸ்டோரி என அநேக உலக அறிஞர்களுக்கு டூடுல்ஸ் வெளியிட்டு கவுரவபடுத்தியுள்ளனர்.

    மற்ற உலக அறிஞர்களோடு ஒப்பிடும்போது திருவள்ளுவர் யாருக்கும் சளைத்தவரல்ல. அதனால் திருக்குறள் தந்த இந்திய ஞானி திருவள்ளுவருக்கும் ஒரு இன்டர்நேஷனல் அல்லது இந்தியன் டூடல் வெளியிட வேண்டும் என்று எனது டூடல் ப்ரோபோஸால்-ளை கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார்.

    • 3 ஆசாமிகள் புகுந்து திருட முயன்றுள்ளது தெரியவந்தது.
    • மூன்று பேரையும் பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி போலீஸ் சரகம் ஓசூர் வெங்கடேஸ்வரா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 13-ந்தேதி வெளியூர் சென்றிருந்தார்.

    நேற்று இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளதாக செல்போன் மூலம் ரவிச்சந்திரனுக்கு அவரது மகள் தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனே ரவிச்சந்திரன் புறப்பட்டு வந்து பார்த்தபோது வீட்டுக்கு 3 ஆசாமிகள் புகுந்து திருட முயன்றுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து வெட்டுக்குள் செல்ல முயன்ற ரவிச்சந்திரனை இரும்புகம்பியல் தாக்கி விடுவோம் அன்று அவர்கள் மிரட்டினர்.

    பின்னர் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் உதவியுடன் அந்த மூன்று பேரையும் பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து முருகன் (வயது 38), சந்தோஷ்குமார் (26), யாரப்பாஷா (27) ஆகியோரை கைது எய்தனர்.

    • வீட்டின் முன்பக்க கதவை உடைத்து யாரோ மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளதாக செல்போன் மூலம் ரவிச்சந்திரனுக்கு அவரது மகள் தகவல் தெரிவித்துள்ளார்.
    • அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் உதவியுடன் மூன்று பேரையும் பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி போலீஸ் சரகம் ஓசூர் வெங்கடேஸ்வரா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 13-ந்தேதி வெளியூர் சென்றிருந்தார்.

    நேற்று இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து யாரோ மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளதாக செல்போன் மூலம் ரவிச்சந்திரனுக்கு அவரது மகள் தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனே ரவிச்சந்திரன் புறப்பட்டு வந்து பார்த்தபோது வீட்டுக்கு 3 ஆசாமிகள் புகுந்து திருட முயன்றுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து வீட்டுக்குள் செல்ல முயன்ற ரவிச்சந்திரனை இரும்பு கம்பியால் தாக்கி விடுவோம் என்று அவர்கள் மிரட்டினர்.

    பின்னர் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் உதவியுடன் அந்த மூன்று பேரையும் பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து முருகன் (வயது 38), சந்தோஷ்குமார் (26), யாரப்பாஷா (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • எம்.ஜி.ஆர்., சிலை மற்றும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாட வேண்டும்.
    • நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 106வது பிறந்தநாள் நாளை (ஜன. 17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கட்சி நிர்வாகிகள், அந்தந்த பகுதிகளில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலை மற்றும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாட வேண்டும்.

    அதுசமயம் லோக்சபா, சட்டசபை உறுப்பினர்களும், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அமைப்பு நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ருக்மணி, சத்யபாமா சமேதராய் கிருஷ்ணன் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில், தை 1ஐ முன்னிட்டு, 42ஆம் ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ விழா நேற்று நடந்தது.

    இதையொட்டி காலை, 4.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, ஹோமம் வளர்த்து, மந்திரங்கள் முழங்க காலை, 6.20 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ருக்மணி, சத்யபாமா சமேதராய் கிருஷ்ணன் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    இதே போல், தை 1 பொங்கல் திருநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்–ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், விநாயகருக்கு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டு, பொங்கல் வைத்து படைக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் மாவட்டம் முழுவதும் தை 1ஐ முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    • மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீஸ் பாய்ஸ் என்ற தலைப்பில் மத்தூர் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைத்தப்பட்டது.
    • இதில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களை ஊக்கிவிக்கும் வகையில் பொங்கல் தை திருநாளை முன்னிட்டு மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீஸ் பாய்ஸ் என்ற தலைப்பில் மத்தூர் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைத்தப்பட்டது.

    இதில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் எஸ்.ஐ.ஆனந்தன் மற்றும் போலீசார், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமையாசிரியை ஆரோக்கியமேரி செய்திருந்தார்.

    ×