என் மலர்
கிருஷ்ணகிரி
- 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வந்தனர்.
- காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மிட்டப்பள்ளி கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வந்தனர். இது பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மிட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இன்றுகாலை கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மிட்டப்பள்ளி பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மேலும் கிருஷ்ணகிரி நோக்கி செல்லக்கூடிய பேருந்து களும், திருவண்ணாமலை நோக்கி செல்லக்கூடிய பேருந்துகளும் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அமல அட்வின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் பகுதிக்கு குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைப்பதாக உறுதியளித்தனர். இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- 15 நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
- 100-க்கும் அதிகமான பறவை வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நிலங்களான ராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, தளி ஏரி, கெலவரப்பள்ளி அணை, பனை ஏரி உள்ளிட்ட 15 நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்தி கேயனி தலைமையில் உதவி வன பாதுகாவலர் ராஜமா ரியப்பன் மேற்பார்வையில், 40-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள், வன பணியாளர்கள் மற்றும் 50 தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி தொலை நோக்கு கருவி, கேமரா உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தி பாம்புண்ணி கழுகு, சிறிய கரும் பருந்து, செந்நாரை, மீன்கொத்திகள், கடலை குயில், மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட 100-க்கும் அதிகமான பறவை வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை உரிய படிவத்தில் பதிவு செய்யப்பட்டன.
கணக்கெடுப்பு பணியின்போது ஓசூர் டி.வி.எஸ். தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளில் மஞ்சள் மூக்குநாரை பறவை காணப்பட்டது. இந்த பறவை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இங்கு வந்து, பிப்ரவரி மாதத்தில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்து, பராமரித்து பிறகு செல்ல தொடங்கும்.
இந்த வகை பறவைகள் இங்கு கடந்த 20 ஆண்டுகளாக வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.
மேலும், அஞ்செட்டி அருகில் உள்ள பனை ஏரியில் பிளாக் ஸ்டார்க், அகலவாயன் உள்ளிட்ட அரிய வகை பறவையி னங்களும், தளி அருகே உள்ள வண்ணம்மாள் ஏரியில் பாம்புண்னி கழுகு பறவையினங்கள் காணப்ப ட்டன.
ஓசூரில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தினர் உதவி யுடன் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனை வருக்கும் வனத்துறையின் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- நாட்டு மாடுகளைப் பாதுகாக்கும் வகையில் நாட்டு மாடுகள் பங்கேற்கும் கால்நடை சந்தை ஒரு வாரம் நடைபெறுவது வழக்கம்.
- நோய் தாக்குதல் ஏற்பட்டதால், தற்போது, சந்தையில் மாடுகள் வாங்க வெளியூர் வியாபாரிகள் யாரும் வரவில்லை.
ஓசூர், ஜன,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்தில் மிகவும் பழமையான சப்பளம்மா தேவி கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் தை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின் போது, நாட்டு மாடுகளைப் பாதுகாக்கும் வகையில் நாட்டு மாடுகள் பங்கேற்கும் கால்நடை சந்தை ஒரு வாரம் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டில், தை திருவிழா கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, கால்நடை சந்தையும் தொடங்கியது. இச்சந்தைக்கு வழக்கம்போல கர்நாடக, ஆந்திர மாநில விவசாயிகள், வியாபாரிகள் அதிக அளவில் பங்கேற்று கால்நடைகளை வாங்கிச் செல்வார்கள் எனவும், ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
மேலும், அதற்கு தேவையான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர். ஆனால், கால்நடைகளுக்குப் பரவும் அம்மை நோய் காரணமாகச் சந்தைக்கு வழக்கத்தை விட கால்நடைகள் வருகை குறைந்தன. மேலும், விற்பனையும் சரிவைச் சந்தித்தது.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது:-
மூன்று மாநில மக்கள் கூடும் கால்நடை திருவிழா 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு நடைபெறும் சந்தையில் நல்ல தரமான நாட்டு மாடுகள் கிடைக்கும். மாடுகளை வாங்கவும், விற்கவும் அதிகளவில் விவசாயிகள், வியாபாரிகள் வருவது வழக்கம்.
இங்கு ஒரு ஜோடி மாடுகள் ரூ.2 லட்சம் வரை விற்பனையாகும். கரோனாவால் கடந்த இரு ஆண்டுகளாக நடந்த சந்தையில் போதிய அளவு மாடுகள் விற்பனையாகவில்லை. நிகழாண்டில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாகச் சந்தையில் கால்நடைகள் வர்த்தகம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்குதல் ஏற்பட்டதால், தற்போது, சந்தையில் மாடுகள் வாங்க வெளியூர் வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் விற்பனை குறைந்துள்ளது.
மேலும், நாட்டு மாடுகள் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து வருவதால், சந்தைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கையும் குறைந்தன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கல்லூரியில் 28-ந்தேதி அன்று பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
- கல்லூரியின் அனைத்து துறைத்தலைவர்களும் மாணவ மாணவியர்களின் பெயர்ப் பட்டியலை வாசித்தனர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 28-ந்தேதி அன்று பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் தனபால் வரவேற்புரை மற்றும் , கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார் . சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர்ஜெகநாதன் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 12- வது பட்டமளிப்பு விழாவில் அறிஞர் அண்ணா கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரியைச் சார்ந்த இளங்கலை பட்டப்படிப்பில் 1130 மாணவ, மாணவியர்களும், முதுகலை பட்டமேற் படிப்பில் 260 மாணவ , மாணவியர்களும், ஆய்வியல் நிறைஞர் ஆராய்ச்சி படிப்பில் 70 மாண,வ மாணவியர்களுக்கும் பட்டங்களை வழங்கினார்.
இதையடுத்து நேற்று 13-வது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் தனபால் வரவேற்புரை மற்றும் ஆண்டறிக்கையை வாசித்தார்.
விழாவில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் மற்றும் கல்விப் புல முதன்மையர் நாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பட்டங்களை வழங்கினார்.
அவருடைய சிறப்புரை யில், மாணவ மாணவி யர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாட அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். உயர் கல்வியில் ஆராய்ச்சி அறிவில் சிறந்து விளங்க வேண்டும். தாமஸ் ஆல்வா எடிசன் போல அறிவியல் துறையில் விஞ்ஞானியாக திகழ வேண்டும். பட்டப் படிப்புகளுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன.
தேர்வுகளுக்கு முன் தயாரிப்பு மற்றும் திட்டமிடுதல் முக்கியமானதாகும் .கல்வியினால் வறுமை நிலையைப் போக்க முடியும். பட்டப் படிப்புகளுடன் பல்வேறு தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் இளங்கலைப் பட்டப்படிப்பில் 1500 மாணவ, மாணவி யர்களுக்கும் , முதுகலைப் பட்டப்படிப்பில் 500 மாணவ, மாணவியர்களுக்கும், ஆய்வில் நிறைஞர் ஆராய்ச்சிப் படிப்பில் 200 மாண,வ மாணவியர்களுக்கும் பட்டங்களை வழங்கினார். விழாவில் வேளாங்கண்ணி கல்விக் குழுமம் மற்றும் கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியின் தாளாளர் கூத்தரசன், கல்லூரியின் செயலாளர் சுரேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பப்ளிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் விஜயலட்சுமி மற்றும் வேளாங்கண்ணி கல்விக் குழுமத்தின் அனைத்து முதல்வர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கல்லூரியின் அனைத்து துறைத்தலைவர்களும் மாணவ மாணவியர்களின் பெயர்ப் பட்டியலை வாசித்தனர். சேலம் பெரியார் பல்கலைக்கழக அளவில் கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்க பதக்கங்களைப் பெற்றனர். விழா இனிதே நாட்டுப்பண்ணுடன் நிறைவு பெற்றது.
- ஞாயிற்றுக்கிழமையில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மகா மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், தை அமாவாசைக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நிகழாண்டில் கடந்த 27ம் தேதி பிள்ளையாருக்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து விழா தொடங்கியது. 2-ம் நாளான சனிக்கிழமை காமாட்சி அம்மன் கோயில், தர்மராஜா கோயிலில் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நாளான நேற்று ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். அப்போது, அம்மனுக்கு நேர்த்திக்கடனாக ஆடு, கோழிகளை பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.
இதனை தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து அம்மனுக்கு படைத்தனர்.
சிறப்பு பூஜைகளை தொடர்ந்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- வியாபாரிகள் பணம் எடுத்துச் செல்வது என அனைத்துக்கும் மஞ்சப்பையை பயன்படுத்தினார்கள்.
- தமிழர்களின் கலாச்சாரமான மஞ்சள் பைக்கு உயிர் கொடுத்துள்ளார் முதல்-அமைச்சர் ஸ்டாலின் என்று பாராட்டுகின்றனர்.
கிருஷ்ணகிரி,
தமிழகத்திலுள்ள கிராமத்துப் பெரியவர்கள் அதிகம் பயன்படுத்திய, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத ஒரு பொருள் மஞ்சப்பை.
நமது முன்னோர்கள் பொருட்கள் வாங்குவதற்கு, பள்ளிக்கூடத்திற்கு புத்தகம் எடுத்துச் செல்லுதல், பணம் எடுத்து செல்லுதல், கோவிலுக்கு செல்வதற்கு, வீட்டில் மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, வியாபாரிகள் பணம் எடுத்துச் செல்வது என அனைத்துக்கும் மஞ்சப்பையை பயன்படுத்தினார்கள்.
இந்நிலையில் ஒவ்வொரு வணிக நிறுவனங்களும் தங்களது போட்டிகளுக்காக அழகான, விதவிதமான பைகளை சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் வகையில் தயாரித்தது. பொதுமக்கள் அதன் தீமைகளை உணராமல் அவற்றை உபயோகிப்பதால் மஞ்சள் பையை எடுத்துச் செல்வது குறைந்து விட்டது.
பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு மனிதர்கள், குழந்தைகள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் என அனைத்திற்கும் தீங்கு ஏற்படுகிறது.
இத்தனை பாதிப்புகளை உருவாக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்ய தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இயற்கை முறை தயாரிப்பு பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக தானியங்கி இயந்திரம் மூலம் 10 ரூபாய் நாணயம் செலுத்தி மஞ்சப்பை பெறும் விழிப்புணர்வு குறித்த அரங்கை அமைச்சர் காந்தி 14.01.2023 அன்று திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள் கூருடையில் அரசின் இந்த நடவடிக்கையால் மீண்டும் தமிழர்களின் கலாச்சாரமான மஞ்சள் பைக்கு உயிர் கொடுத்துள்ளார் முதல்-அமைச்சர் ஸ்டாலின் என்று பாராட்டுகின்றனர்.
- குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வந்தனர். இது பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- மக்கள் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மிட்டப்பள்ளி கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வந்தனர். இது பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மிட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இன்று காலை கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மிட்டப்பள்ளி பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அமல அட்வின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது.
- செயற்குழுக் கூட்டத்தை ஓசூரில் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது.
கூட்டட்திற்கு மாவட்டத் தலைவர் துரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன், இரங்கல் தீர்மானம் வாசித்து, கடந்த கால சங்க நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் சரவணபவன் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதல்&அமைச்சர் அனைத்து மாவட்டத்திலும் புத்தகத் திருவிழா நடத்த தொகை ஒதுக்கீடு செய்தமைக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வது. கிருஷ்ணகிரியில் முதலாவது புத்தகத் திருவிழாவை நடத்தவும், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்வது.
ஓசூர் பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களுக்கு, 90 சதவீத பணியும், கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலத்தவருக்கு 10 சதவீதம் பணியும் வழங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்துடன் இணைந்து ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. மாநில செயற்குழுக் கூட்டத்தை இம்மாவட்டதின் சார்பில் ஓசூரில் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஊரக பணி அனுபவத்திட்டத்தில் கிராமப்புற விவசாயிகளின் அனுபவத்தைக் கற்று வருகின்றனர்.
- தற்செயல் செலவுகளை சந்திக்கப் பயன்படுகிறது. விவசாயிகள் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை பட்டப்படிப்பு இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 11 பேர் கொண்ட குழுவினர் முகாமிட்டு, ஊரக பணி அனுபவத்திட்டத்தில் கிராமப்புற விவசாயிகளின் அனுபவத்தைக் கற்று வருகின்றனர்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் அமைந்துள்ள மாணிக்கனூர் கிராமத்தில், கிசான் கடன் அட்டை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அப்போது, இந்த அட்டை விவசாயக் கடனில் ஈடுபட்டுள்ள அனைத்து வங்கிக் கிளைகளும் வழங்குகின்றன.
இது விவசாயிகளின் உற்பத்தி கடன் தேவை, சாகுபடி செலவுகள் மற்றும் தற்செயல் செலவுகளை சந்திக்கப் பயன்படுகிறது. விவசாயிகள் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம்.
கடன் 3ஆண்டு வரை கிடைக்கும். பயிர் சாகுபடிக்குப் பிறகு ஒரு முறையில் திருப்பிச் செலுத்தலாம். இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நிரந்தர இயலாமை மற்றும் இறப்பு நேர்த்தால் ரூ-.50 ஆயிரம் வரை காப்பீடும், இடர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரையும் வழங்கப்படுகிறது.
செயல்திறன் மற்றும் தேவைகளைப் பொறுத்து கடன் வரம்புகளை மேம்படுத்தலாம் என்று எடுத்துரைத்தனர்.
- ஓசூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
- பாகலூர் ராமன்தொட்டி வனப்பகுதியில் பிரியங்கா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரிகை அருகே உள்ள நெரிகம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மகள் பிரியங்கா (வயது 22). மாற்றுத்திறனாளி. இவர், கடந்த சில மாதங்களாக ஓசூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
பேரிகை அருகே முதுகுறிக்கி கிராமத்தை சேர்ந்த டிரைவர் ஸ்ரீதர் (24) என்பவர் பிரியங்காவை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீதர், காதலியின் தந்தையான வெங்கடசாமியை போனில் தொடர்பு கொண்டு உள்ளார்.
அப்போது, உனது மகளை கடத்திவிட்டோம். ரூ.10 லட்சம் கொடுத்தால் மட்டுமே அவரை விடுவிப்போம் என மிரட்டியதாக தெரிகிறது. இதனிடையே நேற்று காலை பாகலூர் ராமன்தொட்டி வனப்பகுதியில் பிரியங்கா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார், பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக பிரியங்காவின் காதலன் ஸ்ரீதரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.
ஸ்ரீதர், காதலி பிரியங்காவை நேற்று முன்தினம் மாலை வெளியில் சென்று வரலாம் என கூறி ராமன்தொட்டி வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்கள் 2 பேரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஸ்ரீதர் காதலியின் செல்போனை வாங்கி அவரது தந்தை வெங்கடசாமியை தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளார்.
அவர் பணம் கொடுக்க மறுத்ததால் காதலியை கழுத்தை நெரித்து ஸ்ரீதர் கொலை செய்தது போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ஸ்ரீதரை கைது செய்தனர். தனியார் வங்கி பெண் ஊழியர் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் தொடர்ந்து ஸ்ரீதரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பிரியங்கா கொலையில் மர்மம் உள்ளது என்றும், இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், அனைவரையும் கைது செய்யக்கோரியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரிகை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
- ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து ரையாடல் நிகழ்ச்சிகள் நடந்தது.
- அரசு புறம்போக்கு நிலங்கள், தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் உள்ள கே.பி.என் .லட்சுமி மஹாலில் நேற்று மாலை பா.ம.க கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து ரையாடல் நிகழ்ச்சிகள் நடந்தது.
இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
சூளகிரி அருகே உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க அரசு 3034 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதனை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்கள், தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி சுங்கச்சா வடியை இடமாற்றம் செய்திட வேண்டும். அதுவரை உள்ளூர் மக்களிடம் சுங்க க்கட்டணத்தில் முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும்.
சென்னையில் நடந்த குடியரசு தினவிழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கள்ளச்சா ராயத்தை ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை யினருக்கு விருது வழங்குகிறார்.
அதே நாளில் கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் சாராயம் அதிகளவில் விற்பனை செய்த ஊழியர்களுக்கு நற்சான்றிதழை, மாவட்ட கலெக்டர் வழங்குகிறார்.
மதுவிலக்கு கொண்டு வருவதில், தி.மு.க அரசின் நிலைப்பாடு, கொள்கை குறித்து முதல்-அமைச்சர் தெளிவுப்படுத்திட வேண்டும்.
என்.எல்.சி. நிறுவனத்தை தனியாருக்கு விற்க போகிறோம் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் 25ஆயிரம் ஏக்கர் நிலங்கள் யாருக்காக கையகப்படுத்த உள்ளன? வேளாண்மை துறை அமைச்சர் விவசாயிகள் காக்க வேண்டும். மாறாக விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து, என்.எல்.சி.க்கு கொடுக்க முயற்சி செய்து வருகிறார்.
இடைத்தேர்தல் தேவைற்ற ஒன்று. இதனால் மக்களுக்கும், அங்கு பிரச்சாரத்தில் ஈடுபடும் அமைச்சர்களுக்கு நேரம் விரயம்.
கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் 200 கிரானைட் குவாரிகள் அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு ரூ.1லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி, தொடர்புடைய அலுவலர்கள், அவருக்கு உறுதுணையாக இருப்பவ ர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் தொழிற்சா லைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து சட்டமாக நிறைவேற்றிட வேண்டும்.
ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் வேலூர் மாவட்டம் வரை செயல்படுத்த வேண்டும். காவிரி உபரிநீர் திட்டம் செயல்படுத்தினால் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஊசி மூலம் 3 பேரும் ஒருவருக்கொருவர் போட்டு உள்ளனர்.
- 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்தவர்கள் அசீம் (வயது 20), உபேத், (20), சுபாஷ் (25). நண்பர்கள். இவர்கள் 3 பேரும் நேற்று மதியம் உபேத்துக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் பீரோ ஏற்றி கொண்டு காவேரிப்பட்டணத்திற்கு சென்றனர்.
அங்கு உறவினர் வீட்டில் பீரோவை இறக்கி விட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு திரும்பினர். ேபாச்சம்பள்ளி அருகே நெடுங்கல் தென்பெண்ணை ஆற்றின் பாலத்தின் அருகில் போதைக்காக 10 வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் 3 பேரும் ஒருவருக்கொருவர் போட்டு உள்ளனர்.
பின்னர் அவர்கள் மீண்டும் சரக்கு வாகனத்தில் ஊருக்கு புறப்பட்டனர். கரடியூர் அருகே வந்தபோது அசீம், உபேத் ஆகிய 2 பேரும் திடீெரன மயங்கி தண்ணீர் கேட்டுள்ளனர். இதனால் சரக்கு வேனை நிறுத்தி அப்பகுதியில் உள்ள பேக்கரி கடையில் 3 பேரும் தண்ணீர் குடித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் அசீம், உபேத், சுபாஷ் ஆகிய 3 பேரும் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






