ஊத்தங்கரை அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல்

குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வந்தனர். இது பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மக்கள் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்தங்கரை அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல்
Published on

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மிட்டப்பள்ளி கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வந்தனர். இது பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மிட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இன்று காலை கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மிட்டப்பள்ளி பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அமல அட்வின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com