என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்ற 8 பேர் கைதாகி உள்ளனர்.
    • வாகனம் உள்ளிட்ட ரூ.7 லட்சம் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்ற 8 பேர் கைதாகி உள்ளனர்.

    சூளகிரி பகுதியில் பெங்களூருவை சேர்ந்த அப்சல், அப்துல்மஜீத் ஆகியோர் மினிவேனில் புகையிலை பொருட்களை கடத்திவந்த போது ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் கோமசந்திரம் பகுதியில் பிடிபட்டனர். அவர்களை சூளகிரி போலீசார் கைது செய்து வாகனம் உள்ளிட்ட ரூ.7 லட்சம் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல ஒடுதேபள்ளி பகுதியில் மல்லேசன் என்பவரும், சாமனூர் பகுதியில் முருகன் என்பவரும் கைதாகினர்.

    பர்கூர் பகுதியில் அகமது பாஷா என்பவர் ஜெகதேவி காலம்மால் காலனியில் புகையிலை பொருட்கள் விற்ற போது சிக்கினார். பாரத கோவில் தெரு பகுதியில் கார்த்திகேயன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    அறியனபள்ளி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற நாகராஜ் என்பவர் வேப்பனபள்ளி போலிசால் கைது செய்யப்பட்டார். உப்பாராப்பள்ளி பகுதியில் ரமேஷ் என்பவரும், உளிவீரனப்பள்ளி பகுதியில் பர்வதம்மா என்பவரும் புகையிலை விற்ற போது தளி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    • வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு யானை அவரை விரட்டியது.
    • மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள தேவர்பெட்டா கிராமத்தை சேர்ந்தவர் லகுமய்யா (வயது 53). விவசாயி.

    இவர் நேற்று தளி அருகே பங்களாசரகம் வனப்பகுதியில் ஆடுகள் மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு யானை அவரை விரட்டியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த லகுமய்யா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் யானை அவரை விடாமல் துரத்தி சென்று தாக்கி தூக்கி வீசியது. இதில் லகுமய்யா படுகாயம் அடைந்தார்.

    பின்னர் யானை அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இந்த நிலையில் லகுமய்யாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர்.

    அவர்கள் படுகாயம் அடைந்து கிடந்த லகுமய்யாவை மீட்டு சிகிச்சைக்காக தளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தளி வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்த லகுமய்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 29-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
    • புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஜாகீர் மோட்டூர் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த 29-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து அவரது தந்தை சங்கர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் தனது மகளை புது ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அரவிந்த் (வயது 24) என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மத்திகிரி வனத்துறை குடியிருப்பை சேர்ந்த விக்னேஸ்வரி (23) என்பவர் கடந்த 30-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    இது குறித்து அவரது கணவர் கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதபோல பழைய மத்திகிரி பகுதியை சேர்ந்த சுதா என்ற இளம்பெண் மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் ரகு தந்த புகரின்பேரில் மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல உத்தனப்பள்ளி அருகேயுள்ள உப்பர தம்மன்டரபள்ளி பகுதியை சேர்ந்த காரிஎலப்பா (58) என்பவரும் மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தம்பி மாரப்பா கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம் நடந்தது.
    • போட்டி தேர்வில் எதிர்கொள்பவர்கள் நிச்சயம் வெற்றி பெறுகிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம் நடந்தது.

    இதற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் பேசியதாவது:-

    வாழ்க்கையில் வெற்றி பெற தன்மைபிக்கையே முக்கியம். போட்டி தேர்வுகளில் வெற்றியை தீர்மானிக்க திறமைசாலி, அறிவாளியாக இருக்க வேண்டும் என்பது அல்ல. தொடர் முயற்சியில் இருந்தால் வெற்றி நிச்சயம்.

    அரசு வேலை என படிப்பவர்கள், சேவை செய்யும் என்கிற எண்ணத்துடன் படிக்க வேண்டும். குறிப்பாக தன் குடும்பத்தையும், சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என்கிற நோக்கில் போட்டி தேர்வில் எதிர்கொள்பவர்கள் நிச்சயம் வெற்றி பெறுகிறார்கள்.

    நீ என்னவாக ஆக நினைக்கிறாயோ, அதுவாகவோ ஆகிறாய். நீங்கள் தேர்வு என நினைத்து அச்சம் அடைந்தால், அச்சம் உங்களை சூழந்து கொள்ளும். மாறாக அச்சமின்றி எதிர் கொள்ள துணிந்தால், எளிதாக தேர்வினை எழுதலாம். கடமையை, கடமையாக செய்தால் வெற்றி, கடமைக்கு செய்தால் தோல்வி.

    எனவே, கல்லூரி மாணவிகள் படிக்கும் போதே, போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ள தங்களை தயார் செய்துக் கொள்ளுங்கள். கல்லூரி படிப்பிற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தால், உங்களது நோக்கம் நிறைவேறாது.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • ராகுல்காந்தி நாடு முழுவதும் 3 ஆயிரத்து 970 கிலோ மீட்டர் பயணம் செய்து காஷ்மீரில் நிறைவு செய்தார்.
    • காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

    கிருஷ்ணகிரி,

    கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி நாடு முழுவதும் 3 ஆயிரத்து 970 கிலோ மீட்டர் பயணம் செய்து காஷ்மீரில் நிறைவு செய்தார்.

    இந்த நடைபயணம் வெற்றிகரமாக நிறைவடைந்ததையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில், நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் லலித் ஆண்டனி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா வரவேற்றார்.

    இதில் மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார். இதில், மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் தகி, ஊடக பிரிவு மாவட்டத் தலைவர் கமலக்கண்ணன், இளைஞர் காங்கிரஸ் ஆதில், வேப்பனப்பள்ளி கல்யாணி, மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டுரங்கன், வட்டாரத் தலைவர் சித்திக், இர்பான், மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர் அஜீஸ்உல்லா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கவியரசன், மாவட்ட துணைத் தலைவர் நரசிம்மன், மாவட்ட பொதுச் செயலாளர் கமால்கான், நகரத் துணைத் தலைவர் மரிய இருதயம், நகர செயலாளர் அமுல்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல், விஜயராஜ் என்கிற குட்டி, பாபு, சொக்கலிங்கம், சரவணகுமார், மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் சதாம் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருட வந்தவர் என நினைத்து கயிற்றால் கட்டி போட்டு சரமாரியாக தாக்கினர்.
    • 7 பேரையும் போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னாறு பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பதப்படுத்தும் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த கட்டிட காண்டிராக்டர் பணிகளை ஓசூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் எடுத்து நடத்தி வருகிறார். அங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் வேலையை விட்டு நின்று விட்டார். இதனிடையே சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கந்தனூரில் வசிக்கும் தனது அண்ணன் மகன் பிரபாகரன் (வயது 33) என்பவரிடம், சின்னாறில் வேலை உள்ளதாகவும், நீ அங்கு வேலை பார்க்குமாறு நாராயணன் கூறினார்.

    அதை நம்பி பிரபாகரன் சின்னாறுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலைக்கு வந்தார். அங்கேயே தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 28-ந் தேதி இரவு அந்த பகுதியில் உள்ள கம்பி வேலி அருகில் பிரபாகரன் அமர்ந்து இருந்தார். அந்த வழியாக என்ஜினீயர் தங்கராஜ் மற்றும் வடமாநில வாலிபர்கள் 5 பேர் வந்தனர்.

    அப்போது அவர்கள் பிரபாகரனை பார்த்து இரும்பு பொருட்களை திருட வந்தவர் என நினைத்து கயிற்றால் கட்டி போட்டு சரமாரியாக தாக்கினர். மேலும் என்ஜினீயர் தங்கராஜ் கட்டிட உரிமையாளருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

    மேலும் பிரபாகரனை அந்த பகுதியில் உள்ள அறையில் கட்டி போட்டு இரும்பு கம்பியால் அவர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் பிரபாகரன் படுகாயம் அடைந்தார். மேலும் அவரிடம் இரும்பு பொருட்களை கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று அவர்கள் மிரட்டினர். மேலும் இவற்றை வீடியோவாக எடுத்து, ஊத்தங்கரையில் உள்ள நாராயணனுக்கு அனுப்பி வைத்து, அவர் எடுத்து சென்ற இரும்பு பொருட்களை கொடு. இல்லாவிட்டால் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொடு என மிரட்டினர்.

    இதுகுறித்து நாராயணன், சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று கன்டெய்னர் அறை ஒன்றில் கயிற்றால் கட்டி அடைத்து வைத்திருந்த பிரபாகரனை மீட்டனர். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து காண்டிராக்டர் ஓசூர் சப்தகிரி நகரை சேர்ந்த மணி (47), என்ஜினீயர் தருமபுரி நல்லம்பள்ளி தாலுகா திம்மராயன் கொட்டாய் தங்கராஜ் (33), வடமாநிலத்தை சேர்ந்த ஷியாம்சுந்தர் (46), பாலேந்தர் (28), சுசில்குமார் (24), அர்ஜூன் (24), திப்பந்தர் சோக்கியா (22), ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். 

    • சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
    • குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

    இந்த தொழிற்சா லைகளில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் அல்லாமல், வட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான தொழி லாளர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி வேலை செய்கின்றனர்.

    இங்கு பணிக்கு வருபவ ர்கள் வறுமையின் காரணமாக தங்களது குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி வைக்காமல், ஓட்டல்கள், பேக்கரி, மெக்கானிக் கடைகள், செங்கல் சூளை என பல்வேறு பணிகளுக்கு சேர்த்து விடுகின்றனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும் போது, ஓசூர் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் குடியேறி உள்ளனர். அவர்கள் தங்களது குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதில்லை. சிலரது குழந்தைகள் பிச்சை எடுக்கின்றனர்.

    இந்நிலையில் மத்திய அரசின் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு திட்டத்தில் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். அதன் மூலம் குழந்தை தொழிலாளர்கள் பலரும் படித்து பெரிய பதவிகளில் உள்ளனர்.

    ஆனால் தற்போது குழந்தைத்தொழிலாளர்கள் ஒழிப்பு திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மீண்டும் இந்த குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் இதற்காக தனியாக ஒரு குழுவை அமைத்து, ஓசூர் பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனரா? என கண்காணித்து அவர்களை மீதக வேண்டும். இதன் மூலம் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரியை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • காந்தி நினைவு நாளை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காந்தி நினைவு நாளை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி, உறுதிமொழியை படிக்க அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் திரும்ப படித்து எடுத்துக் கொண்டனர்.

    முன்னதாக இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், தாட்கோ பொது மேலாளர் யுவராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மரம் ஒன்று அன்பு மீது விழுந்து நசுக்கியது.
    • மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே அன்பு உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள மஞ்சமேடு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருக்கு சொந்தமாக தோப்பு உள்ளது. இதில் உள்ள மரங்களை வெட்டி விற்க பழனி முடிவு செய்துள்ளார்.

    இந்நிலையில் தருமபுரியை அடுத்துள்ள வாணியகாரன்கொட்டாய் பகுதியை சேர்ந்த மர வியாபாரி நடராஜன் என்பவர் பழனியிடம் பேசி மரங்களை வெட்டி வாங்க முடிவு செய்தார்.

    அதன்படி நடராஜன், அவரது மகன் அன்பு (வயது 28) மற்றும் மரம் வெட்டும் தொழிலாளர்களுடன் மஞ்சமேடு சென்றனர். அங்கு தொழிலாளிகள் மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். வெட்டப்பட்ட மரங்களை கயிறு கட்டி கீழே இழுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக வெட்டப்பட்ட மரம் ஒன்று அன்பு மீது விழுந்து நசுங்கியது. இதில் படுகாயம் அடைந்த அன்பை உடனடியாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்து முதலுதவி அளித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே அன்பு உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து நடராஜன் தந்த புகாரின்பேரில் பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • 39 புதிய தொழு நோயாளிகள் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • மாதம் ரூ.2 ஆயிரம் வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காந்தி நினைவு தினத்தையொட்டி ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அனைத்து அலுவலர்களும் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:-

    மாவட்டத்தில் இந்த ஆண்டு 39 புதிய தொழு நோயாளிகள் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 குழந்தைகளும், 3 உடல் ஊனமு ற்றோரும், 19 பெண் நோயாளிகளும் கண்டறிய ப்பட்டுள்ளனர். தற்போது 49 பேருக்கு கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழுநோயால் பாதிக்கப்பட் டவர்களுக்கு 40 சதவீதம், அதற்கு மேல், தொழுநோய் ஊனமுற்ற நபர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 262 பேர் பயன் அடைந்து வருகிறார்கள். தொழுநோய் ஊனம் சரி செய்ய அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ரூ.8 ஆயிரம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். நமது மாவட்டத்தில் அறுவை சிகிச்சையால் 30 பேர் பயன் அடைந்துள்ளனர். கால்களை பாதுகாக்க காலணிகள் ஆண்டிற்கு 2 ஜோடிகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 263 பேருக்கு வழங்கப்படுகிறது. தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டத்தில் தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உறுதிமொழி ஏற்றல், அனைத்து பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளிலும் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொழுநோய் கண்டுபிடிப்பு கணக்கெடுப்பு பணிகள் என மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    வெளிர்ந்த, சிவந்த, உணர்ச்சியற்ற தேமல் தான் தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள். அதை கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் ஊனம் வராமல் தடுக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொழில் வளர்ச்சி கழகத்தின் செயல் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • தீபக்ஜேக்கப் கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    தமிழகத்தில் 11 மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராகஇருந்து வந்த ஜெய சந்திரபானு ரெட்டி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் செயல் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குனர் தீபக்ஜேக்கப் கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • 10-ம் வகுப்பில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • குடியரசு தின விழா நடைபெற்றபோது மாணவிகளுக்கு கணித பாடம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் 1,600 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். 10-ம் வகுப்பில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி பள்ளி வளாகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றபோது மாடியில் வகுப்பறைகளில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கணித பாடம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.

    விழாவில் அந்த மாணவ, மாணவிகளை கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    குடியரசு தின விழா அன்று மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்ட விவகாரம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×