என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் குழந்தை தொழிலாளர்கள்:குழு அமைத்து மீட்க கலெக்டருக்கு கோரிக்கை
    X

    கிருஷ்ணகிரியில் குழந்தை தொழிலாளர்கள்:குழு அமைத்து மீட்க கலெக்டருக்கு கோரிக்கை

    • சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
    • குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

    இந்த தொழிற்சா லைகளில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் அல்லாமல், வட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான தொழி லாளர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி வேலை செய்கின்றனர்.

    இங்கு பணிக்கு வருபவ ர்கள் வறுமையின் காரணமாக தங்களது குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி வைக்காமல், ஓட்டல்கள், பேக்கரி, மெக்கானிக் கடைகள், செங்கல் சூளை என பல்வேறு பணிகளுக்கு சேர்த்து விடுகின்றனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும் போது, ஓசூர் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் குடியேறி உள்ளனர். அவர்கள் தங்களது குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதில்லை. சிலரது குழந்தைகள் பிச்சை எடுக்கின்றனர்.

    இந்நிலையில் மத்திய அரசின் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு திட்டத்தில் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். அதன் மூலம் குழந்தை தொழிலாளர்கள் பலரும் படித்து பெரிய பதவிகளில் உள்ளனர்.

    ஆனால் தற்போது குழந்தைத்தொழிலாளர்கள் ஒழிப்பு திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மீண்டும் இந்த குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் இதற்காக தனியாக ஒரு குழுவை அமைத்து, ஓசூர் பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனரா? என கண்காணித்து அவர்களை மீதக வேண்டும். இதன் மூலம் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரியை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×