என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழுநோய் ஊனமுற்ற 262 பேருக்கு மாத உதவித்தொகை
    X

    தொழுநோய் ஊனமுற்ற 262 பேருக்கு மாத உதவித்தொகை

    • 39 புதிய தொழு நோயாளிகள் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • மாதம் ரூ.2 ஆயிரம் வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காந்தி நினைவு தினத்தையொட்டி ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அனைத்து அலுவலர்களும் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:-

    மாவட்டத்தில் இந்த ஆண்டு 39 புதிய தொழு நோயாளிகள் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 குழந்தைகளும், 3 உடல் ஊனமு ற்றோரும், 19 பெண் நோயாளிகளும் கண்டறிய ப்பட்டுள்ளனர். தற்போது 49 பேருக்கு கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழுநோயால் பாதிக்கப்பட் டவர்களுக்கு 40 சதவீதம், அதற்கு மேல், தொழுநோய் ஊனமுற்ற நபர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 262 பேர் பயன் அடைந்து வருகிறார்கள். தொழுநோய் ஊனம் சரி செய்ய அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ரூ.8 ஆயிரம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். நமது மாவட்டத்தில் அறுவை சிகிச்சையால் 30 பேர் பயன் அடைந்துள்ளனர். கால்களை பாதுகாக்க காலணிகள் ஆண்டிற்கு 2 ஜோடிகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 263 பேருக்கு வழங்கப்படுகிறது. தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டத்தில் தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உறுதிமொழி ஏற்றல், அனைத்து பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளிலும் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொழுநோய் கண்டுபிடிப்பு கணக்கெடுப்பு பணிகள் என மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    வெளிர்ந்த, சிவந்த, உணர்ச்சியற்ற தேமல் தான் தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள். அதை கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் ஊனம் வராமல் தடுக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×