பிளஸ் 2 மாணவி உள்பட 4 பேர் மாயம்

கடந்த 29-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிளஸ் 2 மாணவி உள்பட 4 பேர் மாயம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஜாகீர் மோட்டூர் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த 29-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை சங்கர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் தனது மகளை புது ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அரவிந்த் (வயது 24) என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மத்திகிரி வனத்துறை குடியிருப்பை சேர்ந்த விக்னேஸ்வரி (23) என்பவர் கடந்த 30-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இது குறித்து அவரது கணவர் கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதபோல பழைய மத்திகிரி பகுதியை சேர்ந்த சுதா என்ற இளம்பெண் மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் ரகு தந்த புகரின்பேரில் மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல உத்தனப்பள்ளி அருகேயுள்ள உப்பர தம்மன்டரபள்ளி பகுதியை சேர்ந்த காரிஎலப்பா (58) என்பவரும் மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தம்பி மாரப்பா கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com