என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறுபடியும் மஞ்சப்பை"

    • வியாபாரிகள் பணம் எடுத்துச் செல்வது என அனைத்துக்கும் மஞ்சப்பையை பயன்படுத்தினார்கள்.
    • தமிழர்களின் கலாச்சாரமான மஞ்சள் பைக்கு உயிர் கொடுத்துள்ளார் முதல்-அமைச்சர் ஸ்டாலின் என்று பாராட்டுகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழகத்திலுள்ள கிராமத்துப் பெரியவர்கள் அதிகம் பயன்படுத்திய, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத ஒரு பொருள் மஞ்சப்பை.

    நமது முன்னோர்கள் பொருட்கள் வாங்குவதற்கு, பள்ளிக்கூடத்திற்கு புத்தகம் எடுத்துச் செல்லுதல், பணம் எடுத்து செல்லுதல், கோவிலுக்கு செல்வதற்கு, வீட்டில் மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, வியாபாரிகள் பணம் எடுத்துச் செல்வது என அனைத்துக்கும் மஞ்சப்பையை பயன்படுத்தினார்கள்.

    இந்நிலையில் ஒவ்வொரு வணிக நிறுவனங்களும் தங்களது போட்டிகளுக்காக அழகான, விதவிதமான பைகளை சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் வகையில் தயாரித்தது. பொதுமக்கள் அதன் தீமைகளை உணராமல் அவற்றை உபயோகிப்பதால் மஞ்சள் பையை எடுத்துச் செல்வது குறைந்து விட்டது.

    பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு மனிதர்கள், குழந்தைகள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் என அனைத்திற்கும் தீங்கு ஏற்படுகிறது.

    இத்தனை பாதிப்புகளை உருவாக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்ய தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இயற்கை முறை தயாரிப்பு பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக தானியங்கி இயந்திரம் மூலம் 10 ரூபாய் நாணயம் செலுத்தி மஞ்சப்பை பெறும் விழிப்புணர்வு குறித்த அரங்கை அமைச்சர் காந்தி 14.01.2023 அன்று திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள் கூருடையில் அரசின் இந்த நடவடிக்கையால் மீண்டும் தமிழர்களின் கலாச்சாரமான மஞ்சள் பைக்கு உயிர் கொடுத்துள்ளார் முதல்-அமைச்சர் ஸ்டாலின் என்று பாராட்டுகின்றனர். 

    ×