என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓய்வூதியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்
- ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது.
- செயற்குழுக் கூட்டத்தை ஓசூரில் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது.
கூட்டட்திற்கு மாவட்டத் தலைவர் துரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன், இரங்கல் தீர்மானம் வாசித்து, கடந்த கால சங்க நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் சரவணபவன் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதல்&அமைச்சர் அனைத்து மாவட்டத்திலும் புத்தகத் திருவிழா நடத்த தொகை ஒதுக்கீடு செய்தமைக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வது. கிருஷ்ணகிரியில் முதலாவது புத்தகத் திருவிழாவை நடத்தவும், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்வது.
ஓசூர் பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களுக்கு, 90 சதவீத பணியும், கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலத்தவருக்கு 10 சதவீதம் பணியும் வழங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்துடன் இணைந்து ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. மாநில செயற்குழுக் கூட்டத்தை இம்மாவட்டதின் சார்பில் ஓசூரில் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






