என் மலர்
கிருஷ்ணகிரி
- போலீசார் பொன்மலை கோவில் பகுதியில் ரோந்து சென்றனர்.
- தப்பி ஓடிய நியாமத், சேது, ஷாருக்கான், வடிவேல் ஆகிய 4 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பொன்மலை கோவில் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள மாந்தோப்பு ஒன்றில் ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை மடக்க முயற்சித்தபோது வஞ்சி (எ) சதீஷ்குமார் (வயது 29) என்பவர் சிக்கினார். மற்ற நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து சதீஷ்குமறை கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கிருந்து தப்பி ஓடிய நியாமத், சேது, ஷாருக்கான், வடிவேல் ஆகிய 4 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.
- முதன்மை அஞ்சல் அதிகாரியால் காணொளி காட்சி மூலம் நடத்தப்படுகிறது.
- காணொளி காட்சியின் உள்ளீட்டுக் குறியீடும், பாஸ்வேர்டும் ஓய்வூதியருக்கு அனுப்பி வைக்கப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய அளவிலான அஞ்சல ஓய்வூதியர்கள் சார்ந்த குறைதீர்ப்பு நாள் கூட்டம் வருகிற மார்ச் மாதம் நாளை காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலக வளாகத்தில், முதன்மை அஞ்சல் அதிகாரியால் காணொளி காட்சி மூலம் நடத்தப்படுகிறது.
தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், தங்களது புகார்களை என தபால் உறையின் மீது எழுதி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி கோட்டம், கிருஷ்ணகிரி-635 001 என்ற விலாசத்திற்கு வருகிற 24-ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், அஞ்சலக ஓய்வூதியர்கள் தங்களின் குறைகளை மின்னஞ்சல் முகவரிக்கும் மேற்குறிப்பிட்டுள்ள தேதிக்குள் அனுப்பலாம்.
ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதிய கணக்கு எண், ஓய்வூதியம் தொடர்பான பிற விவரங்கள் அனைத்தையும், செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றையும் முழுமையாக குறிப்பிட வேண்டும் காணொளி காட்சியின் உள்ளீட்டுக் குறியீடும், பாஸ்வேர்டும் ஓய்வூதியருக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும், ஓய்வூதியர்கள் தாங்கள் அனுப்பும் புகார்களில் ஓய்வூதியம் தொடர்பானகுறைகளை முழு விவரங்களுடன் குறிப்பிட்டு எழுத வேண்டும். சட்டரீதியான பிரச்சினைகள் மற்றும் அரசின் கொள்கைகள் சார்ந்த குறைகளைத் தவிர்க்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வேலை செய்யும் இடத்திலும் பணம் கையாடல் செய்துள்ளார்.
- சிக்கல்களால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 19). கல்லூரி மாணவர். இவர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் இவரது காதலை ஏற்க வில்லை என்று கூறப்படுகிறது. இதில் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்த தமிழரசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாய் லலிதா கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்துள்ளார்.
ஓசூர் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் குமாரபிள்ளை (75). சமீப காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த இவர் வீட்டில் யாருமில்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் விஜயானந்த் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்துள்ளார்.
தேன்கனி கோட்டை அரசகுப்பம் அருகேயுள்ள பேன்சுபள்ளி பகுதியை சேர்ந்த கிஷோர் (25) என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். பல இடங்களில் கடன் வாங்கி நெருக்கடியில் இருந்துள்ளார்.இந்நிலையில் வேலை செய்யும் இடத்திலும் பணம் கையாடல் செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட சிக்கல்களால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து அவரது தந்தை நாகராஜ் தேன்கனி கோட்டை போலீசில் புகார் செய்துள்ளார்.
- சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார்.
- தேடப்பட்டு வந்த சின்னசாமி, காளியப்பன், புலிபாண்டி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்துள்ள வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது28). ராணுவவீரரான இவரது மனைவி பிரியா. பிரபுவின் சகோதரர் பிரபாகரன். இவரும் ராணுவ வீராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அருகே தெருவில் உள்ள பொதுக்குழாயில் பிரியா துணி துவைத்து கொண்டிருந்தார். இதனை அதே பகுதியை சேர்ந்த கவுன்சிலர் சின்னசாமி (55) என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சின்னசாமி தரப்பில் ராஜாபாண்டி, பூபதி, கருணாநிதி, குருசூரியமூர்த்தி, வேடியப்பன் ஆகியோர் சேர்ந்து பிரியா, பிரபு, பிரபாகரன், தேவராஜ், மாதையன் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக பிரியா நாகரசம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சின்னசாமி, காளியப்பன், புலிபாண்டி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கண்டறியப்பட்ட 22 கிராமங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது.
- 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 15 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கஞ்சா விற்பனை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய 5 காவல் உட்கோட்டங்கள் உள்ளன. இதில் ஊத்தங்கரை உட்கோட்டத்தில் 59 கிராமங்களும், 268 குக்கிராமங்களும், பர்கூர் கோட்டத்தில் 51 கிராமங்களும், 242 குக்கிராமங்களும் உள்ளன.
அதேபோன்று கிருஷ்ணகிரியில் 82 கிராமங்களும், 378 குக்கிராமங்களும், ஓசூரில் 95 கிராமங்களும், 314 குக்கிராமங்களும், தேன்கனிக்கோட்டையில் 92 கிராமங்களும், 622 குக்கிராமங்களும் உள்ளன. கடந்த நவம்பர் மாதம் தனிப்பிரிவு, சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையத்தில் சேகரித்த தகவல்படி ஊத்தங்கரை உட்கோட்டத்தில் எந்த கிராமத்திலும் கஞ்சா விற்பனை இல்லை. பர்கூர், கிருஷ்ணகிரி உட்கோட்டத்தில் தலா 5 கிராமங்களிலும், ஓசூர் உட்கோட்டத்தில் 18 கிராமங்களிலும், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் 22 கிராமத்தில் குறைந்த அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் கஞ்சா விற்பனை இல்லை. கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கண்டறியப்பட்ட குருவிநாயனப்பள்ளி, வரமலை குண்டா உள்ளிட்ட 31 கிராமங்களிலும் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ேமலும் குறைந்த அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கண்டறியப்பட்ட 22 கிராமங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது.
இந்த கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதின் காரணமாக 20 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 81 பேர் கைது செய்யப்பட்டனர். 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 15 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. கஞ்சா விற்பனையை தடுக்க இந்த மாதம் 112 பேர் மீது வரலாற்று பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. கஞ்சா விற்றால் பொதுமக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை 94454 37356 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பள்ளி நிர்வாகத்தினர் ரூ.42 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டனர்.
- மங்கையர்கரசி மற்றும் அலுவலக உதவியாளர் திம்மராயன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் தனியார் மழலையர் பள்ளி உள்ளது. இந்த பள்ளியை மஞ்சுளா என்பவரிடம் இருந்து ஓசூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த அரவிந்த் வாங்கி உள்ளார்.
இந்த பள்ளிக்கு ஏற்கனவே பல்வேறு அனுமதி சான்றிதழ்கள் இல்லாத நிலையில், பள்ளி நிர்வாகி அரவிந்த் புதிதாக தீயணைப்பு துறை, போக்குவரத்து துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கொண்டார்.
இந்தநிலையில் வருவாய்த்துறையிடம் பள்ளிக்கு பொது கட்டிட அனுமதிக்கு அரவிந்த் விண்ணப்பித்தார். கடந்த 11-ந்தேதி ஓசூர் தாசில்தார் கவாஸ்கர், துணை தாசில்தார் மங்கையர்கரசி ஆகியோர் அந்த மழலையர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சில குறைபாடுகளை அவர்கள் கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும் என கூறினர்.
மேலும் பொது கட்டிட அனுமதிக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தாசில்தார் கவாஸ்கர் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பள்ளி நிர்வாகத்தினர் ரூ.42 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, லஞ்சம் கொடுக்க விரும்பாத பள்ளி நிர்வாகி அரவிந்த், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூ.42 ஆயிரத்தை பள்ளி நிர்வாகி அரவிந்திடம் கொடுத்து தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் ஆகியோரிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர். போலீசாரின் ஆலோசனையின் பேரில் அரவிந்த் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் கவாஸ்கர், துணை தாசில்தார் மங்கையர்கரசி ஆகியோரை சந்தித்தார்.
அப்போது அவர்கள் அலுவலக உதவியாளா் திம்மராயனிடம் பணத்தை கொடுக்குமாறு கூறினர். இதையடுத்து அரவிந்த் பணத்தை அலுவலக உதவியாளரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் தாசில்தார் கவாஸ்கர், துணை தாசில்தார் மங்கையர்கரசி மற்றும் அலுவலக உதவியாளர் திம்மராயன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார், 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து தாசில்தார், துணை தாசில்தார் ஆகிய 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அலுவலக உதவியாளர் திம்மராயன் விடுவிக்கப்பட்டார். பின்னர் கைதான 2 பேரையும் கிருஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- அரசுஅனுமதி பெற்று எருது விடும் விழா நடைபெற்றது.
- 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா இம்மிடிநாயக்கனப்பள்ளி அருகே பேடர்பள்ளி கிராமத்தில் அரசுஅனுமதி முலம் எருது விடும் விழா நடைபெற்றது.
இந்தவிழாவிற்கு இம்மிடிநாயக்கனப்பள்ளி, பேடர் ப்பள்ளி, சின்னார், ஒடையனுர், சின்னகானப்பள்ளி, பீர்பள்ளி, முருக்கனப்பள்ளி, சாமல் பள்ளம், மேலுமலை, காளிங்காவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுக்கள் 2000-க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்தனர்.
300-க்கும் மேற்பட்ட எருதுகள் கொண்டு வரப்பட்டன. அரசு விதிகளின் படி எருது ஒடுபாதை அமைத்து இரு புறமும் தடுப்பு சுவர் அமைத்து பார்வையாளர்களுக்கு எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் அமைக்கப் பட்டு இருந்தது.
எருதுகளை வரிசையில் நிற்க வைத்து அதன் பின் நம்பர் மூலம் அறிவிப்பு செய்த பின்பு ஒட விட்டனர் .இந்த விழாவிற்கு சூளகிரி காவல் ஆய்வாளர் ரஜினி தலைமையில் காவலர்கள் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கால்நடை மருத்துவர்கள் வருகை தந்து முகாம் அமைத்து இந்தனர். அரசு மருத்துவர் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு வாகனம் என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் எருது விடும் விழா நடந்தது.
- தனது மனைவியுடன் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
- தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடு போனது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஹட்கோ அருகேயுள்ள கதிரேபள்ளி பகுதியை சேர்ந்தவர் குடியப்பா (வயது 45). இவர் தனது மனைவியுடன் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
சம்பவத்தன்று இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 27 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து குடியப்பா கொடுத்த புகாரின்பேரில் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடனை தேடி வருகின்றனர்.
- பாரத் கல்வி குழுமங்களின் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைப்பெற்றது. .
- தூங்கினால் அவர்களை விழிப்புறச்செய்யும் விதமாக ஒரு அறிவியல் படைப்பினை செய்திருந்தார்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி சுபேதார் மேட்டில் இயங்கிவரும் பாரத் இன்டர்நேஷனல் செகன்டரி பள்ளியின் பாரத் கல்வி குழுமங்களின் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைப்பெற்றது.
இவ்விழாவில் பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி வரவேற்புரையாற்றினார். தாளாளர் கிருஷ்ணவேணி மணி முன்னிலை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) முனிநாதன் கலந்து கொண்ட அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் அவர் பேசுகையில் பாரத் கல்வி நிறுவனங்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் கடந்த 35-ஆண்டுகளில் மாநில அளவில் முதலிடம் மற்றும் சிறப்பிடம் பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களாக உருவாகியுள்ளனர்.
ஆகவே இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் நீங்கள் சிறந்த படைப்பாற்றலுடன் திகழ வேண்டும் என்றும் காட்சிபடுத்தப்பட்ட அறிவியல் படைப்புகள் மற்றும் மாதிரிகளும் சிறப்பாக உள்ளன என்றும் பாராட்டி பேசினார்.
மேலும் இக்கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் 850-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தப்பட்டது.
எட்டாம் வகுப்பு மாணவன் பிரதீஷ் வாகன ஓட்டுநர்கள் தூங்கினால் அவர்களை விழிப்புறச்செய்யும் விதமாக ஒரு அறிவியல் படைப்பினை செய்திருந்தார்.
அப்படைப்பானது அனைவரின் பாராட்டு களையும் பெற்றது. இவ்வி ழாவில் தேர்வு செய்ய ப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு பாரத் கல்வி குழுமங்களின் நிறுவன தலைவர் பரிசு தொகை வழங்கி பேசுகையில் இன்றைய மாணக்கர்களே எதிர்கால ஆராய்சியாளர்கள்.
இந்த அறிவியல் கண்காட்சியை ஒரு தூண்டு கோளாக எடுத்துக்கொண்டு எதிர்வரும் காலத்தில் மேலும் சிறந்த அறிவியல் படைப்புகளை படைத்திட வேண்டும் என்று கூறினார்.
இவ்விழாவின் இறுதியில் பள்ளியின் இயக்குனர் டாக்டர் சந்தோஷ் மற்றும் பள்ளியின் துணை செயலாளர் உஷா சந்தோஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.
அறிவியல் கண்காட்சி ற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஹரிநாத் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் ஆகியோர் செய்திருந்தனர்.
- அரசு பஸ் ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டது.
- இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி,
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் அசோக் (வயது 32). இவரது நண்பர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜய் (20). இருவரும் தனியார் நிறுவன தொழிலாளிகள்.
நேற்று தங்களது புல்லட்டில் தளி-ஓசூர் சாலையில் சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த தளி போலீசார் விரைந்து சென்று அசோக், விஜய் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து அசோக்கின் தந்தை நாகப்பா கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தென்னை விவசாயிகள் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
- சிறு கன்றுகளாக இருக்கும்போதே தேங்காய் பூவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயிகள் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில் லட்சக்கணக்கில் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து அதனை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு பெருமளவு அனுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக பெருமளவு மழை பெய்ததால் லட்சக்கணக்கான தென்னங்கன்றுகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்தன.
எதிர்பார்த்த அளவு தென்னங்கன்றுகளை வாங்க வியாபாரிகள் முன் வராததால் இதை சிறு கன்றுகளாக இருக்கும்போதே தேங்காய் பூவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மருத்துவ குணம் கொண்ட இந்த தேங்காய் பூவை வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து பெற்று செல்வதாக தெரிவிக்கின்றன.
- விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
- 1 கிலோ முள்ளங்கி ரூ.1-க்கு விற்பனை ஆவதால் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் விட்டு விட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள பனங்காட்டூர், போச்சம்பள்ளி, ஜம்புகுட்டப்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் கத்திரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது கிராமங்களில் அதிகளவில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். குறைந்த நாளில் அதிகம் லாபம் தரும் என்பதால் விவசாயிகள், முள்ளங்கி சாகுபடி செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முள்ளங்கி 1 கிலோ முள்ளங்கி ரூ.1-க்கு விற்பனை ஆவதால் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் விட்டு விட்டனர். இதை அறிந்த வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக சென்று குறைந்த விலைக்கு முள்ளங்கி தோட்டத்தை வாங்கி வியாபாரிகளே கூலியாட்களை வைத்து அறுவடை செய்து மூட்டைகளாக கட்டி சந்தைகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர்.






