என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பணம் கையாடல் தொடர்பாக வாலிபர் தற்கொலை
  X

  பணம் கையாடல் தொடர்பாக வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேலை செய்யும் இடத்திலும் பணம் கையாடல் செய்துள்ளார்.
  • சிக்கல்களால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

  கிருஷ்ணகிரி,

  கிருஷ்ணகிரி ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 19). கல்லூரி மாணவர். இவர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் இவரது காதலை ஏற்க வில்லை என்று கூறப்படுகிறது. இதில் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்த தமிழரசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாய் லலிதா கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்துள்ளார்.

  ஓசூர் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் குமாரபிள்ளை (75). சமீப காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த இவர் வீட்டில் யாருமில்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் விஜயானந்த் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்துள்ளார்.

  தேன்கனி கோட்டை அரசகுப்பம் அருகேயுள்ள பேன்சுபள்ளி பகுதியை சேர்ந்த கிஷோர் (25) என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். பல இடங்களில் கடன் வாங்கி நெருக்கடியில் இருந்துள்ளார்.இந்நிலையில் வேலை செய்யும் இடத்திலும் பணம் கையாடல் செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட சிக்கல்களால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து அவரது தந்தை நாகராஜ் தேன்கனி கோட்டை போலீசில் புகார் செய்துள்ளார்.

  Next Story
  ×