என் மலர்
நீங்கள் தேடியது "ராணுவ வீரர் சாவு"
- சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார்.
- தேடப்பட்டு வந்த சின்னசாமி, காளியப்பன், புலிபாண்டி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்துள்ள வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது28). ராணுவவீரரான இவரது மனைவி பிரியா. பிரபுவின் சகோதரர் பிரபாகரன். இவரும் ராணுவ வீராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அருகே தெருவில் உள்ள பொதுக்குழாயில் பிரியா துணி துவைத்து கொண்டிருந்தார். இதனை அதே பகுதியை சேர்ந்த கவுன்சிலர் சின்னசாமி (55) என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சின்னசாமி தரப்பில் ராஜாபாண்டி, பூபதி, கருணாநிதி, குருசூரியமூர்த்தி, வேடியப்பன் ஆகியோர் சேர்ந்து பிரியா, பிரபு, பிரபாகரன், தேவராஜ், மாதையன் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக பிரியா நாகரசம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சின்னசாமி, காளியப்பன், புலிபாண்டி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






