என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • வெங்கடேஷ்வரா சுவாமியை வீதி வீதியாக மக்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தேர் இழுத்து சென்றனர்.
    • 5000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா காமன்தொட்டி ஊராட்சியை சேர்ந்த கோபசந்திரம் கிராமத்தில் தென்பன்ணை ஆற்றுகறையோரம் அமைந்த 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவில் திருவிழா நடை பெற்றது.

    இதனையொட்டி 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகள், பல்லக்குகள், நாடகம், அன்னதானம் என பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது.

    பல நாட்களாக வாசனை நிறைந்த வண்ண பூக்களால் அலங்கரிக்கபட்ட வெங்கடேஷ்வரா சுவாமியை வீதி வீதியாக மக்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தேர் இழுத்து சென்றனர்.

    இந்நிகழ்ச்சியில் ஆந்திரா, கர்நாடகா, மற்றும் தமிழக பகுதியில் கோபந்திரம், ஒசூர், காமன்தொட்டி, பாத்த கோட்டா, அகரம், தொரப்பள்ளி, பேரண்ட ப்பள்ளி, உத்தன ப்பள்ளி, பீர் ேஜப்பள்ளி, 5000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் கோவில் நிர்வா கிகள், தொழில் அதிபர்கள், நாராயண சுவாமி, ராமமூர்த்தி, ேகாபால் மற்றும் முனிராஜ், பி, டி, ஒ, விமல் ரவிக்குமார் மற்றும் நிர் வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் பிரபு, அடித்துக் கொல்லப்பட்டார்.
    • ராணுவ வீரரான என் கணவர் கொலை செய்யப்பட்ட நிலையில் எனக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் பிரபு, அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் பிரபுவின் அண்ணனும், ராணுவ வீரருமான பிரபாகரனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

    கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் பிரபுவின் மனைவி அனிதா மற்றும் பிரபாகரன் மனைவி பிரியா ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    பிரபுவின் மனைவி அனிதா கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கருணை அடிப்படையில் வேலை

    எனது கணவர் பிரபு ராணுவத்தில் பணிபுரிந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வந்த அவரை, கடந்த பிப்ரவரி மாதம் சின்னசாமி தரப்பினர் பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் இறந்தார். இது தொடர்பாக நாகரசம்பட்டி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நானும் எனது இரு மகள்களும் கணவரின் வருமானத்தை நம்பி வாழ்ந்தோம்.

    தற்போது ஆதரவின்றி தவித்து வருகிறோம். நான் பட்டப்படிப்பு முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளேன். ராணுவ வீரரான என் கணவர் கொலை செய்யப்பட்ட நிலையில் எனக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதே போல பிரபுவின் அண்ணன் பிரபாகரனின் மனைவி அளித்துள்ள மனுவில், எலும்பு முறிவுடன் சிகிச்சை பெற்று வரும் என் கணவர் ராணுவ பணிக்கு செல்லமுடியாத சூழலில் பட்டப்படிப்பு முடித்துள்ள எனக்கு கருணை அடிப்படையில் ஏதேனும் பணி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    • தொழிற் சாலைகளிலிருந்து, குப்பை கழிவுகளை கொண்டு வந்து வனப்பகுதியில் கொட்டி, இரவோடு இரவாக தீ வைத்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
    • வனப்பகுதி அழிவது மட்டுமின்றி, அங்கு வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வனக்கோட்டத்தின் மொத்த பரப்பளவு 1501 சதுர கி.மீ., ஆகும். இங்கு 468 வகையான தாவர இனங்களும், 36 வகையான பாலூட்டிகளும், 272 வகையான பறவை இனங்களும் காணப்படுகி ன்றன.

    மேலும், அதிக எண்ணிக்கையிலான தேக்கு, ஈட்டி, சந்தனம், ஜாலாரி, உசில், ஆச்சான் மற்றும் பொருசு மர வகைகளும், யானைகள், காட்டு மாடுகள், புள்ளிமான்கள், கடமான்கள், கரடிகள், எறும்புத் திண்ணி, சிறுத்தைகள் மற்றும் மயில்கள் போன்ற வன உயிரினங்களும், அரியவகை விலங்குகளான சாம்பல்நிற அணில்கள், எகிப்திய கழுகு போன்ற வன உயிரினங்களும் காணப்படுகின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக ஓசூரில் இருந்து தருமபுரிக்கும், அஞ்செட்டி வழியாக தருமபுரிக்கும் பிரதான சாலை செல்கிறது. அதேபோல், மலை கிராமங்களுக்கும், வனப்பகுதியில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சாலையில் செல்லும் சிலர், சிகரெட் புகைத்து விட்டு அணைக்காமல் வீசி செல்வதால், அடிக்கடி தீப்பற்றி எரிவது வாடிக்கையாக உள்ளது.

    மேலும், ஒரு சில தனியார் தொழிற்சாலைகளிலிருந்து, குப்பை கழிவுகளை கொண்டு வந்து வனப்பகுதியில் கொட்டி, இரவோடு இரவாக தீ வைத்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதனால், வனப்பகுதி அழிவது மட்டுமின்றி, அங்கு வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே, அவற்றை பாதுகாக்க குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு 3 குப்பை எடுக்கும் டிராக்டர், வண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • ஊராட்சிகளுக்கு குப்பை எடுக்கும் டிராக்டர் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கப்பட்டது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதி சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு 3 குப்பை எடுக்கும் டிராக்டர், வண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதனை சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமையில் பேரண்டபள்ளி, சூளகிரி, பேரிகை ஆகிய ஊராட்சிகளுக்கு குப்பை எடுக்கும் டிராக்டர் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ)கோபாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) விமல் ரவிக்குமார் ஒன்றிய குழு உறுப்பினர் நாகேஷ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சசிகலா பாக்கியராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்செல்விராஜா ராஜம், பேரண்டபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா, ஊராட்சி துணைத் தலைவர் நஞ்சப்பா, செயலர் செல்வராஜ், சூளகிரி ஊராட்சி மன்ற தலைவர் கலைசெல்வி ராமன், பேரிகை ஊராட்சி மன்ற தலைவர் பிரவின்குமார், கட்சி நிர்வாகிகள் ராமசந்திரன் ஹரி, செல்வம், சித்ராஜ், ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
    • கூலிக்கு கூட பணம் கிடைக்காததால் விவசாயிகள் தக்காளி பழங்களை பறிக்காமல் நிலங்களில் மாடுகளை விட்டு மேய்க்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, சூளகிரி வட்டார பகுதியில் தக்காளி செடிகளை அதிக அளவில் பயிர் செய்து உள்ளனர்.

    தற்போது தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது.

    இதனால் தக்காளி பறிப்பு கூலிக்கு கூட பணம் கிடைக்காததால் விவசாயிகள் தக்காளி பழங்களை பறிக்காமல் நிலங்களில் மாடுகளை விட்டு மேய்க்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

    • மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற உள்ளது.
    • கூட்டம் வருகிற 6-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 6-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கை மனுக்களை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் யு.டி.ஐ.டி. அட்டை நகலுடன் அளித்து பயன் பெறுமாறு கலெக்டர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • நினைத்தது நிறைவேற வேண்டி வாழைப்பழத்தில் தவணை இலை அருகம்புல் சுற்றி தேரின் மீது எறிந்தனர்.
    • நகர மெங்கும் அன்னதானம், நீர்மோர், பானகம், பாசிப்பருப்பு ஆகியவை தேர் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள ஸ்ரீ சவுந்தரவல்லி சமேத ஸ்ரீ பேட்டராய் சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமான வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    பழமையும் சிறப்புமிக்க இந்தக் கோவிலின் தேர் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு தேர் திருவிழா நிகழ்ச்சிகள் கல்யாண உற்சவத்துடன் தொடங்கி கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், அம்சவாசன உற்சவம் நடைபெற்றது. நேற்று இரவு திங்கள்கிழமை 9 மணிக்கு கஜேந்திர மோக்ஷம் என்ற ராமபாணம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தளி எம்.எல்.ஏ ராமசந்திரன், ஒசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ், தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    முதலில் சவுந்தரவல்லி தாயார் தேரை இழுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி பேட்டராய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு 5 அடுக்கு தேரில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து வேத மந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தி கோஷத்துடன் கோஷங்களை முழங்கினார்கள் விழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் மனதில் நினைத்தது நிறைவேற வேண்டி வாழைப்பழத்தில் தவணை இலை அருகம்புல் சுற்றி தேரின் மீது எறிந்தனர்.

    மேலும் தங்களின் விளை நிலங்களில் தானியங்கள் நன்கு விளையும் வேண்டும் என வேண்டிக் கொண்டு தேரின் மீது நவதானியங்களை எறிந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

    தேன்கனிக்கோட்டை நகர மெங்கும் அன்னதானம், நீர்மோர், பானகம், பாசிப்பருப்பு ஆகியவை தேர் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இத்திருவிழாவில் தேன்கனிக் கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் கர்நாடக, ஆந்திர மாநில இருந்தும் பல்லா யிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இன்று இரவு சம்பூர்ண இராமாயணம் நாடகம் நடைபெறுகிறது. நாளை காலை 8 மணி அளவில் எருதுவிடும் விழா, இரவு 8மணிக்கு பாட்டு கச்சேரி தொடர்ந்து பல்லக்கு உற்சவ வாணவேடிக்கை நடைபெறும்.

    தேன்கனிகோட்டை டி.எஸ்.பி. தலைமையில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கடந்த 1999-ம் ஆண்டு தமிழக அரசு, இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கியது.
    • பட்டாக்களை கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்யவில்லை.

    கிருஷ்ணகிரி,

    சூளகிரி துப்புகானப்பள்ளியை அடுத்த டி.குருபரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த, 50-க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    துப்புகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அஞ்சலகிரி ஆதிதிராவிடர் காலனி பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு தமிழக அரசு, இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கியது. ஆனால் அந்த பட்டாக்களை கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்யவில்லை. மேலும் எங்களுக்கு மயான வசதியும் இல்லாமல் அவதிப்படுகிறோம். இது குறித்து விசாரித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • கோபசந்திரம் பகுதியில் அந்த ஒட்டகங்களை கட்டி வைத்து உள்ளனர்.
    • ஒட்டகங்களை அதன் உரிமையாளர்கள் யாராக இருந்தாலும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கொண்டு செல்லலாம்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, ஒசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஒரம் கோபசந்திரம் பகுதியில் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட 5 ஒட்டகங்களை சிலர் ஓட்டி வந்து உள்ளனர்.

    இந்நிலையில் கோபசந்திரம் பகுதியில் அந்த ஒட்டகங்களை கட்டி வைத்து உள்ளனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தும், சிலர் செல்பி எடுத்து சென்றனர்.

    ஆனால் நீண்டநேரமாகியும் யாரும் அந்த ஒட்டகங்களை பிடித்து செல்லவராததால் இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து ஒட்டகங்களை மீட்டு வருவாய்துறையினரிடம் ஒப்படைத்தனர். நேற்று வரை அந்த ஒட்டகங்களை தேடி யாரும் வராததால், 5 ஒட்டகங்களையும் இன்று மாவட்ட காலநடை துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    மர்ம நபர்கள் வெளிமாநிலங்களில் இருந்து 5 ஒட்டகங்களை சூளகிரி பகுதிக்கு பலி கொடுப்பதற்காக அல்லது சவாரி செய்வதற்காக என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், இந்த ஒட்டகங்களை அதன் உரிமையாளர்கள் யாராக இருந்தாலும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கொண்டு செல்லலாம்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    • கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், நாம் தமிழர் கட்சி சார்பில்,உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • உத்தனப்பள்ளியில், விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருட்டிணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஊராட்சிகளில் சிப்காட் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக்கோரி, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து உத்தனப்பள்ளியில், 88 நாட்களாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், நாம் தமிழர் கட்சி சார்பில்,உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு மண்டல செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலளார் சிவராமன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    மாவட்ட செயலாளர் வேல்கணேசன், வேப்பனப்பள்ளி தொகுதி செயலாளர் சிவசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் ராவணன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகதீசபாண்டியன், ராசா அம்மையப்பன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் உள்பட பலர் கண்டன உரை ஆற்றினார்கள்.

    இந்த போராட்டத்தில், கெலமங்கலம் அருகே அயர்னபள்ளி, நாகமங்கலம், உத்தனப்பள்ளி ஊராட்சிகளில் 3,800 ஏக்கர் விவசாய நிலங்களை அபகரித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை வெளியேற்றத் துடிப்பதாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், உத்தனப்பள்ளியில் விவசாயிகள் தொடர்ந்து 88 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பப்பட்டன. 

    • ராகுல்காந்தி எம்.பி., பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.
    • இந்த கூட்டத்திற்கு தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டம், 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வாசிக்கப்பட்டு, பல்வேறு செலவின கணக்கிற்கு ஒப்புதல் பெறப்பட்டது.

    கூட்டத்தில் கலந்து கொண்ட 5-வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் அப்தூர் ரஹ்மான், அவதூறு வழக்கு தொடர்பான தீர்ப்பின் அடிப்படையில் ராகுல்காந்தி எம்.பி., பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.

    இந்த கூட்டத்திற்கு தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மனோகரன் முன்னிலை வகித்தார். மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மகாதீபாராதனை செய்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் போஸ் பஜாரில் ஸ்ரீ சீதா, லட்சுமண சமேத கோதண்டராமர் சாமி கோவில் உள்ளது.இங்கு ராமநவமி உற்சவங்கள் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில், நேற்று சாமிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர், மகாதீபாராதனை செய்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, சாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவாக அழைத்துசெல்லப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (திங்கட்கிழமை) சந்திர மண்டல உற்சவமும், நாளை (செவ்வாய்கிழமை) திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டி தலைவரும், முன்னாள் ஓசூர் எம்.எல்.ஏ.வுமான கே.கோபிநாத் தலைமையில் செயலாளர் நீலகண்டன், தலைமை அர்ச்சகர் கேசவ பட்டாச்சாரியார், அர்ச்சகர் ரகுராமன் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

    ×