search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனப்பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்
    X

    வனப்பகுதியில் குப்பை கழிவுகள் தீ பிடித்து எரிவதை படத்தில் காணலாம்

    வனப்பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்

    • தொழிற் சாலைகளிலிருந்து, குப்பை கழிவுகளை கொண்டு வந்து வனப்பகுதியில் கொட்டி, இரவோடு இரவாக தீ வைத்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
    • வனப்பகுதி அழிவது மட்டுமின்றி, அங்கு வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வனக்கோட்டத்தின் மொத்த பரப்பளவு 1501 சதுர கி.மீ., ஆகும். இங்கு 468 வகையான தாவர இனங்களும், 36 வகையான பாலூட்டிகளும், 272 வகையான பறவை இனங்களும் காணப்படுகி ன்றன.

    மேலும், அதிக எண்ணிக்கையிலான தேக்கு, ஈட்டி, சந்தனம், ஜாலாரி, உசில், ஆச்சான் மற்றும் பொருசு மர வகைகளும், யானைகள், காட்டு மாடுகள், புள்ளிமான்கள், கடமான்கள், கரடிகள், எறும்புத் திண்ணி, சிறுத்தைகள் மற்றும் மயில்கள் போன்ற வன உயிரினங்களும், அரியவகை விலங்குகளான சாம்பல்நிற அணில்கள், எகிப்திய கழுகு போன்ற வன உயிரினங்களும் காணப்படுகின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக ஓசூரில் இருந்து தருமபுரிக்கும், அஞ்செட்டி வழியாக தருமபுரிக்கும் பிரதான சாலை செல்கிறது. அதேபோல், மலை கிராமங்களுக்கும், வனப்பகுதியில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சாலையில் செல்லும் சிலர், சிகரெட் புகைத்து விட்டு அணைக்காமல் வீசி செல்வதால், அடிக்கடி தீப்பற்றி எரிவது வாடிக்கையாக உள்ளது.

    மேலும், ஒரு சில தனியார் தொழிற்சாலைகளிலிருந்து, குப்பை கழிவுகளை கொண்டு வந்து வனப்பகுதியில் கொட்டி, இரவோடு இரவாக தீ வைத்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதனால், வனப்பகுதி அழிவது மட்டுமின்றி, அங்கு வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே, அவற்றை பாதுகாக்க குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×