என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டையில் பேரூராட்சி மன்ற கூட்டம்
- ராகுல்காந்தி எம்.பி., பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.
- இந்த கூட்டத்திற்கு தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டம், 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வாசிக்கப்பட்டு, பல்வேறு செலவின கணக்கிற்கு ஒப்புதல் பெறப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட 5-வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் அப்தூர் ரஹ்மான், அவதூறு வழக்கு தொடர்பான தீர்ப்பின் அடிப்படையில் ராகுல்காந்தி எம்.பி., பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.
இந்த கூட்டத்திற்கு தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மனோகரன் முன்னிலை வகித்தார். மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






