என் மலர்
நீங்கள் தேடியது "அரசு வேலை கேட்டு மனு"
- இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் பிரபு, அடித்துக் கொல்லப்பட்டார்.
- ராணுவ வீரரான என் கணவர் கொலை செய்யப்பட்ட நிலையில் எனக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் பிரபு, அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் பிரபுவின் அண்ணனும், ராணுவ வீரருமான பிரபாகரனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் பிரபுவின் மனைவி அனிதா மற்றும் பிரபாகரன் மனைவி பிரியா ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
பிரபுவின் மனைவி அனிதா கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கருணை அடிப்படையில் வேலை
எனது கணவர் பிரபு ராணுவத்தில் பணிபுரிந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வந்த அவரை, கடந்த பிப்ரவரி மாதம் சின்னசாமி தரப்பினர் பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் இறந்தார். இது தொடர்பாக நாகரசம்பட்டி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நானும் எனது இரு மகள்களும் கணவரின் வருமானத்தை நம்பி வாழ்ந்தோம்.
தற்போது ஆதரவின்றி தவித்து வருகிறோம். நான் பட்டப்படிப்பு முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளேன். ராணுவ வீரரான என் கணவர் கொலை செய்யப்பட்ட நிலையில் எனக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதே போல பிரபுவின் அண்ணன் பிரபாகரனின் மனைவி அளித்துள்ள மனுவில், எலும்பு முறிவுடன் சிகிச்சை பெற்று வரும் என் கணவர் ராணுவ பணிக்கு செல்லமுடியாத சூழலில் பட்டப்படிப்பு முடித்துள்ள எனக்கு கருணை அடிப்படையில் ஏதேனும் பணி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.






