என் மலர்
கிருஷ்ணகிரி
- கருமாரியம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணகிரி சிப்காட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- அவர்கள் விட்டு சென்ற 4 இரு சக்கர வாகனங்கள், 7 செல்போன்கள், ரூ.8,010 பணம் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி அருகே உள்ள கருமாரியம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணகிரி சிப்காட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் சூதாடிய முனி வெங்கடப்பா (52), கோவிந்தராஜ் (52), சூரிய நாராயணன் (53), சீதைய்யன் (54), அரியப்பா (40), ஷங்கர் (36), பாபு (42), விஜய் (53)ஆகிய 8 பேர் போலீசை கண்டதும் தப்பி ஓடினர்.
அப்போது அவர்கள் விட்டு சென்ற 4 இரு சக்கர வாகனங்கள், 7 செல்போன்கள், ரூ.8,010 பணம் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கிருஷ்ணகிரி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரை தேடி வருகின்றனர்.
- எந்திரம் நிறுவப்பட்டு, 2 நாட்கள் மட்டுமே செயல்பட்ட இந்த தானியங்கி இயந்திரம், தற்போது செயல்படவில்லை.
- எந்திரத்தை நாடிச் செல்வதையும், ஆனால் பைகள் இல்லாததால் ஏமாற்றமடைந்து நெகிழிப்பை தேடி அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஓசூர்,
தமிழ்நாடு முதலமைச்சரின் கனவு திட்டமான மஞ்சள் பை திட்டத்தின் கீழ், ஓசூர் உழவர் சந்தையில் மஞ்சள் பை வழங்கும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இது ஓசூர் மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனத்தின் சி.எஸ்ஆர்.நிதி ஒதுக்கீடு மூலம் செயல்பட வேண்டும்.
இந்த நிலையில், எந்திரம் நிறுவப்பட்டு, 2 நாட்கள் மட்டுமே செயல்பட்ட இந்த தானியங்கி இயந்திரம், மேற்கொண்டு புதிய பைகள் நிரப்பப்படாததால் பொதுமக்களுக்கு பயனற்ற நிலையில் இருப்பதுடன், ஓசூர் உழவர் சந்தையின் மின்சாரத்தை மட்டும் செலவழித்துக்கொண்டு இடத்தையும் அடைத்து நிற்பதாக பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
உழவர் சந்தைக்கு வரும் பொது மக்கள் பலர், மஞ்சள் பையை பெற அந்த எந்திரத்தை நாடிச் செல்வதையும், ஆனால் பைகள் இல்லாததால் ஏமாற்றமடைந்து நெகிழிப்பை தேடி அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர்கள் மஞ்சுநாதன், பட்டு அன்புக்கரசன் மற்றும் போலீசார் சகிதம் தனிப்படை அமைக்கப்பட்டு வாகன தணிக்கை செய்தனர்.
- வழிப்பறி செய்த கொள்ளையர்கள் ஓசூர் அருகே பேட்ரப்பள்ளியை சேர்ந்த ஈஸ்வரன், அபு, பரத் தனுஷ், கிரன்குமார், தினேஷ், ஆகாஷ்ராஜு, கணேஷ் மற்றும் சக்திகுமார் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
ஓசூர்:
கடந்த 3 மாதங்களாக ஓசூர் சிப்காட் மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் கம்பெனிக்கு வேலைக்கு செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களை வழிப்பறி செய்த கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் உத்தரவுப்படி ஓசூர் டி.எஸ்.பி. பாபுபிரசாந்த் மேற்பார்வையில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்ரி, தலைமையில் சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர்கள் மஞ்சுநாதன், பட்டு அன்புக்கரசன் மற்றும் போலீசார் சகிதம் தனிப்படை அமைக்கப்பட்டு வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது வழிப்பறி செய்த கொள்ளையர்கள் ஓசூர் அருகே பேட்ரப்பள்ளியை சேர்ந்த ஈஸ்வரன், அபு, பரத் தனுஷ், கிரன்குமார், தினேஷ், ஆகாஷ்ராஜு, கணேஷ் மற்றும் சக்திகுமார் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்து சுமார் 32 செல்போன்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
- கடந்த, 2006-க்கு முன் ராணுவத்தில் ஓய்வு பெற்ற ஜூனியர் கமிஷன் அலுவலர்களுக்கு இந்த பென்ஷன் சலுகைகள் கிடைப்பதில்லை.
- முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் நிலுவைத்தொகையையும் ஒரே தவணையாக வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் கூட்டமைப்பினர் கேப்டன் கிருஷ்ணன் தலைமையில், கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் இந்திய ராணுவத்தில் சேவை புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்காக மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதில், நாடு முழுவதும், 32 லட்சம் பேர் பயன் பெறுகிறார்கள். இதில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அட்டவணை, ஏழு, எட்டு பத்திகளில் தளர்வுகள் அளித்து அனைத்து ஓய்வூதி யர்களையும் ஒன்றாக பார்க்க வேண்டும். மேலும் ராணுவ சேவை ஊதியமானது அதிகாரிகள், அலுவலர்கள், வீரர்க்களுக்கு வழங்குவதில் மாறுபாடு உள்ளது இதையும் நீக்க வேண்டும். பணியில் காயமடைந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் மற்றவர்களை போல் பென்ஷன் வழங்க வேண்டும். முன்னாள் படைவீரர்கள் இறந்த நிலையில் வழங்கப்படும் விதவை பென்ஷனில், அடிப்படை ஊதியத்தில், 60 சதவீதம் வழங்க வேண்டும். கடந்த, 2006-க்கு முன் ராணுவத்தில் ஓய்வு பெற்ற ஜூனியர் கமிஷன் அலுவலர்களுக்கு இந்த பென்ஷன் சலுகைகள் கிடைப்பதில்லை. மேலும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் நிலுவைத்தொகையையும் ஒரே தவணையாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அப்போது முன்னாள் படைவீரர்கள் கூட்டமைப்பை சேர்ந்த பிரகாஷ், மாதவன், ஆறுமுகம், சுபேதார் சடகோபன் உள்பட பலர் உடனிருந்தனர்.
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் புதிய தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
- டி.மதியழகன் தலைமை தாங்கி, புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
தமிழக முதல்- அமைச்சரும், தி.மு.க., தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தி.மு.க.,வில் புதிய உறுப்பினர்களை சேர்க்க கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் புதிய தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
கிருஷ்ணகிரி தேவராஜா தொழிற்சாலை வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் தலைமை தாங்கி, புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் கிருஷ்ணகிரி டாக்டர் விஜய், பர்கூர் அரியப்பன், ஊத்தங்கரை டாக்டர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர செயலாளர் நவாப், தலைமை செயற்குழு உறுப்பினரும், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவருமான பரிதா நவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், பேரூராட்சி தலைவர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் 16-வது வார்டுக்குட்பட்ட அரசனட்டியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது.,
மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். ஓசூர் மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா, ஓசூர் தொகுதி பொறுப்பாளரும், கொள்கைபரப்பு குழு துணை செயலாளருமான வேலூர் ரமேஷ், மாவட்ட துணைசெயலாளர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கிரீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, பொதுக்குழு உறுப்பினர் முனிராஜ், பகுதி செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக, மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். முடிவில், மாநகராட்சி 2-வது மண்டலக்குழு தலைவர் காந்திமதி கண்ணன் நன்றி கூறினார்.
நல்லம்பள்ளி
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தி.மு.க. மத்திய ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தருமபுரி தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.
தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் ஏ.கே தருண் முன்னிலை வகித்தார். நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய செயலாளர் மல்லமுத்து ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் திறளாக கலந்து கொண்டனர்.
- இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- முரளி இரும்பு கம்பியால் முரளி கிருஷ்ணனை தலையில் தாக்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சபரணப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன். வயது 24. பெயிண்டர்.
அதே பகுதியை சேர்ந்த அவருடைய உறவினர் முரளி. இவர் மரவேலை செய்து வருகிறார். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி முரளி கிருஷ்ணனுக்கும், முரளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி வாலிபால் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் முரளி இரும்பு கம்பியால் முரளி கிருஷ்ணனை தலையில் தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம்ட பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து முரளி–கிருஷ்ணன் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் முரளியை கைது செய்தனர்.
- பல முறை மனு பல்வேறு அலுவலகங்களில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
- எங்கள் கோரிக்கை நிறை வேற்றப்படாவிட்டால், நாங்கள் சாலைமறியலில் ஈடுபடுவோம்
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா பழைய மத்திகிரி, 44-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில், 60-க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று ஓசூர் சப்- கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, சப்- கலெக்டர் சரண்யாவிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.
அதில், ஏழைகளாகிய நாங்கள் வீடுகளில் வேலை செய்து ,நீண்ட காலமாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். தற்போது எங்கள் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இதனை வசதி படைத்தவர்களுக்கே வழங்கப்படுவதாக அறிந்தோம். ஏழைகளாகிய எங்களின் கோரிக்கையை பரிசீலித்து ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இவ்வாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பின்னர், அங்கு வந்திருந்த பெண்களின் பிரதிநிதிகள் நிருபர்களிடம் கூறுகையில், இலவச வீட்டு மனை பட்டாவிற்காக, நாங்கள் பல முறை மனு பல்வேறு அலுவலகங்களில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எங்கள் கோரிக்கை நிறை வேற்றப்படாவிட்டால், நாங்கள் சாலைமறியலில் ஈடுபடுவோம்". இவ்வாறு அவர்கள் நிருபர்களிடம் கூறினர்.
இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு, சப்- கலெக்டர் அலுவலகத்திற்கு பெண்கள் திரண்டு வந்ததால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- திருமணம் செய்ய அவரது பெற்ேறார்கள் பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் பெண் ஏதும் கிடைக்கவில்லை.
- மனவேதனை அடைந்த சூர்ய குமார் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி அபி (வயது 23).
இவருக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆன நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று அபி தனது கணவர் சீனிவாசனிடம வீட்டிற்கு வீட்டு செலவுக்காக பணம் கேட்டதால் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மணமுடைந்த அபி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கெலமங்கலம் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சூர்யகுமார் (24).
இவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்ேறார்கள் பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் பெண் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த சூர்ய குமார் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 5 நீர் உறிஞ்சு கிணறுகள் ஆற்றின் தரைமட்ட அளவு வரை முடிக்கப்பட்டுள்ளது.
- திறக்கப்பட உள்ள 500 கனஅடி தண்ணீரில் 200 கனஅடி பாசனத்திற்கும், மீதமுள்ள தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்படும்
கிருஷ்ணகிரி,
குடிநீர் திட்ட பணிகளுக்காக, கிருஷ்ணகிரி அணை நீர்இருப்பை 43 அடியாக குறைக்கப்பட உள்ளதாகவும், பாசனத்திற்கு தண்ணீர் தடையின்றி கிடைக்கும் என கிருஷ்ணகிரி அணை நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அறிவொளி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
குடிநீர் திட்டம்
வேப்பனப்பள்ளி ஒன்றியம் 15 ஊராட்சிகள், எண்ணேக்கொள்புதூர் மற்றும் 122 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆண்டு பராமரிப்பு செலவிற்காக ரூ.79 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இது குறைந்தபட்ச தேவை நிதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இத்திட்டத்தின் கீழ் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் தவளம் கிராமம் அருகே 6 நீர் உறிஞ்சு கிணறுகள் அமைக்கப்பட உள்ளது.
இதில், 5 நீர் உறிஞ்சு கிணறுகள் ஆற்றின் தரைமட்ட அளவு வரை முடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றின் தரை மட்டத்திற்கு மேல் 3.50 மீ உயரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிலுவையில் உள்ளது. இக்கிணறுகள் அமைக்கும் பணிகளுக்காக, அணையின் நீர்மட்டத்தை 43 அடியாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் கடிதம் அளித்துள்ளனர்.
நீர்இருப்பை குறைக்க அறிவுரை
இதுதொடர்பாக கலெக்டர் நீர்வளத்துறை அலுவலர்களுடன் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், நீர்இருப்பை குறைக்க அறிவுறுத்தி உள்ளார். இதனால் கிருஷ்ணகிரி அணையின் கீழ் முதல்போக பாசனத்திற்கும், குடிநீருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக கடந்த டிசம்பர் 24-ந் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது திறக்கப்பட உள்ள 500 கனஅடி தண்ணீரில் 200 கனஅடி பாசனத்திற்கும், மீதமுள்ள தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்படும். இந்த தண்ணீர் அணையின் கீழ் உள்ள பாரூர் முறைபாசனம் (42 ஏரிகளுக்கும்), ராமாபுரம், தளிஹள்ளி நேரடி பாசன கால்வாய் வழியாகவும் செல்லும். அதில் மீதமுள்ள தண்ணீர் ஈச்சம்பாடி அணைக்கு சென்றடையும்.
9 நாட்கள் திறக்கப்படும்
மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பணிகள் முடிந்த பிறகு, கெலவரப்பள்ளி அணையில் இருந்து கதவுகள் புனரமைப்பு பணிக்காக திறந்துவிடப்படும் தண்ணீரை, கிருஷ்ணகிரி அணையில் தேக்கி வைத்துக் கொள்ளலாம். எனவே குடிநீர் பணிக்காக கிருஷ்ணகிரி அணையில் இருந்து 43 அடிக்கு தண்ணீரை குறைக்க அரசாணை பெறப்படும் நாளில் இருந்து 9 நாட்களுக்குள் திறந்து விடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
52 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நேற்றைய நீர்மட்டம் 48.60 அடியாக உள்ளது.
- மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 347 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
- விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 347 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- குளத்தை சீரமைக்க அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை
- இந்த குளத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு செய்து தூர்வார துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை தேர்நிலைத் தெருவில் உள்ள நவநீத வேணுகோபால சாமி கோவில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணதேவராயர் கட்டியதாகும். இக்கோவிலுக்கு அருகில் மிகப்பெரிய தீர்த்தக்குளம் உள்ளது. இந்த ராயர் குளமானது பல ஆண்டுகளாக பராமரிப்பற்று, பாழடைந்து கிடப்பதோடு, தற்போது முழுவதுமாக சாக்கடை நீர் தேங்கி குட்டையாக மாறி மூடி அழிந்துவிடும் நிலையில் உள்ளது.
இறந்த விலங்குகளை குளத்தில் துாக்கி எறிவது தொடர்கதையாக உள்ளது. இக்குளத்தில் 2 பேர் விழுந்து இறந்துள்ளனர். குளம் முழுவதும் சாக்கடை கழிவுநீர் தேங்கி குப்பை கொட்டி நிரப்பி வருவதால் அருகில் வசிக்கும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் தொற்று நோய் ஏற்பட்டு வருகிறது. இந்த குளத்தையொட்டி உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். நீர் மேலாண்மைக்கு ஆதாராமாக விளங்கிய இந்த ராயர் குளம் தற்போது அனைத்து நீர்வழித்தடங்களும் அடைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த குளம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு 100 மீட்டர் தொலைவில் உள்ளது.இந்த குளத்தை சீரமைக்க அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த குளத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு செய்து தூர்வார துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கணவன்-மனைவி அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
- சங்கர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொைல செய்து கொண்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கொடமாண்டப்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்.
இவரது மகன் சங்கர் (வயது 42). இவரது மனைவி நதியா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி அடிக்கடி தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே குடும்பதகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த சங்கர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொைல செய்து கொண்டார். இதைபார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து கோவிந்தராஜ் மத்தூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






