என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேணுகோபால சாமி கோவில் குளத்தை தூர்வார வேண்டும்
    X

    வேணுகோபால சாமி கோவில் குளத்தை தூர்வார வேண்டும்

    • குளத்தை சீரமைக்க அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை
    • இந்த குளத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு செய்து தூர்வார துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதுப்பேட்டை தேர்நிலைத் தெருவில் உள்ள நவநீத வேணுகோபால சாமி கோவில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணதேவராயர் கட்டியதாகும். இக்கோவிலுக்கு அருகில் மிகப்பெரிய தீர்த்தக்குளம் உள்ளது. இந்த ராயர் குளமானது பல ஆண்டுகளாக பராமரிப்பற்று, பாழடைந்து கிடப்பதோடு, தற்போது முழுவதுமாக சாக்கடை நீர் தேங்கி குட்டையாக மாறி மூடி அழிந்துவிடும் நிலையில் உள்ளது.

    இறந்த விலங்குகளை குளத்தில் துாக்கி எறிவது தொடர்கதையாக உள்ளது. இக்குளத்தில் 2 பேர் விழுந்து இறந்துள்ளனர். குளம் முழுவதும் சாக்கடை கழிவுநீர் தேங்கி குப்பை கொட்டி நிரப்பி வருவதால் அருகில் வசிக்கும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் தொற்று நோய் ஏற்பட்டு வருகிறது. இந்த குளத்தையொட்டி உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். நீர் மேலாண்மைக்கு ஆதாராமாக விளங்கிய இந்த ராயர் குளம் தற்போது அனைத்து நீர்வழித்தடங்களும் அடைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த குளம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு 100 மீட்டர் தொலைவில் உள்ளது.இந்த குளத்தை சீரமைக்க அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த குளத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு செய்து தூர்வார துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×