என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெயிண்டரை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபர் கைது
- இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- முரளி இரும்பு கம்பியால் முரளி கிருஷ்ணனை தலையில் தாக்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சபரணப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன். வயது 24. பெயிண்டர்.
அதே பகுதியை சேர்ந்த அவருடைய உறவினர் முரளி. இவர் மரவேலை செய்து வருகிறார். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி முரளி கிருஷ்ணனுக்கும், முரளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி வாலிபால் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் முரளி இரும்பு கம்பியால் முரளி கிருஷ்ணனை தலையில் தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம்ட பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து முரளி–கிருஷ்ணன் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் முரளியை கைது செய்தனர்.
Next Story






