என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் உழவர் சந்தையில் பயனற்ற நிலையில் மஞ்சள்பை தானியங்கி எந்திரம்
- எந்திரம் நிறுவப்பட்டு, 2 நாட்கள் மட்டுமே செயல்பட்ட இந்த தானியங்கி இயந்திரம், தற்போது செயல்படவில்லை.
- எந்திரத்தை நாடிச் செல்வதையும், ஆனால் பைகள் இல்லாததால் ஏமாற்றமடைந்து நெகிழிப்பை தேடி அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஓசூர்,
தமிழ்நாடு முதலமைச்சரின் கனவு திட்டமான மஞ்சள் பை திட்டத்தின் கீழ், ஓசூர் உழவர் சந்தையில் மஞ்சள் பை வழங்கும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இது ஓசூர் மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனத்தின் சி.எஸ்ஆர்.நிதி ஒதுக்கீடு மூலம் செயல்பட வேண்டும்.
இந்த நிலையில், எந்திரம் நிறுவப்பட்டு, 2 நாட்கள் மட்டுமே செயல்பட்ட இந்த தானியங்கி இயந்திரம், மேற்கொண்டு புதிய பைகள் நிரப்பப்படாததால் பொதுமக்களுக்கு பயனற்ற நிலையில் இருப்பதுடன், ஓசூர் உழவர் சந்தையின் மின்சாரத்தை மட்டும் செலவழித்துக்கொண்டு இடத்தையும் அடைத்து நிற்பதாக பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
உழவர் சந்தைக்கு வரும் பொது மக்கள் பலர், மஞ்சள் பையை பெற அந்த எந்திரத்தை நாடிச் செல்வதையும், ஆனால் பைகள் இல்லாததால் ஏமாற்றமடைந்து நெகிழிப்பை தேடி அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






