சூதாடிய 8 பேர் மீது வழக்கு

கருமாரியம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணகிரி சிப்காட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அவர்கள் விட்டு சென்ற 4 இரு சக்கர வாகனங்கள், 7 செல்போன்கள், ரூ.8,010 பணம் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சூதாடிய 8 பேர் மீது வழக்கு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி அருகே உள்ள கருமாரியம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணகிரி சிப்காட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் சூதாடிய முனி வெங்கடப்பா (52), கோவிந்தராஜ் (52), சூரிய நாராயணன் (53), சீதைய்யன் (54), அரியப்பா (40), ஷங்கர் (36), பாபு (42), விஜய் (53)ஆகிய 8 பேர் போலீசை கண்டதும் தப்பி ஓடினர்.

அப்போது அவர்கள் விட்டு சென்ற 4 இரு சக்கர வாகனங்கள், 7 செல்போன்கள், ரூ.8,010 பணம் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com