என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் துண்டு, துண்டாக கிடந்தது.
    • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி சுப்ரமணிய நகரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் துண்டு, துண்டாக கிடந்தது.

    இது குறித்து அக்கம்பக்கத்தினர் உடனே சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் உடனே தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் முதியவர் ரெயில் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் சிக்கி இறந்தாரா? அல்லது வேறு யாராவது அவரை கொலை செய்து விட்டு உடலை தண்டவாளத்தில் வீசி சென்றனரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் ரெயில் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

    • குட்டப்பட்டி அருகே கடந்த 1-ந் தேதி இரவு நடந்து சென்று கொண்டிருந்தார்
    • மோட்டார்சைக்கிளில் நபர் மாது மீது மோதியதில் மாது சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே பன்னிஅள்ளி பக்கமுள்ள பன்னிஅள்ளிபுதூரை சேர்ந்தவர் மாது (வயது 50). விவசாயி. இவர் பாலக்கோடு காவேரிப்பட்டணம் சாலையில் குட்டப்பட்டி அருகே கடந்த 1-ந் தேதி இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நபர் மாது மீது மோதினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த மாது சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் மண்ண்ணெணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
    • மாதம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை பெங்காளி தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மாதம்மாள் (வயது 55). கடந்த 24-ந் தேதி இவர் வீட்டில் மண்எண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயம் அடைந்த மாதம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாதம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவண்ணாமலை பெங்களூரு சாலையில் ஆதவன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா பக்கிரிபாளையம் அருகே உள்ள பள்ளிப்பட்டி சாலையை சேர்ந்தவர் சென்ன கிருஷ்ணன். இவரது மகன் ஆதவன் (வயது 19). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் திருவண்ணாமலை பெங்களூரு சாலையில் அந்தேரிப்பட்டி பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அந்த நேரம் அவ்வழியாக சென்ற கார் ஆதவன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆதவன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பறக்கும் படை அதிகாரி தலைமையில், குழுவினர் பாகலூரில் சர்ஜாபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • லாரியை சோதனை செய்த போது 6 யூனிட் கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது

    ஓசூர்,

    விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் புவியியல் மற்றும் சுரங்க துறை உதவி பொறியாளரும், மண்டல பறக்கும் படை அதிகாரியுமான விஜயலட்சுமி தலைமையில், குழுவினர் நேற்று முனதினம் பாகலூரில் சர்ஜாபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்த போது அதில் 6 யூனிட் கற்கள் அனுமதியின்றி கடத்தி வந்தது தெரிய வந்தது-. இது குறித்து அதிகாரி விஜயலட்சுமி, பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் கனிமொழி வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கந்திகுப்பம் போலீசார் மற்றும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அரசு அனுமதி இன்றி இரண்டு யூனிட் கற்கள் கடத்திச் செல்வது தெரிய வந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆலப்பட்டி மற்றும் கந்திகுப்பம் பகுதிகளில் கிருஷ்ணகிரி மற்றும் கந்திகுப்பம் போலீசார் மற்றும் கனிம வளங்கள் துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரி என்னைக்கோள்புதூர் மற்றும் பசவண்ண கோயில் அருகே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அரசு அனுமதி இன்றி திருட்டுத்தனமாக தலா இரண்டு யூனிட் கற்கள் கடத்திச் செல்வது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.

    • ஷியாமும், வேலாயுதமும் மோட்டார் சைக்கிளில் வேலூர்- சேலம் நெடுஞ்சாலையில் சென்றனர்.
    • லாரி மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியதில் ஷியாம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர். இவரது மகன் ஷியாம்(வயது 17). இவர் ஈரோட்டில் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 3-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி முடித்து விட்டு நேற்று தான் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.

    இந்த நிலையில் ஷியாமும் அவருடைய நண்பர் வேலாயுதமும் (19) மோட்டார் சைக்கிளில் வேலூர்- சேலம் நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது ஊத்தங்கரை தனியார் பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்னால் சென்றது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஷியாம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த வேலாயுதத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷியாமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    • இவரது 3 மாடுகள் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்தது.
    • சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து 3 மாடுகள் இறந்து விட்டது

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கொட்டுகாரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது63). விவசாயியான இவர் மாடுகள் வளர்ந்து வந்தார்.

    இவரது 3 மாடுகள் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்தது. பின்னர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து 3 மாடுகள் இறந்து விட்டது.

    இது தொடர்பாக ஜெய ராமன் சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் தொட்டில் விஷம் கலந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் ஊத்தங்கரை கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக் கப்பட்டு மூன்று மாடுகளையும் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து பின்பு அவரது விவசாய நிலத்தில் அடக்கம் செய்தனர். இச்ச சம்பவத்தால் விவசாயி ஜெயராமனுக்கு சுமார் ஒரு லட்சம் நட்டம் ஏற்பட்டு உள்ளதாகவும் தண்ணீரில் விஷம் கலந்த மர்மநபர்களை கைது செய்ய வேண்டும் என விவசாயி ஜெயராமன் கோரிக்கை வைத்துள்ளார்.

    • கிருஷ்ணகிரியில் முதல் நாள் பத்தாம் வகுப்பு மொழித்தேர்வில், 26 ஆயிரத்து, 308 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். 1,075 பேர் தேர்வு எழுதவில்லை.
    • முதல் நாள் தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு மலர் கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்று தேர்வறைக்கு அனுப்பினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நேற்று தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் கல்வி மாவட்டங்களை சேர்ந்த, 415 பள்ளிகளை சேர்ந்த, 27 ஆயிரத்து, 383 மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதில், 346 மாற்றுத்திறனாளி மாணவர்களும் அடங்குவர்.

    நடந்து முடிந்த பிளஸ்- 2 தேர்வில் அதிகப்படியான மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இதையடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்களில் அதிக நாட்கள் பள்ளிக்கு வராமல் இருந்த மாணவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்தது.

    இதில், மாவட்டம் முழுவதும், 1,384 மாணவ, மாணவியர் பள்ளிக்கு அதிக நாட்கள் விடுமுறை எடுத்தது தெரிந்தது.

    இதையடுத்து மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமைசிரியர்களுக்கும், மாணவர்களின் பெற்றோ ர்களுக்கும் தகவல் அளித்து மாணவ ர்களை தேர்வு எழுத அறிவுறுத்தினர்.

    இதையடுத்து நேற்று நடந்த முதல் நாள் பத்தாம் வகுப்பு மொழித்தேர்வில், 26 ஆயிரத்து, 308 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். 1,075 பேர் தேர்வு எழுதவில்லை.

    இதில் அதிக விடுமுறை எடுத்த, 1,384 மாணவ, மாணவியரில், 309 பேர் நேற்றைய தேர்வில் கலந்து கொண்டனர். இது தவிர பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள், 430 பேரில், 377 பேர் தேர்வு எழுதினர். 53 பேர் தேர்வு எழுதவில்லை.

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பொதுத் தேர்வை, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உடன் இருந்தார்.

    கிருஷ்ணகிரியில் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் நாள் தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு மலர் கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்று தேர்வறைக்கு அனுப்பினார்கள்.

    தருமபுரி

    தருமபுரி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியதை முன்னிட்டு. மாவட்ட கலெக்டர் சாந்தி இலக்கியம்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்வினை 218 அரசுப்பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் நலப்பள்ளி, 5 உண்டி, உறைவிட பள்ளி, 1 சமூக நலத்துறையின் பள்ளி, 16 சுய நிதி பள்ளிகள் மற்றும் 85 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 332 பள்ளிகளை சேர்ந்த 12,528 மாணவர்களும்,

    11.223 மாணவியர்களும் என மொத்தம் 23751 மாணவ, மாணவியர்களும், 921 தனித்தேர்வர்களும் ஆக மொத்தம் 23788 மாணவ, மாணவியர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதுகின்றனர். நேற்று நடைபெற்ற தேர்வில் 901 பேர் தேர்வு எழுதவரவில்லை.

    • மாணவர் சேர்க்கைக்கு, தகுதித்தேர்வு வருகிற ஜூன் மாதம் 3ம் தேதியன்று சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற உள்ளது.
    • தகுதியும், விருப்பமும் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கிருஷ்ணகிரி,

    இந்திய ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கான தகுதித்தேர்வு வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி நடைபெறும் என கிருஷ்ணகிரி கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன் ராணுவ கல்லூரியில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் 8-ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு, தகுதித்தேர்வு வருகிற ஜூன் மாதம் 3ம் தேதியன்று சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற உள்ளது.

    இந்த தேர்விற்கான விண்ணப்ப படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய அமர்விற்கான வினாத்தாள் தொகுப்பை ராஷ்டிரிய இந்தியன் ராணுவ கல்லூரியின் இணையதளம் மூலமாக பொதுப்பிரிவினர்கள் ரூ.600-ம், எஸ்சி., எஸ்டி பிரிவினர் ரூ.555-ம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் 1.1.2024-ம் தேதியன்று 2.1.2011-க்கு முன்னதாகவும், 1.7.2012-க்கு பிறகும் பிறந்திருக்க கூடாது.

    ராணுவ கல்லூரியில் அனுமதிக்கும் போது, அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவும், அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வு கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோவாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை-600 003. என்ற முகவரிக்கு வரும் 15-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்று சேர வேண்டும்.

    தகுதியும், விருப்பமும் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், விவரங்கள் அறிந்திட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04343-236134 வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கே.பி. முனுசாமி தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
    • கூட்டுறவு வங்கி தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    காவேரிப்பட்டணம்,

    கோடை வெயிலின் தாகத்தை தணிக்க கிருஷ்ண கிரி மாவட்டம், காவேரிப் பட்டினம் மேற்கு ஒன்றியம், நகர அ.தி.மு.க. சார்பில் காவேரிப்பட்டினம்- பாலக்கோடு பிரிவு சாலை மற்றும் காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. துணை பொது செயலாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. முனுசாமி தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக் குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சமரசம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி. எம். சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், நகர செயலாளர் விமல், முன்னாள் நகர செயலாளர் வாசுதேவன், மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம்குமார், அபிராமி மதனகோபால், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ,கூட்டுறவு வங்கி தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
    • கலை நிகழ்சியில் பங்குபெற்ற மாணவ, மாணவி களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்சி பேசினார்கள்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கல்வி மாவட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் கோவிந்தப்பா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணப்பா அனைவரையும் வரவேற்று பேசினார். பட்டதாரி ஆசிரியர் மகாதேவன் பள்ளி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக ஒசூர் கல்வி மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் முனிராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் வேதா, கிருஷ்ணதேஜஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு கலை நிகழ்சியில் பங்குபெற்ற மாணவ, மாணவி களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்சி பேசினார்கள்.

    நிகழ்சியில் பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், இருபால் ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டார்கள்.

    ×