என் மலர்
நீங்கள் தேடியது "தேர்வு எழுதவில்லை"
- கிருஷ்ணகிரியில் முதல் நாள் பத்தாம் வகுப்பு மொழித்தேர்வில், 26 ஆயிரத்து, 308 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். 1,075 பேர் தேர்வு எழுதவில்லை.
- முதல் நாள் தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு மலர் கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்று தேர்வறைக்கு அனுப்பினார்கள்.
கிருஷ்ணகிரி,
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நேற்று தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் கல்வி மாவட்டங்களை சேர்ந்த, 415 பள்ளிகளை சேர்ந்த, 27 ஆயிரத்து, 383 மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதில், 346 மாற்றுத்திறனாளி மாணவர்களும் அடங்குவர்.
நடந்து முடிந்த பிளஸ்- 2 தேர்வில் அதிகப்படியான மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இதையடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்களில் அதிக நாட்கள் பள்ளிக்கு வராமல் இருந்த மாணவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்தது.
இதில், மாவட்டம் முழுவதும், 1,384 மாணவ, மாணவியர் பள்ளிக்கு அதிக நாட்கள் விடுமுறை எடுத்தது தெரிந்தது.
இதையடுத்து மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமைசிரியர்களுக்கும், மாணவர்களின் பெற்றோ ர்களுக்கும் தகவல் அளித்து மாணவ ர்களை தேர்வு எழுத அறிவுறுத்தினர்.
இதையடுத்து நேற்று நடந்த முதல் நாள் பத்தாம் வகுப்பு மொழித்தேர்வில், 26 ஆயிரத்து, 308 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். 1,075 பேர் தேர்வு எழுதவில்லை.
இதில் அதிக விடுமுறை எடுத்த, 1,384 மாணவ, மாணவியரில், 309 பேர் நேற்றைய தேர்வில் கலந்து கொண்டனர். இது தவிர பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள், 430 பேரில், 377 பேர் தேர்வு எழுதினர். 53 பேர் தேர்வு எழுதவில்லை.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பொதுத் தேர்வை, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உடன் இருந்தார்.
கிருஷ்ணகிரியில் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் நாள் தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு மலர் கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்று தேர்வறைக்கு அனுப்பினார்கள்.
தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியதை முன்னிட்டு. மாவட்ட கலெக்டர் சாந்தி இலக்கியம்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்வினை 218 அரசுப்பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் நலப்பள்ளி, 5 உண்டி, உறைவிட பள்ளி, 1 சமூக நலத்துறையின் பள்ளி, 16 சுய நிதி பள்ளிகள் மற்றும் 85 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 332 பள்ளிகளை சேர்ந்த 12,528 மாணவர்களும்,
11.223 மாணவியர்களும் என மொத்தம் 23751 மாணவ, மாணவியர்களும், 921 தனித்தேர்வர்களும் ஆக மொத்தம் 23788 மாணவ, மாணவியர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதுகின்றனர். நேற்று நடைபெற்ற தேர்வில் 901 பேர் தேர்வு எழுதவரவில்லை.






