என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • புத்தக வாசிப்பின் மூலம் உங்களின் அறிவுத்திறனை மேம்படுத்திட வேண்டும்.
    • இச்சமுதாயத்தின் சிறந்த மாணவர்களாக திகழ்ந்து பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    ஐ.வி.டி.பி தன்னார்வத் தொண்டு நிறுவனம், தன்னலமற்ற சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு ஏழை, எளிய மகளிரை மட்டுமில்லாமல், பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதிலும் பெரும் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    அவ்வகையில் திருப்பத்தூரில் கல்விப் பணியில் சிறப்புறச் செயல்பட்டு வரும் தூய நெஞ்சக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியரின் வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில்,

    நூலகத்திற்கு ரூ.2.53 லட்சம் மதிப்பில் கூடுதல் புத்தகங்கள் மற்றும் அக்கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு மற்றும் முதுகலை இரண்டாமாண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ.1.65 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் என ரூ.4.18 லட்சம் மதிப்பிலான புத்தகங்கைைள ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

    புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி பேசிய ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் "புத்தகங்கள் வெறும் காகிதங்கள் அல்ல, அவை உங்கள் வாழ்க்கையை மாற்றும் தந்திரங்கள்". ஆகவே புத்தக வாசிப்பின் மூலம் உங்களின் அறிவுத்திறனை மேம்படுத்தி, இச்சமுதாயத்தின் சிறந்த மாணவர்களாக திகழ்ந்து பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தியதுடன், இதுவரை இக்கல்லூரியின் கல்விப் பணிகளுக்காக ஐ.வி.டி.பி நிறுவனம் ரூ.1 கோடியே 21 லட்சம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    • கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை 100 மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
    • ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவ முகாம் நடைபெறும்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை 100 மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

    இதையொட்டி, ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவ முகாம் நடைபெறும். இந்த முகாமினை, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா மற்றும் ஆணையாளர் சினேகா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    இதில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் சிகிச்சை பிரிவு ,காது, மூக்கு, தொண்டை பிரிவு, கண் நோய் பிரிவு, மனநல மருத்துவம், பல்நோய் பிரிவு, காச நோய், தொழுநோய் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும். மேலும், ஈசிஜி, எக்ஸ்ரே, ஸ்கேன், மற்றும் எக்கோ பரிசோதனையும் செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்". இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தி.மு.க.வின் 2 ஆண்டு ஆட்சியில் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.
    • தி.மு.க. அரசுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் பெரியமுத்தூர் ஊராட்சி துவாரகாபுரியில் நேற்று மாலை நடந்தது.

    இதற்கு கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சிவன் வரவேற்றார். நிர்வாகிகள் நாராயணன், ஜெயராமன், பழனி, கோபாலகிருஷ்ணன், நாராயணசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    அவர்கள் பேசும் போது, தி.மு.க.வின் 2 ஆண்டு ஆட்சியில் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி, பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், மலை கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் திட்டம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டம், மகளிருக்கு நகர பஸ்களில் இலவச பயண திட்டம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இந்த அரசுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    இதில் மாநில விவசாய துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் சாவித்திரி கடலரசு மூர்த்தி, கோவிந்தசாமி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், கவுன்சிலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பஸ் நிறுத்ததில் பஸ்சுக்காக காத்திருந்த மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • விஜயா கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அருகே வெண்ணாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவரது மனைவி விஜயா (வயது62). இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி-சென்னை பைபாஸ் சாலையில் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பஸ் நிறுத்தம் அருகே மெதுவாக வந்து விஜயா கையில் வைத்திருந்த பையை பறித்து சென்றனர். அப்போது அவர் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். அதற்குள் அந்த வாலிபர்கள் பையில் இருந்த நகையை மட்டும் எடுத்துகொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து விஜயா கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பஸ் நிறுத்ததில் பஸ்சுக்காக காத்திருந்த மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீசாருக்கு உடனே அங்கு வந்து சதீஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    சேலம் மாவட்டம் மேட்டூர் லக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ் (வயது 29). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி கொண்டப்பநாயன அள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அவர் நிறுவனத்தில் வேலைபார்க்கும்போது அங்குள்ள ஒரு மின்மோட்டாரை ஆன் செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்மீது மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த குருபரபள்ளி போலீசாருக்கு உடனே அங்கு வந்து சதீஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரி, தருமபுரி, ஓசூர் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன.
    • இன்று ஒரே நாளில் ரூ.6 முதல் 8 கோடி வரை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி:

    நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை 29-ந்தேதி முஸ்லிம் மக்களால் கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆடுகள் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக கொண்டு வரப்பட்டன.

    கிருஷ்ணகிரி, தருமபுரி, ஓசூர் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன.

    இன்று அதிகாலை 5 மணி முதல் சந்தையில் ஆடுகள் விற்பனை தொடங்கியது.

    கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கோலார் மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், சித்தூர் மற்றும் தமிழகத்தில் வேலூர், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.

    வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு, 12 ஆயிரம் ரூபாய் விலை போகும். ஆனால், பக்ரீத் பண்டிகை விற்பனை என்பதால் சற்று விலை அதிகரித்து, 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு, 15 ஆயிரம் முதல், 17 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது.

    குறைந்த பட்சம் ஒரு ஆடு 10 ஆயிரம் ரூபாய் முதல், அதிகபட்சமாக ஒரு ஆடு 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனை ஆனது.

    இன்று ஒரே நாளில் ரூ.6 முதல் 8 கோடி வரை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • 6 வயது சிறுமியை விளையாட அழைத்து செல்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தார்.
    • கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் கண்ணனை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த நெடுமருதி வீரோஜி ப்பள்ளியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 56). தொழிலாளி.

    இவர் கடந்த 10.2.2021 அன்று 6 வயது சிறுமியை விளையாட அழைத்து செல்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்தாள். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் கண்ணனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்ப ட்டது.

    இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுதா நேற்று தீர்ப்பு கூறினார்.

    அதன்படி குற்றம்சாட்ட ப்பட்ட கண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.

    • 20 நிமிடங்கள் கண்களை கட்டிக் கொண்டு சூரிய நமஸ்காரம் செய்து உலக சாதனை படைத்தனர்.
    • நிர்வாகி ராஜேஷ்குமார் பள்ளியை பாராட்டி, இயக்குனர் புவியரசனிடம் கோப்பையை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நாளந்தா சி.பி.எஸ்.இ. பள்ளியில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி மாணவர்கள் 350 பேர் ஒன்றிணைந்து 20 நிமிடங்கள் கண்களை கட்டிக் கொண்டு, ஏ.பி.ஜே. உலக சாதனை அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலையில் சூரிய நமஸ்காரம் செய்து உலக சாதனை படைத்தனர்.

    ஏ.பி.ஜே. உலக சாதனை அமைப்பின் நிர்வாகி ராஜேஷ்குமார் பள்ளியை பாராட்டி, இயக்குனர் புவியரசனிடம் கோப்பையை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யோகா ஆசிரியர் ரமேசிற்கும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சான்றி தழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏ.பி. அமைப்பு நிர்வாகி ராஜேஷ்குமார், பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீவரி, இயக்குனர்கள் கவுதமன், புவியரசன், பள்ளியின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • பொது இடத்தில் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டார்.
    • ரோந்து பணயில் ஈடுபட்டிருந்த போலீசார் சுதேசை கைது செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அருந்ததி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்.

    இவரது மகன் சுதேஷ் (வயது 21). இவர் மத்தூர் பேருந்து நிலையம் அருகே பொது இடத்தில் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் ரோந்து பணயில் ஈடுபட்டிருந்த போலீசார் சுதேசை கைது செய்தனர்.

    இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூக்கில் ரத்தத்துடன் பலத்த காயமடைந்து இறந்து கிடந்தார்.
    • கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள பேவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தம்பிதுரை.இவரது மகள் மேதாவினி (வயது22). கடந்த 21 -ஆம் தேதி பேவநத்தம் கிராமம் அருகே மேதாவினி வாய், மூக்கில் ரத்தத்துடன் பலத்த காயமடைந்து மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து அந்த சாலை வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கல்லூரி முதல்வர் திருமால்முருகன் சிறப்புரையாற்றினார்.
    • பேராசிரியர் சுமதி சிறப்பு யோகாசனங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாத்துறை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக யோகா தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இவ்விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது.

    இவ்விழாவில் கல்லூரி முதல்வர் திருமால்முருகன் சிறப்புரையாற்றினார்.செயலர் ஷோபா தலைமையுரை ஆற்றினார்.

    மேலும் தமது தலைமையுரையில், மாணவர்கள் தினமும் யோகா செய்வதன் மூலம் மனவலிமை மற்றும் உடல்நலம் பெற முடியும் என்பதை அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்வில் மாணவர் களும் பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

    யோகாத்துறை பேராசிரியர் சுமதி பெண்களுன சிறப்பு யோகாசனங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கினார்.

    ஆயுட்காலத்தை நீடிக்கும் உணவுமுறைகள் மற்றும் முத்திரை பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    தாவரவியல் துறை தலைவர் மஞ்சுளா நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சி அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையாக அமைந்தது. இவ்விழாவானது இனிதே நாட்டுப் பண்ணுடன் நிறைவுற்றது.

    • ஜிட்டாண்டஅள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • அந்த வழியாக வந்த மற்றொரு வாகனம் இவர் மீது மோதியது.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்துள்ள கருவட்டனூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது37). இவர் கூல்ரிங்ஸ் ஏஜென்சி நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள ஜிட்டாண்டஅள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு வாகனம் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பழனி உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×