என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.4.18 லட்சம் மதிப்பில் புத்தகங்கள்
    X

    திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.4.18 லட்சம் மதிப்பில் புத்தகங்கள்

    • புத்தக வாசிப்பின் மூலம் உங்களின் அறிவுத்திறனை மேம்படுத்திட வேண்டும்.
    • இச்சமுதாயத்தின் சிறந்த மாணவர்களாக திகழ்ந்து பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    ஐ.வி.டி.பி தன்னார்வத் தொண்டு நிறுவனம், தன்னலமற்ற சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு ஏழை, எளிய மகளிரை மட்டுமில்லாமல், பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதிலும் பெரும் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    அவ்வகையில் திருப்பத்தூரில் கல்விப் பணியில் சிறப்புறச் செயல்பட்டு வரும் தூய நெஞ்சக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியரின் வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில்,

    நூலகத்திற்கு ரூ.2.53 லட்சம் மதிப்பில் கூடுதல் புத்தகங்கள் மற்றும் அக்கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு மற்றும் முதுகலை இரண்டாமாண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ.1.65 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் என ரூ.4.18 லட்சம் மதிப்பிலான புத்தகங்கைைள ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

    புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி பேசிய ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் "புத்தகங்கள் வெறும் காகிதங்கள் அல்ல, அவை உங்கள் வாழ்க்கையை மாற்றும் தந்திரங்கள்". ஆகவே புத்தக வாசிப்பின் மூலம் உங்களின் அறிவுத்திறனை மேம்படுத்தி, இச்சமுதாயத்தின் சிறந்த மாணவர்களாக திகழ்ந்து பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தியதுடன், இதுவரை இக்கல்லூரியின் கல்விப் பணிகளுக்காக ஐ.வி.டி.பி நிறுவனம் ரூ.1 கோடியே 21 லட்சம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    Next Story
    ×